இலங்கைக்கு எதிராக ஆவணப்படம் தயாரிக்க மக்ரே நிதி திரட்டுவதாக குற்றச்சாட்டு

callum_macre_002இலங்கைக்கு எதிராக ஆவணப்படமொன்றை தயாரிக்க சனல்4 ஊடகத்தின் இயக்குனர் கலம் மக்ரே நிதி திரட்டி வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கலம் மக்ரே இலங்கைக்கு எதிராக மற்றமொரு புதிய ஆவணப்படம் ஒன்றை தயாரிக்க ஆயத்தமாகி வருகின்றார்.

இந்த ஆவணப்படத்தை தயாரிப்பதற்கு 10,000 ஸ்ரெலிங் பவுண்ட்கள் நிதி திரட்டப்பட்டு வருகின்றது.

விசேட நிதியமொன்றை ஆரம்பித்து அதன் ஊடாக இவ்வாறு பணம் திரட்டப்பட உள்ளது.

இலங்கைக்கு எதிராக போலிக் குற்றச்சாட்டு சுமத்தி இவ்வாறு பணம் திரட்டப்பட்டு வருவதாக லண்டனைச் சேர்ந்த இலங்கையர் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கிங்ஸ்வாடர் என்னும் பெயரில் இந்த நிதியம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சனல்4 நிறுவனத்திற்காக ஏற்கனவே இவ்வாறான நிதியங்களின் ஊடாக மக்ரே பணம் திரட்டியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

-http://www.tamilwin.com

TAGS: