சிலாங்கூர் மந்திரி புசார் இன்னமும் அன்வாரின் செல்வாக்குக்கு உட்பட்டவராகத்தான் இருக்கிறார் என்கிறார் அரசியல் விமர்சகரான பேராசிரியர் முஸ்தபா இஷாக்.
மந்திரி புசார் அஸ்மினின் 100வது நாள் நெருங்கி வரும் வேளையில் அவர் சிலாங்கூரை எந்தத் திசையில் செலுத்திக் கொண்டிருக்கிறார் என்பதற்குத் தெளிவான அறிகுறியே இல்லை என அப்பேராசிரியர் கூறினார்.
“அவர் யாரிடமோ கட்டுப்பட்டுக் கிடப்பதுபோலத் தெரிகிறது. இன்னும் அவர் தம் அரசியல் குருவின் கூட்டிலிருந்து வெளிவரவில்லை.
“அன்வாரின் செல்வாக்கிலிருந்து விடுபட முடியாதவராக இருப்பதுபோலத்தான் தோன்றுகிறது”, என முஸ்தபா மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
அஸ்மின், அன்வார் சொல்படி நடந்து சிலாங்கூரை நிர்வகிப்பதில் சொந்தத் திறனைக் காண்பிக்காமல் இருப்பது நல்லதல்ல என்றாரவர்.
“ஒரு நம்பத்தக்க மந்திரி புசாராக, அப்துல் காலிட் இப்ராகிமைவிட சிறந்தவராக விளங்க நினைப்பவர் இப்படி இருப்பது சரியல்ல.
“இதுவரை அவரின் சொந்த திறமையோ துணிச்சலோ பளிச்சிடவில்லை”, என்றவர் சொன்னார்.
புதிய மந்திரி புசார் சிலாங்கூர் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதை விடுத்து பிரச்னைகளிலிருந்து தப்பி ஓடவே பார்க்கிறார் எனவும் முஸ்தபா கூறினார்.
ஐயா முஸ்தபா உங்க வேலையை மட்டும் பாருங்கையா
(நேற்று வந்த)அன்வாரின் கூட்டை விட்டு அஸ்மின் வெளியேறினாரா என்பதை கேட்குமுன், மகதிரின் கூட்டை விட்டு அம்னோ வெளியேறி விட்டதா? என்று கேட்டால் சிறப்பாக இருக்கும்.
மாமோய் உள்ளே போனதும்..எல்லாம் சரி ஆயிடும்..அச்மினுக்கு
அப்போதுதான் நல்ல காலம்…
அடுத்த மாதம் சிலாங்கோரில் உள்ள பழைய லிப்டு எல்லாம் மாற்றி புது லிப்டு போட போகிறார்கள். குப்பை சிந்திகொண்டு போன லாரியை மடக்கி,நீ குப்பை எடுக்கிறாயா இல்லை குப்பை
போடுகிறாயா என்று ஓட்டுனரை வசைபாடியவர் இந்த அஸ்மின்,
இதுவும் அன்வார் சொல்லித்தான் நடந்தது என்று சொல்ல
வருகிறாரா ? அஸ்மின் பிரதமராக வர வாய்ப்பு அதிகம் தென்படுகிறது, நுருல் இசா துணை பிரதமரானால்,பெண்கள்
ஒட்டு தாராளமாக கிடைக்கலாம், மலாய்காரர்களின் கணிப்பு.
அஷ்மினுக்கும் அந்த ஆசைதான்.
அனுவார் உள்ளே போனால் அஸ்மின்தான் PKR தலைவன்.
அனுவாருக்கும் பெ பெ
அசிசவுக்கும் பெ பெ
ஆசாமி..ரூம் போட்டு யோசிப்பிரோ…
முன்னாள் பரிசான் மந்திரி புசார்களை வகை செய்தால் இன்றைய அஸ்மின் அலி எவ்வளவோ தேவலாம்..தொடர்ந்து அவரை கவனி[போம்///
விசுவாசமாக இருபது என்ன தவறு?அவர் அவர் தலைவருக்கு விசுவாசமாக இருக்கிறார் ,நீர் உங்கள் தலைவருக்கு விசுவாசமாக இருந்துட்டு போங்கள் கதம்.
கவனிங்க நல்லா கவனிங்க..அப்படியே அவர் காதில் கொஞ்சம் போடுங்க, அப்படி ஒருகால் அவர் பிரதமர் அனால் , நமக்கு பூமி அந்தஸ்து கொடுக்க சொல்லுங்கள்.
ஏன் பூமி அந்தஸ்தை அஸ்மினிடம் கேட்கிறீர்கள்.இப்பொழுது ஆண்டுக் கொண்டிருக்கும் உங்கள் உம்னோவிடன் கேட்க வேண்டியதுதானே.இவ்வளவு காலம் நாட்டை ஆளும் பிரதான கட்சி அதனுள் அடக்கமாக இருக்கும் உங்கள் தாய் கட்சி இதனைச் செய்ய வேண்டியதுதானே.இத்தனை வருடங்களாக ஒன்றையும் பிடுங்க முடியல இப்போது வந்துட்டாங்க வாய் கிழிய பேச.