முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் தாம் பதவியில் இருந்தபோது தம்மைக் குறைகூறியவர்கள்மீது சட்ட நடவடிக்கை மேற்கொண்டதில்லை என்றார்.
“நீதிமன்றம் போனதில்லை. (குறைகூறுவோருக்கு) பதில் சொல்வேன்.
“நான் காரியங்களைச் சரியாகச் செய்திருந்தால் எதற்காக பயப்பட வேண்டும்?”, என்றவர் வினவினார்.
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், எதிரணி எம்பிகள் டோனி புவா-வுக்கும் ரபிஸி ரம்பி-க்கும் எதிராக சட்ட அறிவிக்கைகள் அனுப்பியிருப்பது பற்றிக் கருத்துரைத்தபோது மகாதிர் இவ்வாறு கூறினார்.
என்றாலும், சட்ட நடவடிக்கை எடுப்பது நஜிப்பின் உரிமை.
“ஆனாலும், அரசியல்வாதிகள் சாடப்படுவது, குறைகூறப்படுவது, அவதூறு கூறப்படுவது எல்லாம் சகஜம்தான்”, என மகாதிர் குறிப்பிட்டார்.
குறைகூறல் சக + ஜம் என்றால் சமஸ்கிருதத்தில் குறைகூறல் தானாக தோன்றுவது என்று அர்த்தம். இங்கே குறைகூறல்கள் என்ன தானாகவேவா தோன்றுகின்றது?. நெருப்பு இல்லாமல் புகையாது. குறைகூறல் ஒரு செயலின் எதிர்வினை. எந்த ஈனச் செயல் குறித்த விபரங்களும் வெளி வராமல் இருக்க வேண்டுமானால் சொல்பவனைச் சீன்டாதே என்று மாமாக்தீர் தெரிந்து வைத்திருந்ததை மறைமுகமாக பிரதமருக்கு சொல்ல வருகின்றாரோ என்ற டவுட் வருது. நம்பிக்கை நாயகன் மாமாக்தீரைப் போல அரசியல் பதில் சொல்ல அறிந்து வைத்திருந்தால் இப்படி எல்லா பக்கமும் அடி வாங்கத் தேவை இல்லையே.
நீர் சொல்வது உண்மைதான்… உமது காலத்தின்போதும் இப்போதைய காலத்திலும் மக்கள் சொல்வது பெரும்பாலும் உண்மை நிலவரமே!!! இதில் வழக்கு போட என்ன இருக்கிறது???? உமது காலத்தில் ஊடகங்கள் அரசாங்கத்தின் கையடக்கத்தில் உருண்டன. இக்காலத்திலோ, இணைய ஊடகங்கள் எல்லாவற்றையும் அலசி சுரண்டி வெட்டவெளியாக்குகின்றன!!! பாவம் நஜிப், மத்தளம் போல் இருபுறமும் அடி…!!!!!
வழக்கு என்ன வழக்கு? வழக்குப் போட்டிருந்தால் அவற்றை தூள் தூளாக்கி உடைத்தெறிந்து காறி உமிழ்ந்திருப்பார்கள்.ஆனால் வெளியே வராதபடி தைப்பிங் கமுந்திங் சிறையில் ஆண்டுக் கணக்கில் அடைத்து வைத்து மறந்து போச்சா? ஆமாம். உங்களுக்குத்தான் மறதி அதிகம் என்று நீங்களே சொன்னீங்களே. மக்கள் தொண்டன் வி.டேவிட் அங்கே பட்ட அனுபவங்களைப் படித்து கதறினோமே… அன்வாரை சிறையில் அடைத்து நாட்டு நலனுக்காகவா? உங்க சுயநலத்துக்காகவா பெரியவரே?
தலைமை நீதிபதியை தூக்கியவன் நீ …………………….. இப்போ கபட நாடகம் ஆடுகிறாய் மறதி வாடிவதைக்க ….காலமும் காலனும் நுழைவு சீட்டோது காத்திருப்பது தெரியாது போனது மிகவும் வருத்தப்பட வேண்டியிருக்கு …..
மகாதீர் is gentleman இவனோ………….