குதப்புணர்ச்சி வழக்கு 2 இல் ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள அன்வார் இப்ராகிம் அரச மன்னிப்பு கோருவதற்கான கால அவகாசம் காலாவதியாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக அவரது குடும்பத்தினர் அவருக்கு அரச மன்னிப்பு கோரும் விண்னப்பத்தை அரண்மனையில் சார்வு செய்தனர்.
“அரச மன்னிப்புக்கான முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றங்கள் குற்றவாளி என தீர்ப்பளித்திருக்கலாம், ஆனால் எங்களுடைய தகப்பனார் ஒரு நிரபாரதி என்று நாங்கள் ஒரு குடும்பமாக தொடர்ந்து கூறிவருகிறோம்.
“பெடரல் அரசமைப்புச் சட்ட விதி 42 இன் கீழ், உண்மையாக நடந்த அனைத்து செயல்களின் அடிப்படையில், நீதியின் பெயரில் அரச அமைப்பு முறை எங்களுடைய விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ளும் என்று நம்புகிறோம்.
“கடினமான சூழ்நிலையில் இருக்கும் இந்நாட்டு குடிமகனுக்கு உதவக்கூடிய அனைத்தையும் நாங்கள் நாடுவோம், அவற்றை பயன்படுத்துவோம்”, என்று அன்வாரின் மகள் நூருல் நுஹா ஓர் அறிக்கையில் கூறினார்.
இன்று அன்வாரின் மூத்த மகளும் லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினருமான நூருல் இஸ்ஸாவுக்கும் நாடாளுமன்ற தேவான் ரக்யாட்டின் தலைவர் பண்டிகார் அமின் மூலியாவுக்கும் இடையில் ஒரு சந்திப்பு நடந்ததாக மாலெக் ஹுசேன், எதிரணித் தலைவரின் நாடாளுமன்ற விவகார அலுவலகத்தின் தலைவர், கூறினார்.
அன்வாரின் குடும்பத்தினர் தாக்கல் செய்துள்ள விண்ணப்பத்தை பேரரசர் தள்ளுபடி செய்தால் மட்டுமே பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற இருக்கை காலியானதாக அறிவிக்கப்படும் என்று பண்டிகார் பின்னர் வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறினார்.
அன்வார் குடும்பத்தினரின் விண்ணப்பம் இன்று பிற்பகல் மணி 3.30 க்கு இஸ்தானா நெகாராவில் தாக்கல் செய்யப்பட்டது என்று பிகேஆர் உதவித் தலைவர் தியன் சுவா பெர்னாமாவிடம் கூறினார்.
அன்வார் ‘உள்ளே’ இருந்தால், அவரது செல்வாக்கு உயரும். ‘வெளியே’ இருந்தால் அவரது மதிப்பு சரியும். அரசியலில் தியாகம் என்பது இன்றியமையாதது. பெடரல் அரசமைப்பு 42 சட்டவிதியின் கீழ், குற்றம் புரிந்தவர்களுக்கு மட்டுமே மன்னிப்பு. அன்வார், தான் எவ்வித குற்றமும் புரியவில்லை என்கிறார். பின் எதற்காக மன்னிப்பு.? ஆகவே,அரச முறையீடு செய்வதும் அன்வாருக்கு கேவலம். இந்த முறையீடு தோல்வி கண்டால் அதைவிட கேவலம். 27 ஆண்டுகள் நெல்சன் மண்டேலா சிறையில் இருந்துள்ளார் என்பது ஞாபகமிருக்கட்டும்.
அரண்மனை ஏற்றுக்கொள்ளலாம் சில நிபந்தனைகளுடன். குறிப்பாக அரசியலில் தலியீடு தவிர்க்கப்பட வேண்டும்!
அன்வார் குடும்பம் அரச மன்னிப்பிற்கு கோரிக்கை செய்திருக்க கூடாது.அஃது அன்வார் குற்றம் செய்ததை போல வகைப்படும்…மேலும்,மன்னிப்பு ஏற்றுக்கொள்ளப்படு அன்வார் விடுவிக்கப்பட்டால் அவர் மீதிலான மதிப்பும் நம்பிக்கையும் மக்கள் மத்தியில் சரிந்து விடும்…………
சிங்கம்பக்குவப்பட்டடு சரியானதிசையில் கருத்திட்டதற்கு பாராட்டுகள்.
செய்யறதையும் செஞ்சிபுட்டு..மன்னிப்பா?? எனக்கு தமிழ்ல புடிக்காத ஒரே வார்த்தை ” மன்னிப்பு” அவ்வ்வ்வ்வ்…
எல்லாம் சரி, அன்வாருக்கு வயதாகிறது. நெல்சன் போல இளைஞர் அல்ல. மேலும் முதுகு வலி , கழுத்து வலி உள்ளது. அதற்க்கு எதுவாக மாமியார் வீட்டில் மெத்தை தரமாண்டேன் என்கிறார்கள். ஒட்கார நாற்காலி மேசை இன்டர்நெட் தர மாட்டேன் என்கிறார்கள். கெட்ட மாமியார் வீடு போலும். உதய குமார் அவர்கள் உள்ளே இதையெல்லாம் தாங்கி கொண்டு தான் இருந்தார். வாயே திறக்க வில்லை இந்த அன்வார். போகட்டும் நம் தலைவர் வேறு அவர் அன்வார் வேறு. கலிலெயொ அவர்களை கோர்ட்டில் நிறுத்தி சூரியன் தான் பூமியை சுத்துகிறது என்று ஒத்து கொண்டால் விட்டு விடுகிறேன் என்றார்கள் கிருஸ்துவ பாதிரியார்கள். கலேலியோவும் அப்படியே என்று சத்தியம் அடித்து அப்படியே என்று கூரி விட்டு வெளியில் வந்து பத்திரிக்கையில் உண்மை ஒருநாள் தெரியும் அப்பா இவர்களுக்கு புரியும் என்றால் …. அப்படி எதாவது செய்யலாமா என்று அன்வார் யோசிக்கிறார் போலும் ….. உள்ளேயே இருக்கட்டும் அப்பத்தான் புரட்சி சூடு புடிக்கும் …..
அன்வாரின் செயலால் புழு போல் துடித்தவர் ஷாந்தி போலும். விடாதீர்கள் சாந்தியே!!! பட்டவனுக்குத்தானே பாதிப்பின் வேதனை தெரியும்!
போடி ………………. சாந்தி
“பட்டவனுக்குத்தானே பாதிப்பின் வேதனை தெரியும்! ” சைபுளுக்குத்தன் தெரியும் ஆப்பு…