சர்ச்சைக்குரிய ரிதுவான் டீ அப்துல்லா போன்ற கல்வியாளர்கள் முன்வைக்கும் வாதங்களை எதிர்க்காவிட்டால் மலேசியாவிலும் இஸ்லாமிய அரசு(ஐஎஸ்) போன்ற தீவிரவாதக் குழுக்கள் தலையெடுக்கலாம் என ஒரு என்ஜிஓ எச்சரிக்கிறது.
“இஸ்லாத்தில் ‘மிதவாதம்’ என்றால் ‘அல் வசத்தியா. அது மார்க்கத்தின் முக்கியமான அங்கம். அதிலிருந்து விலகிச் செல்லும்போதுதான் ‘பயங்கரவாத எண்ணங்கள்’ உருவாகின்றன”, என இஸ்லாத்தில் சகோதரிகள் (எஸ்ஐஎஸ்) அமைப்பின் ஆய்வாளர் அபிக் முகம்மட் நூர் கூறினார்.
அதுவே பின்னர் பயங்கரவாதச் செயல்களுக்கும் இட்டுச் செல்லலாம்.
“மலேசியாவில் ஐஎஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகள் இல்லை. ஆனால், ரிதுவான் போன்றவர்களின் சிந்தனைகளைத் தடுத்து நிறுத்தாவிட்டால் மலேசியாவிலும் ஐஎஸ் உருக் கொள்ளலாம்”, என்றவர் ஓர் அறிக்கையில் கூறினார்.
ரிதுவான், சினார் ஹராபான் நாளிதழில் எழுதிய கட்டுரை ஒன்றில் ‘மிதவாத முஸ்லிம்’ என்பதே இல்லை எனக் குறிப்பிட்டிருந்தது பற்றிக் கருத்துரைத்தபோது அவர் இவ்வாறு கூறினார்.
இதுவரை அவர் கற்றுக் கொடுக்கும் இராணுவ பல்கலைக்கழகத்தில் வளர்த்து விட்ட தீவீரவாதிகள் எத்துனை பேரோ?. நமக்குத் தெரியாது. அரசாங்கமும் இந்நாட்டு மன்னாராட்சியும் நிலைக்க வேண்டுமானால் இவ்வாறான விஷ புல்லுருவிகளை களை எடுக்க வேண்டும்.