பாஸ் தலைவர்கள், அக்கட்சி ஹுடுட் சட்டம் கொண்டு வருவது பற்றிக் கேள்வி கேட்கும் முஸ்லிம்களின் சமய நம்பிக்கையைக் கேள்விக்குரியதாக்குவதை முதலில் நிறுத்த வேண்டும் எனக் கூறும் பிகேஆர் அப்படிக் கேள்வி எழுப்புவதை ஷியாரியா தடுக்கவில்லை என்கிறது.
“பாஸ் கட்சி ஹுடுட் கொண்டுவருவது பற்றி முஸ்லிம்கள் கேள்வி கேட்டாலோ சந்தேகம் தெரிவித்தாலோ அவர்களின் சமய நம்பிக்கை குறித்து கேள்வி எழுப்புவது ஏற்புடையதல்ல.
“முஸ்லிம்கள் ஹுடுட் பற்றி விவாதிப்பதை ஷியாரியா தடுக்கவில்லை”, என பிகேஆர் மத்திய செயல்குழு உறுப்பினர் லத்திபா கோயா கூறினார்.
பாஸ் கிளந்தான் ஹுடுட் பற்றி விவாதிக்க அவசர சட்டமன்றக் கூட்டம் நடத்துவது, அதுவும் அம்னோ 1மலேசியா மேம்பாட்டு நிறுவன(1எம்டிபி)ச் சர்ச்சை போன்ற கடுமையான சவால்களை எதிர்நோக்கும் நேரத்தில் அக்கூட்டத்தை நடத்துவதையும் லத்திபா சாடினார்.
ஹுடுட் விவகாரத்தை எழுப்பியதன்வழி 1எம்டிபி ஊழல்மீது செல்ல வேண்டிய மக்களின் கவனத்தைத் திருப்ப பாஸ் அம்னோவுக்கு உதவியுள்ளது என்றும் அவர் கடிந்து கொண்டார்.
வெரிகுட் இப்படித்தான் கூட்டனிகுல் ஒற்றுமை இல்லை என்று சொல்லாமல் சொல்லுறன்.
“சொல்லுவதைக் கேட்டுக் கொண்டு மறுமொழி பேசாமல் செய்” என்று கூறும் மதத்தில் “கேள்வி கேட்போருக்கு” ஹுடுத் சட்டத்தில் என்ன தண்டனையோ என்று முதலிலேயே விளக்கிச் சொல்லி விட்டால் கருத்துக் கூறுவதைப் பற்றி யோசிக்கலாம்.
சட்டமா ? பேசுகிறார் லட்டிப்பா கோயா ? ஹுடுட் இஸ்லாத்வர்கள் சிக்கல. உனக்கு அது முக்கியம். ஆனால். PKR உச்ச மன்ற உறுப்பினர் என்ற முறையில் PR ரில் இருக்கும் பாஸ் கட்சிக்கு புத்தி சொல்லி பிர உறவை விரிசல் பண்ண வேண்டாம். அதோடு 1மலேசியா மேம்பாட்டு நிறுவன(1எம்டிபி)ச் சர்ச்சை போன்ற கடுமையான சவால்களை எதிர்நோக்கும் நேரத்தில் அக்கூட்டத்தை நடத்துவதையும் லத்திபா சாடினார் என்பதும் சரி இல்லை காரணம்1எம்டிபி தேசிய பொருளாதார பிரச்னை அதை அரசியல் காரணம் காட்டி அறிவுரை சொல்ல வேண்டிய அவசியம் PKR உச்ச மன்ற வேலை இல்லை PR MP கள் பேசட்டும். ஏன் BN எம்பிகளை கேளுங்கள். நிதி அமைச்சர் /நிதி தந்த BNM அல்லது கவனர் அவர்களை சட்ட முறைப்படி கேளுங்கள். சட்ட மன்ற ஹுடுடுகும் 1எம்டிபி கும் அரசியல் முடுச்சு போடா வேண்டாம்.PKR உச்ச மன்றம் இத்தோடு கலைகிறது. தொடர்ந்தால் PR குள் பிச்சா வேண்டாம்.
அட …மாங்காய் கூட்டனி ஒற்றுமை..அப்பப்பா …மலாய்காரன் கண்ணை திறந்துட்டான் மாமோய் ..இனி உன் ஆட்டம் செல்லாது ..