லிபியாவில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளின் நிலைகளை குறி வைத்து விமான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக எகிப்து அறிவித்துள்ளது.
தாக்குதல்கள் மேற்கொள்வதற்கு சில மணி நேரத்திற்கு முன்னரே 21 எகிப்திய கத்தோலிகர்கள் சிரசேதம் செய்யப்பட்ட காணொளி நாட ஐ.எஸ்களால் வெளியிடப்பட்டது.
ஐ.எஸ் தீவிரவாதிகளின் முகாம்கள் மற்றும் பயிற்சி கூடங்களை குறிவைத்து விமான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக லிபிய தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
தீவிரவாதிகளின் துறைமுக நகரான டேர்னா தற்போது ஐ.எஸ்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
-http://world.lankasri.com