மஇகாவில் புதிய தேர்தல்கள் நடத்த வேண்டும் என்ற உத்தரவு பற்றி விளக்கம் பெறக் கட்சித் தலைவர் ஜி.பழனிவேலும் துணைத் தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியமும் அடுத்த வாரம் சங்கப் பதிவதிகாரி(ஆர்ஓஎஸ்)யைச் சந்திப்பர்.
“சுப்ராவும் நானும் அடுத்த வாரம் ஆர்ஓஎஸ்ஸைச் சந்தித்து அதன் உத்தரவு பற்றி விளக்கம் பெறுவோம். உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடியையும் சந்திப்போம்”, என்று பழனிவேல் கூறினார்.
இன்று நடந்தது மத்திய செயல்குழுக் கூட்டம் அல்ல என்றும் அது மாநிலத் தலைவர்களையும் உள்ளடக்கிய நிர்வாகக் குழுக் கூட்டம் என்றும் ஆர்ஓஎஸ் விவகாரம் பற்றி விவாதிக்கவே அது கூட்டப்பட்டது என்றும் பழனிவேல் தெரிவித்தார்.
மஇகாவில் உள்ள சில தரப்பினர் தாம் பதவி விலகுவதை விரும்புவதாகக் கூறப்படுவதையும் அவர் மறுத்தார்.
“சும்மா அப்படிச் சொல்லப்படுகிறது. ஒரு சிலரே அப்படிக் கூறிக்கொள்கிறார்கள்”, என்றாரவர்.
90% இந்தியர்கள் இந்த சோதா தலைவனை வீட்டுக்கு அனுப்பவே விரும்புவார்கள்.
சந்திச்சு கிழிச்சு Palanivelu தமிழனுக்கு எல்லாத்தையும் செய்திடுவா… போங்க… மட ஜென்மங்களே ( MIC )
மிக் சியிலே ஈவன் பதவிலே இருந்தாலும்சரி இல்லை என்றாலும் சரி இந்திய சமுதாயத்திற்கு ஒன்னும் ஆகா போவதில்லை ,பதவிலே அமர்ந்து கொண்டு இவனுங்க குடும்பத்தைத்தான் காப்பாற்ற…
முன்னாள் துணைத் தலைவர் டத்தோ சுப்ரா 1989 – இல் கட்சியின் தேசிய தலைவருக்கு போட்டி இட்டப் பொது சுப்ராவை ஆதரித்த 300- கிளைகளை சாமிவேலு மூடியதைப் போல், பழனிவேலு இந்த சண்டியர்களின் கிளைகளை மூடவெண்டியது தானே..?
ROS-இடம் சமரசம் பேசி மறுதேர்தல் நடக்காமல் செய்தால், அது நிலைமையை மேலும் மோசமடையச் செய்யும். எனவே, ROS-ஐ சந்திக்காமல் நடந்த தவறுகளுக்குப் பொறுப்பேற்று தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதே பழனிக்கு அழகு. இல்லாவிட்டால் ம இ கா வரலாற்றில் இல்லாத அளவுக்கு கேவலமான நிலையில் பதவியை விட்டு விலக நேரலாம். பழனியின் பலவீனம் அவருக்கே தெரியும். ஆனால் ஒரு பத்திரிக்கை துணைக்கு இருப்பதை நினைத்து அவர் துணிச்சலாக இருப்பதைப் போல நடிக்கிறார். ஆனால் உண்மையில் அந்தப் பத்திரிகை தற்போதைய ம இ கா வின் நிலைமையை தனக்குச் சாதகமாக்கி பணம் பண்ணிக்கொண்டிருக்கிறது. பதவி விட்டுப் போனால் அந்தப் பத்திரிகையில் பழனிக்கு நிருபர் வேலை கூட கிடைக்காது என்பது தான் ஊரறிந்த உண்மை. பழனி.. ‘எண்ணித் துணிக கருமம். துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு’. இதைச் சொன்னது பாரதி என்ற விஞ்ஞானி அல்ல, வள்ளுவர் எனும் பெருந்தகை
ம இ கா …. மதி இல்லா காங்கிரசோ என்று எண்ணத் தோன்றுகிறது. அல்லது மட்டிகள் இருக்கும் காங்கிரசோ????
நல்லவன் சொல்வது மிகச்சரி. பணபலமும் அடாவடித்தனமும் நிறைந்த எதிர்ப்பாளர்களக் கண்டு பழனி மிகவும் பயந்துதான் போயிருக்கிறார். தைரியமாக இருடா அலர்ட் ஆறுமுகம் என்ற சினிமா வசனம் மாதிரி ஒரு சிலர் அவரை உசுப்பேற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பழனிக்கு அப்புறம் கட்சி சமுதாயத்தை ஒட்டுமொத்தாக சூறையாடிய கும்பல் வசம் சென்று விடும் என்பது திண்ணம். பழனியிடம் பணமும் இல்லை படை பலமும் இல்லை. ஆனால் அவரது எதிர்ப்பாளர்கள் மைக்கா ஒல்டிங்ஸ், எம்ஐஇடி, ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம், அரசாங்க குத்தகை என பல வழிகளில் பெரும் தொகையை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். மஇகா தலைவர்கள் பதவிக்கு வருவதற்கு முன்னர் தங்கள் சொத்துக்களை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும், அந்த சொத்துக்கள் எப்படி வந்தன என்பதை விலாவாரியாக விளக்க வேண்டும், தாங்கள் படித்த படிப்பு குறித்த விபரங்களை சார்ட்டிபிக்கேட்டோடு கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனை விதித்தால் வீரம் பேசுகின்ற அத்தனை பேரும் ஓடி ஒளிந்து விடுவார்கள்
மலேசியா இல்லிச்செவஎன் கட்சி MIC
மிக அருமையான யோசனை ……
MIC என்ற கட்சி அடுத்த பொதுத் தேர்தலில் காணாமல் போய்விடும். இது நிச்சயம். டி.மோகன், சா.வேல்பாரி போன்ற குண்டர் கும்பல் தலைவர்களை mic க்குள் தலைமையேற்க அனுப்பி வைத்தால், அதுவே கட்சிக்குச் சாவுமணி அடிப்பது போலாகும்.
தலைவரே சங்க (ரோஸ்) அதிகாரியின் ஆலாசனை படி மறு தேர்தலை நடத்துவதுதான் விவேகம்.! இல்லையென்றால் பா.ம.க. ராமதாசு வாரிசுகளும் ,பசும் பொன் வாரிசுகளும் தரும் தொல்லைகளை உங்களால் தாங்க முடியாது.
‘ROS’ சந்திப்பு என்பது ‘RCI’ அறிக்கை என்பதர்க்குச் சமம்.
பலனிலேலவர்களே ! உங்கள் பதவியை டதோ சரவனிடம் ஒப்படிசித்தி, நிங்கள் போகலாம்.
உங்களுக்கு புனியம் கேட்கும்.
குண்டர் கும்பல் தலைவர்களிடம் கட்சியை கொடுத்து விட்டு செல்லவும். கட்சிக்கும் சமுதாயித்திருக்கும் நல்லது .
சீரியன் சொல்வது சரி .