கிளந்தான் மாநில சட்டமன்றத்தின் அடுத்த கூட்டத் தொடரில் கிளந்தான் மாநில அரசு அதன் ஹூடுட் சட்ட திருத்த மசோதாவை மார்ச் 18 இல் தாக்கல் செய்கிறது.
துணை மந்திரி புசார் முகமட் அமர் நிக் அப்துல்லா இதனை நேற்று உள்ளூர் சீன மன்றங்களின் தலைவர்கள் அளித்த சீன புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்ட போது கூறியதாக சின் சியு டெய்லி கூறுகிறது.
மார்ச் 16 – 19 ஆம் தேதிகளுக்கிடையில் நடைபெறவிருக்கும் அச்சட்டமன்றத்தின் கூட்டம் செம்பகா சட்டமன்ற இடைத் தேர்தல் பரப்புரை காலத்தில் தொடங்குகிறது.
நைஜீரிய நாட்டின் போக்கோ ஹாராம், ஈராக் நாட்டின் இசிஸ் போன்று கிளந்தானின் ஹூடுட் சட்டமும் அமையுமோ! அவர்களும் இஸ்லாமிய சட்டம் என்று தான் கூறுகிறார்கள். இவர்களும் இஸ்லாமிய சட்டம் என்று தான் கூறுகிறார்கள்! இந்தப் பயமுறுத்தல் நாடகம் தொடர் கதையா….?
நான் வரவேற்கிறேன் …..
என்னைப்பொறுத்த மட்டில் முஸ்லிம்கள் எதைவேண்டுமானாலும் வைத்து கொள்ளட்டும். என்னுடைய சுதந்திரத்தை பறிப்பது அடக்குமுறை — ஆதலின் நம்மை அவர்களின் சட்டங்கள் பாதிக்ககூடாது. ஆனாலும் எனக்கு சந்தேகம்தான் காரணம் MIC MCA ஜால்ராக்கள் நம்மை இதிலும் விற்றுவிடுவான்கள்
எதிர்கட்சிகளுக்கு வாக்களித்தால் கிளந்தனைப் போன்று ஹூடுட் சட்டம் வந்துவிடும் என்று 20 ஆண்டுகளாக அள்ளிவிட்டுக் கொண்டிருண்டிருந்தார்களே, ம.இ.கா.வும், ம.சீ.சவும். அப்படியென்றால் இன்னும் இந்த சட்டம் அமுலுக்கு வரவேயில்லையா? திருடர்களின் விரல்கள் வெட்டப்படுவதும், கர்ப்பழிப்பவனை கல்லால் அடித்துக் கொள்வதும், மதுக் கடைகள் மூடப் படுவதையும் பார்க்க ஆவலாய் உள்ளது.
அம்னோவில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் இதற்கு ஆதரவு தெரிவிப்பார்களா ?? பெரும்பாலோர் இஸ்லாமிய சட்டத்துக்கு எதிரானவர்கள்தானே??? அடுத்தது என்ன?? மலேசியா ஒரு இஸ்லாமிய நாடு என்ற பிரகடனமா?? அன்னார் கர்ப்பாலின் கர்ஜிக்கும் ஒலி அவரின் கொள்கை என் காதில் உரக்கக் கேட்கிறது…தொடரட்டும் டிஎபியின் நிலை.
மீண்டும் இறைவன் ஒரு பாடத்தை கற்பிக்கவா?.
பாரிசானில் உள்ள இந்தியர் , சீனர் கட்சிகளே ஏன் மௌனம் ? அம்னோ ஆட்டத்தில் உங்கள் பங்கு உள்ளதோ ?