இருநூறு ஆண்டுமுன்பு குமரி மண்ணில் இந்துக்களால் நடந்த வெறியாட்டத்தை …மறக்க முடியுமா ??ஆரிய இந்துக்களால் மனுதர்ம விதிகள் ஆட்சி செய்த காலத்தில்…..!! மறுக்க முடியுமா ?? அவற்றின் சில கொடுமைகள் …இதோ பாருங்கள் …!!
திருவிதாங்கூர் (தற்போதைய தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கேரளத்தில் உள்ள திருவனந்தபுரம் ) சமஸ்தானத்தின் கீழிருந்த குமரி மாவட்டத்தில் அன்று நிலவிய சாதிக் கொடுமை…!! தாழ்த்தப்பட்டவர்களும் சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட சாணார் [நாடார்], பரவர், ஈழவர், முக்குவர், புலையர்…. உள்ளிட்ட “18 சாதியைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணியமுடியாது. அப்படி அணிவது மாபெரும் குற்றம்.”
சமஸ்தானத்தில் பெரும் எண்ணிக்கையில் இருந்தபோதும் குறைந்த எண்ணிக்கையில் இருந்த நம்பூதிரி(பார்ப்பனர்கள்) மற்றும் உயர் சாதி நாயர்கள் பிள்ளைமார் இந்துக்களால் உலகில் மிகவும் கொடுரதனமாகவும் ,கேவலமாக நடத்தபெற்ற வரலாறு இன்றைய இளைய சமுதாயம் அறிந்திருக்க வேண்டும் .அதனால் இந்த பதிவு …!!
ஆரிய இந்துக்கள் அந்த காலத்தில் குளத்தில் உடைப்பு ஏற்பட்டால் தெய்வ குற்றம் எனக்கருதி ,தெய்வத்திற்கு வேண்டியவர்களான தாழ்த்தப்பட்ட அடிமைகளை உயிரோடு குளத்தில் உடைப்பெடுத்த இடத்தில போட்டு மூடியிருக்கிறார்கள் !!
மகாராஜா மார்த்தாண்ட வர்மா காலத்தில் அவருக்கு
அரசாங்கத்தில் ஏதாவது பிரச்சினை வந்தால் அதற்க்கு தெய்வ குற்றம்என நம்பூதிரி(பார்ப்பனர்கள்)
எடுத்து கூறி தெய்வ குற்றத்தை போக்க வேண்டும் எனில் தாழ்த்தப்பட்ட 15 குழந்தைகளை தெய்வத்திற்கு பலி கொடுக்கவேண்டும் என்றார்கள் .அதன்படி ஒரு மழை நாள் இரவு ஈழவர் சமுதாயத்தை சேர்ந்த 15 குழந்தைகள் திருவனந்த புரத்துக்கு பிடித்து செல்லப்பட்டு ,நம்பூதிரி(பார்ப்பனர்கள்) மந்திர ,தந்திர சடங்குகளுக்கு பின் நகரின் நான்கு மூலைகளிலும் உயரோடு புதைக்கபட்டார்கள் !! (அ.கா .பக்கம் .91-92 )
மேலும் எசமானுக்கு உடல் நலம் இல்லை எனில் ஆடு மாடுகளை பலி இடுவதற்கு பதிலாக எல்லா பெரிய கோவில்களிலும் நரபலி கொடுக்க பட்ட கொடுமைகள் கூட நடந்திருக்கிறது !! ( மறுபக்கம் ,ப.69)
கொடிய தீமைகளில் பாதிக்க பட்ட ஒரு பிரிவு தான்(சாணார்(நாடார் ) ,முக்குவர், புலையர்……) தாழ்த்தப்பட்ட மக்கள் இடுப்புக்கு மேலும், முட்டுக்கு கீழும் ஆடை அணியக்கூடாது என்றக் கட்டுப்பாடு இருந்தது . உயர்ந்த சாதி இந்துக்களின் முன்பு தாழ்த்தப்பட்ட பெண்கள் மறைக்கப்படாத மார்பகங்களுடன்தான் மரியாதை செலுத்த வேண்டும்.
மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி…
மார்புக்கு (முலை) வரி வசூலிப்பார்கள்…!!மார்பகம் அளவுக்கு ஏத்தா மாதிரி வரி; பெரிய மார்பகளென்றால் வரி அதிகம்…!! வரி கட்ட முடியாவிட்டால், இடுக்கியினை ( பனைமரத்து பூவை பத படுத்த பயன்படுத்துவது ) கொண்டு மார்பகங்களை திருகுவார்களாம் …சில இடங்களில் முலைகள் அறுத்து எறியப் பட்டது…!! என்ன கொடுமை இந்த கொடுமை உலகில் நடந்ததுண்டா…?
கோவில் தெருக்களில் செல்வதற்கும், உயர்சாதியினரின் தெருக்களில் செல்லவும், குளம், கிணறுகளில் தண்ணீர் எடுக்கவும், குளிக்கவும், காற்றோட்டமுள்ள வீடுகளில் வசிக்கவும் கூட தடை விதிக்கப்பட்டிருந்தது…!!
சாணார்(நாடார் ),முக்குவர், புலையர்… மக்கள் திருமணங்களில் தாலி கட்டுவதற்குக் கூட வரி விதிக்கப்பட்டது..!! பசுக்கள், மண்வெட்டிகள், அரிவாள்களுக்கும் கூட வரி விதிக்கப்பட்டது…!! பனைத் தொழில் செய்பவர்கள் பனை மரத்திற்கும் கூட வரி செலுத்த வேண்டும் என்ற பெயரில் கொத்தடிமைகளாகக் கூலியின்றி வேலை செய்ய வேண்டும்…!!
சாணார் (நாடார் ),முக்குவர், புலையர்… … மக்கள் தீண்டத்தகாதவர்களென்றும் தள்ளி வைக்கப்பட்டனர். பெண்கள் மேலாடை அணிவதற்கும், தெய்வத்தை வழிபடுவதற்கும் கூடத் தடை விதிக்கப்பட்டிருந்தது…!!
இன்னும் பாருங்கள் நாகர்கோயில் செல்லும் வழியில் தாளக்குடி எனும் கிராமம். அங்கு சாம்பவர் சாதியைச் சார்ந்த கர்ப்பிணி பெண் மாடத்தியை, மேலாடை அணிந்ததற்காக ஆதிக்கசாதியினர் அடிமையாய் வைத்திருந்தனர். அவரை மாட்டுக்குப் பதிலாய் கலப்பையில் பூட்டி நிலத்தை உழுது கொன்றனர். இந்த கொடுமை 19ம் நூற்றாண்டில் நடந்தது…!!
கன்னியாகுமரி அருகேயுள்ள கொட்டாரத்தில் திருமணமான சில நாட்களில் தாலி, மேலாடையுடன் வந்த பெண் அரசாணையை எதிர்த்த குற்றத்துக்காக பொது இடத்தில் தாலியறுத்து உடை களைந்து அரசுப் படையால் கொலை செய்யப்பட்டார். அந்த இடம் இன்றும் தாலியறுத்தான் சந்தை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது!!
மேலாடை அணிந்ததற்காக சிலரைச் சுடுமணலில் நாள் முழுவதும் நிற்க வைத்தார்கள் மேலாடை அணிந்த பெண்களின் மார்புகளை வெட்டினார்கள்…!!
இதையறிந்த அய்யா வைகுந்தர் கொடுமைகளுக்கு ஆளான மக்களிடம், “மார்பில் ஆடையணியுங்கள்…!! முட்டுக்குக் கீழ் துணி கட்டுங்கள்….!! தங்கத்தில் தாலி கட்டுங்கள்….!! இடுப்பில் குடம் வைத்துத் தண்ணீர் எடுங்கள்…!! கோவில்களை நீங்களே கருவறையில் சென்று பூசை செய்யுங்கள்…!! வணங்குங்கள்” என்றார்.
பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கூட “திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நிலவும் சாதியக் கொடுமைகளைப் போன்று உலகில் வேறெங்கும் கண்டதில்லை” என எழுதியுள்ளனர்…!!
இக்கொடுமைகளைக் கண்டதனால் தான் விவேகானந்தர் குமரிக்கு வந்த பொழுது, “திருவிதாங்கூர் சமஸ்தானம் பைத்தியக்காரர்கள் வாழும் இடம்” எனக் குறிப்பிட்டார்…!!
இது தமிழர் வலாற்றின் கறைகள்…!! காலம் மாறலாம் .வரலாறு தெரியாமல் இருந்தால், எதிர் காலம் மதவாத சத்திகளிடம் அடிமை பட்டு விட கூடாது !!
–தன்மான தமிழன்
19ம் நூற்றாண்டிலும் கடவுள் இல்லையா?
