மலேசியர்களின் சோம்பேறித்தனம்தான் அன்னிய தொழிலாளர்கள் “தவக்கேகள்” ஆவதற்கு உதவுகிறது எனத் தேசிய பேராசிரியர் மன்றச் செயலாளர் ராடுவான் சே ரோஸ் வருத்தத்துடன் குறிப்பிட்டார்.
“சோம்பேறிகளாக இருக்கிறோம். நம் மக்கள் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வதில்லை. அதேவேளை வாய்ப்புகள் கிடைப்பதில்லை என முறையிடவும் செய்கிறார்கள். அவர்களுக்கு (அன்னிய தொழிலாளர்கள்) மட்டும் வாய்ப்பு எப்படிக் கிடைக்கிறது?
“முதலில் ஒரு வேலையைத் தேடிக் கொள்கிறார்கள். பிறகு முதலாளி ஆகி விடுகிறார்கள்”, என ராடுவான் அன்னிய தொழிலாளர்கள் மீதான பேராசிரியர் மன்றக் கருத்தரங்கின்போது செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த செம்பருத்தியில் எதாவது மக்கள் நல திட்டங்கள் பற்றி எழுதினால்..மக்களும் கொஞ்சம் பயன் பெறுவார். வெறுமனே
அரசாங்கத்தை எதிர்க்கும் செய்திகளை வெளியிடுவதால் நம்மவர்க்கு ஒன்றும் அள்ளி கொடுக்க போவதில்லை.
இருக்கறதையும் கெடுக்காமல் இருக்கணும்.
இப்போ நீங்க சொல்றதை, காலம் காலமா நாங்க சொல்லிக் கொண்டுதான் இருந்தோம். எவன் கேட்டான். வெள்ளம் தலைக்கு மேலே போன பிறகுதான் மூச்சு தினருதோ?
நீர் எப்படி பேராசிரியர் ஆனீர்?
சோம்பேறி ….எந்த இனம் என்று எல்லோருக்கும் தெரியும் !
சிங்கம் அவர்களே ..இன்னமும் பலபேருக்கு அரசாங்கம் அறிவிக்கும்
நலத்திட்ட உதவி பற்றி தெரியாமலே இருக்கிறது..ஒருபுறம்
அரசாங்கத்தை சாடி எழுதுங்கள் ..மறுபுறம் கொஞ்சம் மக்களுக்கு
பயன்பெறும் திட்டங்கள் பற்றியும் எழுதுங்கள்..நாம் சிறுபான்மையாக
இருப்பதால் அரசங்கதொடும் எதிர்கச்சியோடும்
சிங் சக் போட வேண்டி இருக்கிறது.
ஒன்று மட்டும் தெளிவாக நம்மவர்கள் புரிந்து செயல்பட வேண்டும் .
எவன் வந்தாலும் நமக்கு இப்படிதான்.அடுத்து ஒரு உருப்படியான
அணி அமையுமா என்று பார்ப்போம்.அதுவரை நமக்கு தேசிய
முன்னணிதான்.
பேராசிரியர் மன்றத் தலைவர் யாரை முட்டாளாக்கப் பார்க்கிறார்? இங்கே யாரும் காட்டில் வாழ்ந்துகொண்டிருக்கவில்லை. மலேசியாவின் யதார்த்த அரசியல் அயோக்கியத் தனத்தை ஆய்வு செய்யுங்கள். எத்துனைக் கவலமான நடைமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன என்பனவற்றை எல்லாம் பார்த்துவிட்டு அறிக்கை விடவும். சும்மா குளிர்ச்சியான அறையில் இருந்து கொண்டு மலேசியர்களைச் சோம்பேறிகள் என வாய் கூசாமல் பேச வேண்டாம்.
பிழைப்புத் தேடி வந்த பங்களாதேசி இங்குள்ள மலாய் பெண்களை திருமணம் செய்துக் கொண்டு அந்த பெண் பெயரில் வியாபார லைசன்களை பெற்று பெரிய முதலாளியாக வாழ்கிறார்கள். இங்குள்ள மார்கெட்டுகளில் பெரும் பகுதி அவர்களின் ஆதிக்கம்தான்..?
சோம்பேறி யாரு?
கோபி கடையில் கோப்பி ஒ ஒரு கிளாஸ் வாங்கி, ரோக்கோ டவுன் அடிச்சிக்கிட்டு வெட்டிகதை யாரு பேசுறானோ அவன்தான் சோம்பேறி நாதாரிகள்.
திறமை இருந்தும் தகுதி இருந்தும் ஞாயமான பணி கிடைக்காமல் போக என்ன காரணம்? முட்டாள் முதன்மை வகிக்க திறமைசாலி அடி பணிய சோம்பல காரணம் ?? திறந்த மனதோடு பார்க்கவும் ….
10 A பெற்ற oruvar ( இந்தியர் / சீனர்) மேல் படிப்பு இங்கு தொடர முடியுமா avar விரும்பிய துறையில் ?????? இதில் சோம்பேறிதனம் ????????????????
அம்னோ ஜிங் சாக் இதை விட்டால் வேறு என்ன சொல்லும்?. கிளியைப் போல பேசுது. பணத்திற்கு இரந்துப் போன பேராசிரியர் மன்றம் இதை விடப் பெருமையாக வேறு எதைச் சொல்ல முடியும். பேராசியர் என்பவர்கள் பிரச்சனைக்கு ஏற்ற தீர்வைச் சொல்ல வேண்டுமே ஒழிய, பிரச்சனையையே எங்களிடம் திருப்பிச் சொல்லக் கூடாது. அப்புறம் மாணவர்கள் பரீட்ச்சைக்கு எழுதிக் கொடுத்த பதிலை உங்களுடைய பதிலாக எங்களிடம் வந்து சொல்ல வேண்டாம். உங்க சொந்த புத்தியிலேயே நின்றால் சிறந்த மாணவர்களை உருவாக்கலாம். இல்லயேல், இப்பொழுதும் உருவாக்கிக் கொண்டிருக்கும் தரம் குறைந்த ரோபோட்களைத்தான் மேலும் உருவாக்குவீர்கள். பல்கலைக்கழகத்தில் இருந்து அப்படி வந்த ரோபோட்கள்தாம் இன்று சோம்பேறி ரோபோட்களாகி விட்டன. நீங்கள் சொன்ன சோம்பேறிகள் இவர்கள்தான்.