புவாட் ஸார்காஷி: அன்வார் மந்திரி புசார் பதவி கொடுக்க முன்வந்தார்

 

Anwar offered moneyதாம் 2008 இல் பக்கத்தான் ரக்யாட்டில் சேர்ந்துகொள்வதற்கு ஒப்புக்கொண்டிருந்தால் தமக்கு ஜொகூர் மாநில மந்திரி புசார் பதவியைத் தருவதற்கு அன்வார் முன்வந்ததாக அம்னோ உச்சமன்ற உறுப்பினர் புவாட் ஸார்காஷி இன்று கூறினார்.

எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம்மிற்கு எதிராக வெளிவிவகார அமைச்சர் அனிப்பா அமான் தொடர்ந்துள்ள ரிம100 மில்லியன் வழக்கு விசாரணையின் போது அனிப்பாவின் வழக்குரைஞர் முகம்மட் ஷாபி அப்துல்லா கேட்ட கேள்விக்கு புவாட் இவ்வாறு பதில் அளித்தார்.