வெள்ளம் ஹுடுட்டைக் கொண்டுவரும் முயற்சியை பாஸ் தொடர வேண்டும் என்பதற்கு அறிகுறி

mp pasபாஸ்  ஹுடுட் திட்டத்தைக்  கைவிடாமல்  தொடர  வேண்டும்  என்று  இறைவன்  செய்தி  அனுப்பிவைத்த  செய்திதான்  நாட்டில்  ஏற்பட்டுள்ள  மிக  மோசமான வெள்ளப்  பெருக்காம்.   பாஸ்  பாசிர்  மாஸ் எம்பி,  நிக்  அடோ  நிக்  அப்துல்  அசீஸ்  கூறியுள்ளார்.

“வெள்ளப்  பெருக்கு, இறைவனின் கோபத்துக்கு  ஆளாகாதீர்கள்,  அவனிடம்  திரும்பிச்  செல்லுங்கள்  என்பதை  முஸ்லிம்களுக்கு  நினைவுறுத்துகிறது. ஹுடுட்டைச்  செயல்படுத்துவதில்  கிளந்தான்  அரசு  உறுதியாக  இருப்பதை அது  நியாயப்படுத்துகிறது”, என்றவர்  முகநூலில் பதிவிட்டிருந்தார்.

அப்பதிவில்  கருத்துரைத்த  பலரும்  அவரைச்  சாடியிருந்தனர்.

“பாஸ்  அரசு  மழைக்காடுகளை  வெட்டிச்  சாய்க்கிறது, வடிகால் திட்டம் பற்றிக்  கவலைப்படுவதில்லை. குப்பைகளை  அகற்றுவதில் அக்கறை காட்டுவதில்லை. இது  தானய்யா,  வெள்ளம்  ஏற்படுவதற்குக் காரணம். இது  ஒன்றும்  புதிதல்ல. ஒவ்வோர்  ஆண்டும்  நடக்கிறது”, என  ஹுசேன்  முகம்மட்  என்பார்  குறிப்பிட்டிருந்தார்.

பருவமழைக்  காலத்தில் கிழக்குக்  கரை  மாநிலங்களில்  வெள்ளப்  பெருக்கு  ஏற்படுவது  வழக்கமானதுதான்.  ஆனால்,  கடந்த  பத்தாண்டுகளில்  இப்படியொரு  வெள்ளம்  ஏற்பட்டதில்லை  என  கிளந்தான்  அதிகாரிகள்  கூறுகின்றனர்.