பினாங்கில் அன்வார்-ஆதரவு பக்கத்தான் பேரணி திட்டப்படி நடக்கும்

malikபாஸ்  ஆன்மிகத்  தலைவர்  நிக்  அசிஸ்  நிக்  மாட்  காலமானார்  என்றாலும், பினாங்கு  அரசாங்கம்  ஏற்பாடு  செய்துள்ள  அன்வாருக்கு  ஆதரவு  தெரிவிக்கும்  நிகழ்வு  நாளை  இரவு  திட்டமிட்டபடி  நடக்கும்.

“மக்களின்  சுதந்திரம்”  என்ற  தலைப்புக்  கொண்ட  அந்நிகழ்வு  செபராங்  பிறையில்  இரவு  மணி  9-க்கு  நடைபெறும்  என  மாநில  ஆட்சிக் குழு  உறுப்பினர்  அப்துல்  மாலிக்  காசிம்  தெரிவித்தார்.

“அது  முன்பே  திட்டமிடப்பட்ட  ஒரு  நிகழ்வு. பேச்சாளர்களும்  கலந்துகொள்வதை  உறுதிப்படுத்தி விட்டார்கள்”, என  மாலிக்  கூறினார்.