“யுஎம் எண்மர்” மீதான குற்றச்சாட்டுகளைக் கைவிட வேண்டுமென்ற கோரிக்கைக்குப் பல்கலைக்கழகம் மறுமொழி தெரிவிக்காததால் ஆத்திரமடைந்த மலாயாப் பல்கலைக்கழக மாணவர்கள் துணை வேந்தர் ரொஹானா யூசுப்பின் கொடும்பாவியை இன்று எரித்தனர்.
வேந்தர் கட்டிடத்துக்கு வெளியில் கொடும்பாவியை எரித்த மாணவர்கள் சில அறிவிப்பு அட்டைகளையும் ஏந்தியிருந்ததாக இஸ்லாமிய மாணவர் சங்கத் தலைவர் கைருல் நஜிப் கூறினார். அவற்றில் ஒன்றில் ‘நீதிமன்றத்தில் சந்திப்போம்’ என்ற வாசகம் இருந்தது.
பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டைக் கைவிடவில்லை என்றால், அவ்விவகாரத்தை மாணவர்கள் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்வர் என்றாரவர்.
ஏறிய ஏணியை தள்ளிவிட்ட கதைதான்.
படிக்கிற பயல்கள் செய்யற வேலையா.
இப்பவே அராஜகம் பண்ணும் கழிசடை மாணவர்கள் உருப்படறது 69தான்.
இதுதான் அன்வார் சொல்லி கொடுத்த பாடம் கும்கி..இவர்கள்தான் நாளைய தலைவர்களாம்…உருப்பட்டுரும்.
எதிலும் குற்றம் காணும் கோமாண்களே ,நீதி கிடைக்க அவர்கள் போராடுகிறார்கள்,உங்களுக்கு எங்கே………….?
நீதிக்காக எவ்வளவோ பேர் தங்களின் உயிர்களையும் தியாகம் செய்துள்ளனர். பிரெஞ்சு புரட்சி ரஷ்ய புரட்சி சீன புரட்சி இன்னும் சுதந்திர போராட்டங்கள் எல்லாம் ஏன் நடந்தது? தயவு செய்து சிந்தியுங்கள்
அட மாங்கா ..இது ஒரு போராட்டமா..
கூலிக்கு மாரடிப்பவர்களுக்கு எங்கே தெரியப்போது புரட்சியும் , போராட்டமும் ?
புரட்சியா..வெங்காயம்..இருக்கிறதும் உருப்புட்டரும்.
முடிந்தவரை பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டும். நீங்கள் மலாய் மாணவர்கள் என்பதால் தப்பித்தீர்கள். இதனையே இந்திய மாணவர்கள் செய்தால் இந்நேரம் உள்ளே கம்பி எண்ண வைத்திருப்பார்கள்! எல்லாம் இனம், மதம் என்பதை வைத்தே அரசியல் நடத்தப் படுகின்றது!