1மலேசியா மேம்பாட்டு நிறுவனம் (1எம்டிபி) தொடர்பில் போலீஸ் புகார் செய்தது அம்னோ உயர்மட்ட தலைவர்களுக்கு ஆத்திரத்தை உண்டு பண்ணியிருக்கலாம் என்பது பற்றி பத்து கவான் அம்னோ துணைத் தலைவர் கைருடின் அபு ஹசான் கவலைப்படவில்லை.
“அதைப் பற்றிய கவலையே இல்லை. ஏனென்றால், உண்மைக்காக போராடுவதில் நம்பிக்கை கொண்டவன் நான்”, என்றவர் வலியுறுத்தினார்.
“எந்தத் தலைவரையும் கண்டும் பயந்தது இல்லை. என் வலிமைக்கு ஊற்றுக்கண்ணான அல்லாவுக்கு மட்டுமே பயப்படுகிறவன் யான்”, என்றவர் மலேசியாகினியிடம் நேர்காணல் ஒன்றின்போது குறிப்பிட்டார்.
போலீஸ் புகார் பற்றி அம்னோவில் உள்ளவர்கள் குறை சொன்னாலும் அதைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்க்குச் செய்த “உதவியாக”த்தான் அவர் பார்க்கிறார்.
நஜிப்பும் “மனிதரே” என்றுரைத்த கைருடின், அவர் தவறு செய்தால் அதைச் சுட்டிக்காட்டுவது அவரைச் சுற்றியுள்ள தலைவர்களின் பொறுப்பு ஆனால், அவர்கள் அதைச் செய்வதில்லை என்றார்.
”என்னைப் போன்றவர்கள் அம்னோ தலைவரைக் கவிழ்க்க நினைப்பதில்லை.
“அம்னோவில் எப்போதும் அவருக்குத் துதி பாடிக்கொண்டிருக்கும் சில உயர் தலைவர்கள்தாம் அவரைக் கழிக்கவும் (அரசியலில்) ஒழித்துக்கட்டவும் விரும்புவார்கள்”, என்றாரவர்.
Unmai athuthaan,oruvar thavaru seithaal athu thavaru endru sutdi kaatda vendum maaraga thuthi paadinaal yenna artham?thavaru seipavar maatdi kondu pokatdum nameku yenna vanthathu endru thuthi paadukiraar.இந்த மாதிரி ஆட்களை நம்ப வேண்டாம் கூடைருந்தெ குழி தோண்டுபவர்கள்.பத்து கவான் செய்தது சரி.
பயமில்லையா?
அப்புறம் ஏன்டா புலம்புறே?