அட இன்னுமா உங்கள் சாதி தொல்லை விடுபடவில்லை?? சாதியிலேயே குடியாய் இருந்து சாவதே மேல்!..
தன்மானத் தமிழரே! அவர்கள் தமிழர்களுக்கு மட்டும் தான் கொடுமை புரிந்தார்கள் என்பது தவறு. தாழ்த்தப்பட்ட மலையாளிகளும் அதே கொடுமைகளை அனுபவித்தார்கள் என்பதும் உண்மை. தாழ்த்தப்பட்டவர்கள் மட்டும் தான் அவர்கள் கண்களுக்குத் தெரியுமே தவிர இனம் தெரிவதில்லை!
உலக தமிழர்களே இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு பார்பன அடிமையாக இருக்க போகிறிர்கள்? பார்பனன் திருமண (தாலிகட்டும்) நேரத்தில் ஓதும் மந்திரத்தின் தமிழாக்கம் தெரியுமா? அதன் அர்த்தம் தெரிந்துகொள், தெரிந்தால், தெரிந்துமா? ஊனமாக இருகிறிர்கள்?
தமிழன் அவர்களே ,நீங்கள் குறிப்பிட்ட அந்த கேவலமான சமஸ்கிருத திருமண மந்திரத்தை ,தமிழில் மொழியாக்கம் செய்து இங்கே வெளியிடுங்கள் . தன்மானமில்லாத தமிழர்கள் நாட்டில் அதிகம் . நல்ல வேலை எனது திருமணம் 2007 ஆம் ஆண்டு தமிழ் தமிழ் பெரியோரால் தமிழ் திருமணமாக நடத்தப்பட்டது .(அய்யர் முன்னிலையில் அல்ல )
tamilan சொல்லும் அந்த மந்திரத்தை இங்கே மொழி பெயர்த்துப் போட்டால் தமிழினமே ‘திருமுறை திருமணத்திற்கு’ மாறி விடுவார்கள். அத்தைகைய அசிங்கமான வழக்கை கொண்டது வைதீக பண்பாடு என்றால் மிகையாகாது.
ஆபிரகாம் சொன்னது உண்மைதான். ஆரிய பார்பனர்களாகட்டும் நம்பூதிரிகலாகட்டும் அன்றும் சரி இன்றும் சரி அவர்தம் ஆணவச் செருக்குக்கு இனம் ஒரு பொருட்டு அல்ல. அவரைச் சாராத சூத்திரர் அனைவருமே தீண்டத்தகாதோர்தான். அன்றைய பார்பனர் செய்த கொடுமைகளுக்கும், துரோகங்களுக்கு இன்றைய இளைய தலைமுறை பழியேற்பது அவரவர் செய்த “புண்ணியமோ”?. தெய்வம் நின்று கொல்லும் என்பார்களே. அது இதுதானோ?.
வெள்ளியூர் முருகரே தாங்கள் கேட்ட கேள்விக்கு கீழ்காணும் சுட்டியில் பதில் உள்ளது. புரியாத சம்ஸ்கிருத மந்திரங்களைக் கொண்டு ஓதப்படும் பொருள் என்னவென்று பலரும் அறிந்துக் கொள்ளட்டும்:
http://www.tamilauthors.com/01/65.html
நன்றி நண்பர் தேனீ அவர்களே . ஐயா ஆபிரகாம் நலமாக உள்ளீர்களா தோழரே ?
ஜாதி என்ற போர்வையில் இன்றும்தான் நம் சமுதாயம் சீரழிகிறது என்பதை இன்றும்கூட நம் தமிழர்கள் அறிந்தும் அறியாமல் வாழ்வது வேடிக்கையாக உள்ளது ! ஒற்றுமை உடன் வழத் தெரியாத மக்கள் நம் மக்களே ! அதனாலதான் இன்றும்கூட மற்ற இனத்தவர்கள் நம்மை ஏளனமாக பார்கின்றனர் நாம் தானே இவர்களுக்கு வழி காட்டி !
