சிலாங்கூர் அரசாங்கம், கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவியாக ரிம1 மில்லியன் வழங்கும் என மந்திரி புசார் அஸ்மின் அலி இன்று தெரிவித்தார்.
கிளந்தானுக்குப் புறப்படுமுன்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநில அரசு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திரெங்கானு, பகாங், பேராக் ஆகிய மாநிலங்களுக்கும் தலா ரிம100,000 ஒதுக்கியிருப்பதாகக் கூறினார்.
பாதிப்புக்கள் எங்கு ஏற்பட்டாலும் உதவுவது மனித இயல்பு. அரசியல் பேசாமல் சிலாங்கூர் அரசாங்கம் கிளந்தானுக்கு உதவுவது மனிதாபிமானம் மிக்கது. வாழ்த்துகள்!
மனிதன் ஒருவன் மனித நேயத்துடன் உதவசென்று உள்ளதை வரவேற்கிறேன் சிலர் GOLF விளையாடும்போது சிலர் உதவி செய்ய வெள்ளத்தையும் பாராமல் சென்றுள்ளதை ISMA UMNO PERKASA போல அல்லாமல் நாம் செயல்பட்டோமானால் அதுவே இறை சேவை