ஏழு மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை மீட்டுகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் மகஜர் ஒன்றை யுனிவர்சிடி மலாயா (யுஎம்) வேந்தர் அலுவலத்தில் கொடுக்கச் சென்ற பக்கத்தான் ரக்யாட் எம்பிகள் குழுவொன்று தடுத்து நிறுத்தப்பட்டது.
லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா, ஷா ஆலம் எம்பி காலிட் சமட், பாடாங் செறாய் எம்பி என்.சுரேந்திரன், பாயான் பாரு எம்பி சிம் ட்ஸே ட்ஸின், யுஎம் முன்னாள் மாணவரும் சி பூத்தே எம்பியுமான தெரேசா கொக் ஆகியோர் அக்குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
“என் தொகுதியில் உள்ள யுனிவர்சிடிக்குள் செல்ல எனக்கு அனுமதி இல்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது”, என நுருல் இஸ்ஸா கூறினார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இது கேள்விப்படாத விசயமாகவுள்ளது என்று கூறிய நுருல் இஸ்ஸா, இரண்டு வாரங்களுக்குமுன்தான் அம்னோ மகளிர் தலைவர் ஷரிசாட் அப்துல் ஜலில் உரையாற்றுவதற்காக பல்கலைகழகத்துக்குள் அனுமதிக்கப்பட்டார் என்றார்.
Avar aalum katchi,niingal ethir katchi athuthaan kaaranam.
படிக்கிற வயசுலே படிக்கிற வேலையே மட்டும் பார்த்திருந்தால், எதுக்காக இப்படி போகணும்..தேவையா இது..இது ஒரு நல்ல பாடம் மற்ற மாணவர்களுக்கும்..வாய்ப்புக்காக ஏங்கும் மாணவர்கள்
மத்தியில் இப்படி ஒரு பொறுப்பற்ற ஜந்துகள்.
நாட்டு நடப்பு அறியா மூட ஜந்துவா இந்த shanti ???? குட்டப்படும் கூட்டத்தில் இவரும் ஒருவரோ????
சாந்திக்கு மூளை மலுங்கிவிட்டதால் உளருகிறாள் தலைவா