அரசியல் கட்சிகளில் ஊழல் மலிந்து வருவதாகச் சொல்லி வருத்தப்படும் டாக்டர் மகாதிர் முகம்மட், இப்போது பணம் பண்ணுவதில்தான் குறியாக இருக்கிறார்கள் என்றார்.
அரசியல் என்றால் நல்ல நோக்கங்களுக்காக போராடுவது என்பதெல்லாம் இப்போதெல்லாம் கிடையாது என்று கூறிய முன்னாள் பிரதமர், குத்தகையைப் பெறுவதிலும் மற்றவற்றிலும்தான் முனைப்புக் காட்டுகிறார்கள் என்றார்.
“என்னுடைய காலத்திலும் ஊழல் இருந்தது. ஊழல் அரசாங்கம், தனியார் துறை என எல்லா இடங்களிலுமே உள்ளது.
“ஆனால், அண்மைக் காலமாக அரசியல் கட்சிகள் ஊழல் மிக்கவையாக மாறிவிட்டன. அரசியல்வாதியானால் அல்லது ஒரு அரசியல் கட்சி, அதுவும் ஆளும் கட்சித் தலைவரானால் பணம் பண்ண நிறைய வாய்ப்புகள் உண்டு என்ற நினைப்புத்தான் இதற்குக் காரணமாகும்”, என சினார் ஹரியானிடம் மகாதிர் கூறினார்.
காட்டுல பன்றி வேட்டைக்கு போனால் வேட்டை நாய்களை மோப்பம் எடுக்க அழைத்து போவது வழக்கம். இந்த வேட்டை நாய்கள் ஏற்கனவே வேட்டை ஆடிய மூத்த வேட்டை நாய்களிடம் பண்டியை வேட்டை ஆட பழகி இருக்கும். வேட்டைக்காரன் நாய்களின் திறமைகளுக்கு ஏற்ப காட்டின் ஊடே அனுப்பி நாய்கள் பண்டிகளை இவர்கள் இருக்கும் பக்கம் விரட்டி வரும். வேட்டை காரர்கள் மறைந்து ஒரு பண்டியை ஈட்டியிலோ துப்பாக்கியிலோ தாக்குவார்கள். பயந்து ஓடிவந்த பண்டி அடிப்பட்டதும் நாய்களை கிட்ட ஒட்ட விடாமல் கட்டி விட்டு பண்டியை முழுசா கொன்று கால்களை கட்டி இடையில் முரட்டு கம்பை சொருகி இரண்டு சைக்கிள்களில் சவாரி செய்து வருவார்கள். அந்த வேட்டை நாய்கள் மீண்டும் இவர்கள் பின்னால் ஓடி வரும். பிறகு இறச்சி கூறு போட்டு விற்ற பின் வேட்டை காரர் வீட்டிலும் சமையல் நடக்கும். வீட்டில் எல்லோரும் சாப்பிட்ட பிறகு அந்த நாய்களுக்கு சப்பிய எலும்புகள்தாம் கிடைக்கும். அதுக்கு அவைகள் உண்மையிலேயே சண்டை போடும். பார்த்தீர்களா வேட்டை காரன் விபரீத விளையாட்டை அதுபோல உள்ளது தாத்தாவின் கதை.
மலேசியாவின் தத்துவ தாத்தா சொல்கிறார் கேட்டுக் கொள்ளுங்கள்.இவனும் இவனது கூட்டமும் அடித்த கொல்லைக்கு அளவே இல்லை.
Pon Rangan அவர்களே மரியாதைக்கூரிய மகாதிரை …………..சொல்லுவதா ??
தலைவா! உங்களையும் அண்ணன் சாமிவேலுவையும் நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது! கறைபடாத காமராஜர் கைகள்!
உலக மகா உத்தமப்புத்திரன் சொல்லிட்டாருங்கோ…ஐயா தாத்தாகிர் அவர்களே…உண்மையிலேயே உமக்கு தில் இருக்குமானால் பிரதமர் ஆகும் முன்பு எவ்வளவு (பணம், நிலம், சொத்து, ஸ்விஸ் வங்கிக் கணக்கு) என்பதையும் இப்போ எவ்வளவு இருக்கிறது என்பதையும் மக்களுக்கு வெட்ட வெளிச்சமாக சொல்ல முடியுமா? ஊழல் இல்லாமல் நீர் அவரை சேர்த்திருந்தால் அப்ப ஒத்துக்கலாம் நீரே உலக மகா யோக்கியன் அப்டின்னு.. என்ன? இந்த நீங்க டீலுக்கு ரெடியா?
அயோ இந்த கொசு தொல்ல தாங்கல .
நிலயற்ற நிலையில் நாடு செல்வதற்கு உங்கள் அதிகார துச் பிரயோகம்தான் காரணம்.இன்று மற்றவர்களை குறை சொல்ல உங்களுக்கு அருகதை இல்லை.இன வேறுபாடு உருவாக்கத்தின் தலைவன் நீ. இறுதி நாளில் துங்கு கூறிய வார்த்தை கொடும்பாவியிடம் நாட்டை ஒப்படைத்து விட்டேனே என்றுதான். அன்று துங்கு இறுதியாக கூறிய கருத்து இன்று நாட்டின் அடையாளம்.
ஆரம்பித்து வைத்தவனே இவன்தான்— இப்போது நல்ல பிள்ளைபோல் நாடகம்.
ஒரு காக்கா மற்றொரு காக்காவை பார்த்து நீ கருப்பு என்று கூறிய கதையாகி விட்டது நமது மாமா மகாதீருக்கு !
ஒன்னு சொன்னாலும் அதை நச்சின்னு சொல்லணும். இப்படிதான் இருக்கின்றது பொன் ரங்கரின் கருத்து.
மகாதீர் கச்சான் சாப்பிட வந்தான் போலும் நண்டு பையன்டா இந்த காக்கா