ஏர்ஏசியா விபத்து: முதல் சடலம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது

 

AirAsia3சுரபாயா-சிங்கப்பூர் பயணத்தின் போது விபத்திற்குள்ளான ஏர்ஏசியா பயணிகள் மற்றும் விமானப் பணியார்கள் ஆகிய 162 பேரில் முதலில் மீட்கப்பட்ட சடலம் இன்று அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஹயாதி லுட்பியா ஹமிட் என்பவரின் சடலம் சுரபாயா மருத்துவமனையிலிருந்து கிழக்கு ஜாவா, செடாத்தி மாவட்டத்திலுள்ள அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதை கமாண்டர் பூடியோனோ உறுதிப்படுத்தினார்.

அவரது குடும்பத்தினரும் அவர் அணிந்திருந்த நெக்ல்ஸ் மற்றும் வளையல்கள் அவருடையதுதான் என்பதை உறுதிப்படுத்தினர்.