சாபா பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ரொலண்ட் சியா கிறிஸ்மசுக்குப் பின்னர் தம் நிலை பற்றி முறையான அறிவிப்புச் செய்வார்.
“என்மீது அக்கறை காட்டும் ஊடகங்களுக்கும் நண்பர்களுக்கும் நன்றி. கிறிஸ்மசுக்குப் பிறகு முறையாக அறிவிப்பேன்”, என ரொலண்ட் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
இனானாம் சட்டமன்ற உறுப்பினரான அவர் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகப்போவதைக் கட்சிக்குத் தெரியப்படுத்தியிருந்ததாக பிகேஆர் தலைமைச் செயலாளர் ரபிஸி ரம்லி நேற்று கூறினார்.
உடல்நிலை மோசமாக இருப்பதாக அவர் எழுதியிருந்தார் எனவும் ரபிஸி தெரிவித்தார்.