சட்டமன்றத் துணைத் தலைவர் பதவிமீது டிஏபி-க்கு ஏன் இத்தனை மோகம்? கெராக்கான் கண்டனம்

yongசட்டமன்றத்  தலைவர்  பதவி  வேண்டும்  என்று  பிடிவாதம்  பிடிக்கும் டிஏபி- யை சிலாங்கூர்  கெராக்கான்  சாடியுள்ளது.

சிலாங்கூர்  சட்டமன்றத்தில்  இரண்டாவது  துணைத்  தலைவர்  பதவி  உருவாக்கப்பட்டு  அது  டிஏபி-க்குக்  கொடுக்கப்பட  வேண்டும்  என்று சிலாங்கூர்  டிஏபி  தலைவர்  டோனி  புவா  கோரிக்கை  விடுத்திருப்பதை  சிலாங்கூர்  கெராக்கான்  செயலாளர்  எண்டி  யோங்  கண்டித்தார்.

“புவாவின்  கோரிக்கை  அரசமைப்புக்கு  விரோதமானது. அரசியல்  ஆதரவு கொடுப்பதற்காக  வழங்கப்படும்  கிண்ணமாகவோ  வெகுமதியாகவோ  சட்டமன்றத்  துணைத்தலைவர்  பதவியைக்  கருதுவது  தவறு”, என  யோங்  கூறினார்.

புவாவின்  கோரிக்கை  அவர்  மாநில  அரசியலமைப்பை  அலட்சியப்படுத்துவதைக்  காண்பிக்கிறது  என்றாரவர்.