ஹுடுட் பக்கத்தான் ரக்யாடின் பொதுவான கொள்கை அல்ல என்பதால் அதைச் செயல்படுத்துவதற்குமுன் பாஸ் அவ்விவகாரத்தை பக்கத்தான் தலைவர் மன்றத்துக்கு விவாதிப்பதற்குக் கொண்டு வருவதுதான் முறையாகும் என்கிறார் சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி.
இது பொருளாதார நெருக்கடி நிலவும் காலம் என்பதால் பக்கத்தான் ”ஷியாரியாவின் உயர் இலக்குகளை” அடைவதற்கு குறிப்பாக பொருளாதாரம், சமூகம், பாதுகாப்பு விவகாரங்களில் கவனம் செலுத்தும் என்றும் அஸ்மின் தெரிவித்தார்.
பக்கத்தானில் ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்டவை போக புதிதாக எதையும் கொண்டு வர விரும்பினால் அதை முதலில் பக்கத்தான் தலைவர் மன்றத்தின் பார்வைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று பிகேஆர் துணைத் தலைவருமான அஸ்மின் கூறினார்.
சரியாக சொன்னீர் இதையும் உம்னோ ம…யனுங்கு இஸ்லாம்கு ஆபத்து என்று கொக்கரிப்பணுங்க பாருங்களேன்
வளரும் நாடுக்கு /முன்று இனம் வாழும் ஹுடுட் செயல்படுத்துவதற்கு
முறை யல்ல .