குதப்புணர்ச்சி வழக்கில் ஐந்தாண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அன்வார் இப்ராகிம் சுங்கை பூலோ சிறைச்சாலையில் தனி அறையில் வைக்கப்பட்டிருக்கிறார்.
அங்கு மற்ற கைதிகளும் இப்படித் தனி அறைகளில் சிறை வைக்கப்பட்டிருப்பதாக சிறைச்சாலை தலைமை இயக்குனர் சுல்கிப்ளி ஒமார் கூறினார்.
“ஒரு தனி சிறை அறை அவருக்கு மட்டுமே. உணவு, உடை, சிறைச்சூழல் எல்லாமே மற்ற கைதிகளுக்கு உள்ளதுபோலவே”, என்றவர் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. .
குடும்ப உறுப்பினர்கள் அவரைச் சென்று காணலாம். ஆனால் மாதத்துக்கொரு முறை 45 நிமிடத்துக்கு மட்டுமே..
சிவப்புக் கழுத்துப்பட்டை கைதியாக உள்ள அன்வாரின் நிலை நீலநிற கழுத்துப்பட்டை கைதியாக உயரும்போது அதில் மாற்றம் ஏற்படும்.
“நீலநிற கழுத்துப்பட்டை கொண்ட கைதிகளை வாரத்துக்கு ஒருமுறை சந்திக்கலாம்”, என்றவர் தெரிவித்தார்.