45 பேரை உயிருடன் எரித்து கொன்ற ஐ.எஸ்.ஐ.எஸ்

45_burned_001ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் ஈராக்கில் 45 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்ந்து பல அட்டூழியங்களை அரங்கேற்றி வருகின்றன.

இந்நிலையில் ஈராக்கின் மேற்கு நகரான அல்பாக்தாதியில்(Al-Baghdadi)45 பேரை ஐ.எஸ் தீவிரவாதிகள் உயிருடன் எரித்து கொன்றுள்ளனர்.

இதுகுறித்து ஈராக்கின் பொலிஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், இவ்வாறு எரிக்கப்பட்டவர்கள் யார்? என்ன காரணத்துக்காக எரிக்கப்பட்டுள்ளார்கள்? என்பது சரியாக தெரியவில்லை.

எனினும் அவர்களில் சிலர் பாதுகாப்பு அதிகாரிகளாக இருப்பர் என நம்புகிறோம் என தெரிவித்துள்ளார்.

மேலும் பாதுகாப்பு படையினரின் குடும்பத்தினர் இருக்கும் வீடுகள் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் இருக்கும் வீடுகள் சிலவற்றை சுற்றிவளைத்துள்ளதால், இது தொடர்பாக பொலிஸ் உயரதிகாரி அரசாங்கத்திடமும், சர்வதேச சமூகத்திடமும் உதவி கோரியுள்ளார்.

-http://world.lankasri.com