அல்தான்துயா கொலை சம்பந்தப்பட்ட அனைத்தையும் வெளியிட அக்கொலை சம்பந்தமாக மரண தண்டனை பெற்றுள்ள சிருல் அஸார் ஒமார் விரும்பினால் அது அவருடைய உரிமை என்று தற்காப்பு அமைச்சரும் அம்னோ உதவித் தலைவருமான ஹிசாமுடின் ஹுசேன் இன்று கூறினார்.
“அது அவரது உரிமை”, என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார். அதற்கு மேல் அவர் எதுவும் கூற மறுத்து விட்டார்.
“அவர் என்ன சொல்லப் போகிறார் என்பது எனக்குத் தெரியாது. ஆக நான் என்ன சொல்ல முடியும்?”, என்றாரவர்.
தற்போது ஆஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சிருல் இக்கொலை பற்றிய அனைத்தையும் ஆஸ்திரேலிய ஊடகங்களுடலான நேர்காணலில் கூறுவது பற்றி யோசித்து வருவதாக மலேசியாகினியிடம் கூறினார்.
ஆப்பு கண்ணுக்கு தெரியுது
வெளியிடுவது அவரது உரிமை! அந்தச் செய்தியை இங்கு வெளியிடாமல் இருப்பது உங்கள் உரிமை! அதைப் பார்த்துக் கொண்டிருப்பது எங்களது பொறுமை! நாங்களும் எருமைகளாக இருக்க பழகிக்கொண்டோம்!
அடுத்த பிரதமர் நான்தான் என்ற நம்பிக்கை வந்து விட்டதுபோல் தெரிகிறது.