சிலாங்கூரில் பன்றி பண்ணை அமைக்க எதிர்ப்பு

 

pig farmகோலலங்காட், கம்போங் செப்பாட்டில் ஒரு நவீன பன்றி பண்னை அமைக்கும் திட்டத்திற்கு எதிராக சுமார் 100 கிராம மக்களும், மலாய் உரிமை போராட்ட அரசு சார்பற்ற அமைப்பு பெர்காசாவும் இன்று சிலாங்கூர் மாநில மந்திரி புசாரிடம் ஒரு மகஜரை கொடுத்தனர்.

தாங்கள் மற்ற இனத்தினர் பன்றி இறைச்சி உண்பதை எதிர்க்கவில்லை. ஆனால், முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவுள்ள இடத்தில் அதிகமான பண்ணைகள் இருப்பதை எதிர்க்கிறோம் என்று அவர்கள் கூறிக்கொண்டனர்.

“முன்பு இரண்டு அல்லது மூன்று பண்ணைகள் இருந்தன. ஆனால், இப்போது இக்கிராமத்தில் 62 க்கும் அதிகமான பண்ணைகள் இருக்கின்றன” என்று லாடாங் தும்போக் கிராமத் தலைவர் முகமட் தார்முடி துஷிரான் கூறினார்.

இப்பகுதியை பாரிசான் ஆண்ட காலத்திலிருந்தே தாம் இதனை எதிர்த்து வந்ததாக கூறிய அவர், பன்றிகளின் துர்நாற்றம், அதன் கழிவுகள்pig farm1 மற்றும் பன்றி குட்டிகள் சாக்கடைகளில் வீசப்படுவது போன்றவை ஆழ்ந்த வெறுப்பை ஏற்படுத்துகிறது என்றார்.

பன்றி இறைச்சியை உண்ணும் சீனர்கள் மற்றும் இந்தியர்கள் அதிகமாக வாழும் இடங்களில் பன்றி பண்ணைகளைக் கட்ட வேண்டும் என்று சிலாங்கூர் பெர்காசா தலைவர் அபு பாக்கார் யாயா வலியுறுத்தினார்.

“இந்த இடத்தில் வேண்டாம், மலாய்க்காரர்கள் இருக்கும் இடத்தில் கூடாது. பன்றி என்றால் மலாய்க்காரர்களுக்கு வெறுப்பு என்பதை மறுப்பதற்கில்லை. அரசங்கம் ஒன்றை அமல்படுத்தினாலும், மக்களுக்கு அதை எதிர்க்கும் உரிமை உண்டு”, என்றாரவர்.