2015 ஜனவரியில் ரோன் 95, ரோன் 97, டீசல் ஆகியவற்றின் விலை குறையலாம் என நிதி துணை அமைச்சர் அஹமட் மஸ்லான் எதிர்பார்க்கிறார்.
ஆனால், எரிபொருள் விலை குறைந்தாலும் பொருள்களின் விலைகள் குறைவதில்லை, அதுதான் பிரச்னை என்றவர் குறைப்பட்டுக் கொண்டார்.
“எனவே, இவ்விவகாரத்தில் வணிகர்களும் வியாபாரிகளும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். செலவு குறையும்போது பொருள்களின் விலைகளைக் குறைப்பது அவர்களின் பொறுப்பு”, என்றாரவர்.
பொறுப்புடன் நடந்துக்கொள்ள வேண்டியவர்கள் அரசாங்கத்தில் பொறுப்பு வகிக்கும் அமைச்சர்களும் அதிகாரிகளுமே…. YB ரபிஜியின் எண்ணெய் வரியின் கூற்றுக்கு முதலில் விளக்கமளிக்கவும்….
இப்பொழுது தெரிகிறதா..இந்த அரசாங்கம் எவ்வளவு திறமையான அறிவாளியான அமைச்சர்களைக் கொண்டுள்ளது என்று.அட மடை அமைச்சரரே, பொருள்களின் விலையை ஏற்றிய பிறகு எந்த வியாபாரியாவது அதன் விலையை இறக்க முற்படுவானா?அவன் இலாபத்தைதானே எதிர்பார்ப்பான்.இதற்கெல்லாம் யார் காரணம்?அரசாங்கம்தானே.அவனவன் எண்ணெய். விலையேற்றத்தைக் காரணம் காட்டி பொருள்களின் விலையை ஏற்றி விட்டான். இப்பொழுது நீங்கள்தான் அதனை குறைப்பதற்கான நடவடிக்கையில் இறங்க வேண்டும். இது வியாபாரிகளின் பொறுப்பு என்று கையைக் காட்டி விட்டு சும்மா இருந்தா ஒன்றும் பயன் இல்லை.பொருள்களின் விலை ஏற்றத்திற்குக் காரணம் இருந்தபோது விலை குறைப்பதற்கான காரணம் உண்டல்லவா.போய் அதை செய்யுங்கள்.
விலைவாசியை கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசாங்கத்திடம் இல்லையா?
வரும் ஆனா வராது. குறையலாம் ஆனா குறையாது. ஹி ஹி ஹி ஹி இதெல்லாம் நாங்க சினிமாவுல பார்த்துட்டோம்ல. புதுசா ஏதாவது கதை சொல்லுங்க அப்பு. 31-ம் தேதி பக்காத்தான் காரன் வெக்கப்போறான்லெ ஆப்பு அப்புறம் பாரு துண்டைக் கானோம் துணியக் காணொம்ம்னு குறைக்க வேப்போம் இல்லே. உலகம் பூரா குறைஞ்சிடுச்சி இந்த ___ மட்டும் விடிய மாட்டுது. ஊர அடிச்சி உலையில பூடாற னுக
விலைவாசியை கட்டுப்படுத்தகூடிய வலிமை அரசாங்க அதிகாரிகளுக்கு இல்லை என்பது நிதி அமைச்சரின் கூற்றாகுமோ!
அரசாங்கம் மலேசிய பிரஜைக்கு முக்கிய மாக ஓட்டுரிமை பெற்றவர்களுக்கு,அதிலும் திருமணமான குடும்ப தலைவருக்கு மாதம் 300 வெள்ளி பற்று சீட்டு (மைகாசெஹ்)கொடுத்து உதவலாம்.இது ஓரளவு சுமையை குறைக்கும்.இது ஏன் கருத்து