செய்திகளை தகுதி அற்றவையாக இருந்தாலோ தவறாக இருந்தாலோ அதனை திருத்துவது ஆசிரியரின் கடமை . வாசகர் கருத்துக்கள் பரவாயில்லை ஆனால் செய்தி என்றால் தவறான அமசங்கள் இடம் பெறக்கூஊடாது இயன்றவரை எடிட் செய்யுங்கள்
தன்மான தமிழனே,காலம் கடந்து போன விசயத்தை இப்ப எழுதி என்னையா ஆகபோகுது.நம் இனத்தின் ஓட்ருமைக்காக / உயர்வுக்காக நல்ல பல சரித்திரங்கள் உண்டு.எழுதினால் நன்மை பயிர்க்கும். நன்றி.
ஹஹஹ
என்னமா கார்டூன் வரைகிறார்கள் இவர்கள் ….
சாதி ஒழிய வேண்டும் என்று சொல்லி பயன் இல்லை.நாம் யாவரும் உள்ளத்தாலும் செயலாலும் ஒன்றுபட வேண்டும்.நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் நம் இனத்தின் உயர்வுக்கு வழிவகுப்பதாக இருக்கவேண்டும்.இது நாளடைவில் சாதிகள் மறைய வழி வகுக்கும்.
தண்ணீர்மலையாரே! உங்களுடைய மனப்பக்குவம் தான் நமக்குத் தேவை. வீழ்ச்சியைப் பற்றியே பேசிக்கொண்டிராமல் வளர்ச்சியைப் பற்றித் தான் யோசிக்க வேண்டும்; பேச வேண்டும். வெள்ளியூராரே! நமது நாட்டில் கூனிக்குறுகி வாழும் நமது சமூகம் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும். சீன சமூகத்தைப் பார்த்து நாம் திருந்த வேண்டும். நம்பூதிரிகள் எல்லாம் இங்கு வந்து நம்ம ஊர் பூதிரிகளிடம் பேர் போட முடியாது! வீட்டுத் தள்ளுங்கள்!
தண்ணீர்மலையாரே! உங்களுடைய மனப்பக்குவம் தான் நமக்குத் தேவை. வீழ்ச்சியைப் பற்றியே பேசிக்கொண்டிராமல் வளர்ச்சியைப் பற்றித் தான் யோசிக்க வேண்டும்; பேச வேண்டும். வெள்ளியூராரே! நமது நாட்டில் கூனிக்குறுகி வாழும் நமது சமூகம் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும். சீன சமூகத்தைப் பார்த்து நாம் திருந்த வேண்டும். நம்பூதிரிகள் எல்லாம் இங்கு வந்து நம்ம ஊர் பூதிரிகளிடம் பேர் போட முடியாது! வீட்டுத் தள்ளுங்கள்!
பல சில வரலாற்று காயங்களை மறக்கவும் கூடாது, மன்னிக்கவும் கூடாது.அதே நேரத்தில் அதை பத்தி சிந்தித்து நேரத்தை வினாக்காமல் முன்னேற்றத்தை நோக்கி செல்வோம்.நம்மளை பார்த்தல் அய்யர்வாளுக்கும் நம்புதிரிகளுக்கும் பண்டிட்களுக்கும் ராவுகளுக்கும் கிளி பிடிக்க வைக்கணும்.
சமண – பௌத்த மதங்களை அழித்த சைவம்!
இனபடுக்கொலையில் யாரும் யாருக்கும் சளைத்தவர்களல்ல
திருவாங்கூரில் நடந்தது ஜாதி வெறியாட்டம் மட்டுமல்ல வர்க்க போராடமும் தான்.ஜாதி வெறி இருப்பினும் நாயர்களும், சாணார்களும் மற்ற சமூகத்தவரும் இக்கலவரத்தில் தங்களுடைய சமூக அந்தஸ்தையும்,செல்வாக்கையும் நிலைநாட்ட கலவரத்தில் ஈடுப்பட்டுள்ளார்கள். ஆனாலும் மத வெறியில் சைவர்களும் கொடுங்கோன்மைக்கு சளைத்தவர்கள் அல்ல.மத வெறி எப்படி தாண்டவம் ஆடியது என்பதை கீழ் உள்ள சம்பவம். சொல்லும்.
கி.பி.ஏழாம் நூற்றாண்டில் சைவ அடியார்களான நாயன்மார்களும், வைணவ அடியார்களான ஆழ்வார்களும் ‘பக்தி’ இயக்கத்தை ஆயுதமாகக் கொண்டு சமண பௌத்த மதங்களை அழித்திட முற்பட்டனர்.’சமண சமயம் பலவிதத்தில் தாக்கப்பட்டது. கொடுமைப் படுத்துதல், கழுவேற்றுதல், கொலை செய்தல், கலகம் விளைவித்தல், நில புலங்களைக் கவர்தல் முதலிய செயல்கள் நிகழ்ந்ததைக் காண்கிறோம். இந்துக்கள் சமண மதத்தை அழித்த செய்திகள் பல உள்ளன.
