ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்களின் நிதி தேவைக்காக உடல் உறுப்புகளை கொள்ளையடிப்பதாக ஐ.நா தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ், பிணைக்கைதிகளின் தலையைத் துண்டித்து அதை வீடியோவாய் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மற்றொரு அதிர்ச்சி சம்பவமாக ஐ.எஸ். தீவிரவாதிகள் நிதி தேவைக்காக உடல் உறுப்புகளை கொள்ளை அடிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக விசாரிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் கேட்டுக் கொண்டுள்ள ஐ.நா.விற்கான ஈராக் தூதர் முகமது அல்ஹாகிம்(Mohammed Alhaahim) செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த சில வாரங்களால் மீட்கப்பட்ட சடலங்களில் அறுவை சிகிச்சை கீறல்கள் காணப்பட்டது.
சிறுநீரகம் மற்றும் மனித உடலில் பிற உடல் உறுப்புகள் இல்லாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
நாங்கள் சடலங்களை வைத்துள்ளோம், நீங்கள் வாருங்கள், விசாரணை நடத்துங்கள்.
மேலும் சடலங்களில் முக்கியமான பாகங்கள் காணப்படவில்லை என்பது மிகவும் தெளிவானது என கூறியுள்ளார்.
இதற்கிடையே மொசூல்(Mosul) நகரில் மனித உடல் உறுப்புகளை எடுக்க மறுத்த 12 மருத்துவர்களையும் ஐ.எஸ். தீவிரவாதிகள் கொலை செய்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் தீவிரவாதிகளாலும், சண்டையிலும் 790 பேர் பலியாகியுள்ளனர் என்றும் பணத்திற்காக உடல் உறுப்புகளை திருடுகின்றனர் எனவும் ஈராக்கிற்கான ஐ.நா. தூதர் நிகோலே மலாதேனோவ்(Nikolo Maladenev) தெரிவித்துள்ளார்.
-http://world.lankasri.com
உன்மையாந இஸ்லாமோ!
சரி……நாங்க நம்ம்பிட்டோம்