இந்தியப் பெருங்கடலின் தென் பகுதியில் 60,000 சதுர கிலோமீட்டர் பரப்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் எம்எச் 370-ஐத் தேடும் பணி மே மாதம் முடிவுக்கு வரலாம்.
மலேசிய விமான நிறுவனத்தின் காணாமல்போன அவ் விமானத்தைக் கடலடியில் தேடும் மாபெரும் பணியில் ஈடுபட்டுள்ள மூன்று கப்பல்களும் மூன்றில்- இரண்டு பங்கு பகுதியில் தேடலை முடித்து விட்டதாக கூட்டு ஒருங்கிணைப்பு மைய(ஜேஏசிசி) அதிகாரிகள் பெர்த் சண்டே டைம்ஸிடம் தெரிவித்தனர்.
தேடும் பணி 12 மாதங்கள் நீடிக்கும் என முதலில் எதிர்பார்க்கப்பட்டது. அதே வேளை இதுவரை தேடிப்பார்த்தில் எதுவும் காணப்பட்டதா என ஜேஏசிசி-யால் எதுவும் கூற இயலவில்லை.
எம்எச்370 239 பயணிகளுடன் கோலாலும்பூரிலிருந்து பெஜிங் செல்லும் வழியில் காணாமல்போய் ஒன்பது மாதங்களுக்குமேல் ஆகிவிட்டது.
– dpa
……………………………….. இறைவன் மீது anayaga உண்மையே என்பது உண்மையே
கவலை வேண்டாம் ,கடத்த பட்ட கப்பல் கிடைக்க போவதில்லை அந்த கப்பலில் கடத்த பட்ட மங்குஸ்தீன் பழமும் அழுக போவதில்லை ,ஏன்ன தொலை உரித்து பார்த்தாம் பழம் இருக்காது அதில் வேறே என்னமோ இருக்காம் ,கப்பலில் பிராயாணம் ஸேஈட்ஃஆற்காற் இந்நேரம் மண்ணுக்குள் அழுகி போயிருப்பார்கள் அல்லது பெரிய ராணுவ சிறையில் உயிர் கொல்லி ஊசி போட்டு அவர்களை நாளுக்கு நாள் உயிர் பிரியும் படி செய்திருப்பார்கள் .கானாபல் போன MH 370 கப்பலை தேடும் நாடகத்தை மே மாதத்திற்குள் முடிவடைவது நல்லது ,,திரையிலும் ,தொலைகாட்சியிலும் ஒளிப்பரப்பபடாத நாடகத்தை நாங்கள் பார்த்தது போதும் ,இதில் ஆஸ்திரேலிவின் நாடகம் தான் பார்பதற்கு நன்றாக இருந்தது ,எதையோ திசை திருப்புவது போல் தெளிவாக தெரிந்தது ஏன் நம் நாட்டு முன்னாள் பின்னால் பிரதமர்களுக்கும் 370 எங்க என்று தெரியும் !
விமானம் அங்கு விழுந்து இருந்தால் தானே இருந்தால் தானே உடைந்த பாகங்கள் கிடைக்கும் ..எல்லாம் வெறும் கண்துடைப்பு ….
99% எங்கே இருக்குன்னு தெரிஞ்சிடுச்சின்னு சொன்னார் மந்திரியார். 2 மாதம் போயிடுச்சு. இன்னும் ஒன்னும் காணலே. நடுக்கடலில் குண்டு போட்டு வெடிச்ச விமானப் பாகங்கள் இன்னும் கரை வந்து சேராததினால் 5 மாதத்திற்கு அட்டவணையைத் தள்ளிப் போடுகின்றார்கள். பாவம் யாரு பெத்த பிள்ளைகளோ அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள். இப்பிறவியில் இப்படி ஒரு அவல நிலைக்குத் தள்ளப் பட்டு விட்டார்கள்.
எந்த மாதம் முடிந்தாலும் சரி, கப்பல் கிடைத்தால் சரி.
எல்லாம் தெரிந்த இறைவனுக்கே வெளிச்சம்.
எல்லாம் நம்ம “சாத்து மலேசியா போமொக்கு ” தான் வெளிச்சம்….
இந்தியா பெருங்கடலில் தேடா ஏன் இந்தியாவிடம் தர வில்லை. மே மாதம் வந்த உடன் செரித்தா அபேசாம் ? முன்பு கடல் உள்ளவரை தேடுவோம் என்றது இன்சூரன்ஸ் கிடைக்கும்வரைதானா? கடல் குளிப்பவர்கள் இனி மூழ்கலாம்.