-மயிலை சீனி வேங்கடசாமி, சமணமும் தமிழும்,
Page 68.
* சமண மதம் துடைக்கப் படுதல்
சமண சமயத்தவனாக இருந்த பல்லவ மன்னன் மகேந்திரவர்மனைச் சைவ சமயத்தில் திருநாவுக்கரசர் சேர்த்தார். அத்தோடு நின்று விடாமல், தாம் அப்பர், தருமசேனர் என்னும் பெயருடன் தங்கியிருந்த பாடலிபுத்திர சமணப் பள்ளியை இடித்துத் தள்ளவும் ஏற்பாடு செய்தார்.
பல்லவ அரசனும் சமணக் கல்லூரியை ஒழித்தான். பள்ளிகளையும் பாழிகளையும் அழித்தான். அவற்றின் சிதைவுகளைக் கொண்டு வந்து திருவதிகையிற் ‘குணதரஈச்சரம்’ என்று தன் பெயரால் கோவில் ஒன்று கட்டினான்.
-Page 275, பல்லவர் வரலாறு,
* சமணர்கள் அனுபவித்த கொடுமை!
‘மன்னன் சமண விரோதியாகி, பாண்டிய நாட்டிலுள்ள சமணர்களை வெட்டி வீழ்த்தி, அவர்கள் சொத்து, சுதந்திரம், கோயில், குளம், மடம் முதலியவைகளைக் கைப்பற்றும்படி தன் சைன்யங்களை ஏவியதோடு, தன் முன்னிலையிலேயே அநேக ஆயிரக்கணக்கான சமண முனிவர்களை வலியப் பிடித்து கழுமரத்திலேற்றி பதைக்கப் பதைக்கக் கொன்றான்.’
-அ.பொன்னம்பலம், அப்பரும் சமபந்தரும், சென்னை,
1983, Page 28
‘கழுவிலேறாத சமணர்களை எல்லாம், சைவாச்சாரத்தைக் கொண்டவர்கள் ஒவ்வொருத்தராகப் பிடித்து அந்த முத்தலைக் கழுமரங்களிலே ஏற்றியிருத்திக் கொன்றார்கள். அந்த சமணர்களுக்குப் பாரம்பரியாக அடியார்களானவர்கள் சாவப்பயந்து மனங்குலைந்து விபூதி பூசிக் கொண்டார்கள். அந்த விபூதி கிடையாமல் பசுவின் கோமயத்தை எடுத்திட்டுக் கொண்டார்கள். அதுவும் கிடைக்காத சிலர் பசுவின் கன்றைத் தோள் மேலே தூக்கிப் போட்டுக் கொண்டார்கள்.’
‘விபூதி, கோமயம், பசுவின் கன்று இந்த மூன்றுங் கிடையாத சிலர் விபூதி பூசின நெற்றியுடனே நெற்றியை மோதிப் பூசிக் கொள்ள கோமயத்திலுமப்படியே மோதியிட்டுக் கொண்டும் இப்படியாகத் தங்கள் பாசங்களை வென்று பிழைக்க எண்ணினவர்களைக் கொல்லாமல் விட்டு விட்டனர்.’
-பூவை கலயாண சுந்தர முதலியார் பொழிப்புரை, திருவிளையாடற் புராணம்,சென்னை,
1925, Page 494.
நாய் நரி தின்ற சமணர் உடல்கள்!
விபூதி பூசியவர்கள் உயிர் தப்பினர். அதற்கு உடன் பட மறுத்ததால், கழுவிலேற்றிக் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் என்ன ஆயிற்று தெரியுமா?
‘கழுவிலேறி இறந்தவர்களெல்லாம் சுற்றப்பட்ட பருந்துகளும், காக்கைகளும், நரிகளும், நாய்களும், தொடர்ந்து கௌவிப் பிடித்திழுத்துத் தின்னக் கிடந்தார்கள்.’
‘மற்றிவர் தம்மை யூற்றஞ் செய்திலர் யாருஞ் சுற்றிய சேனங்காக நரிகணாய் தொடர்ந்து கௌவிப் பற்றிநின் றிர்த்துத் தின்னக் கிடந்தனர்.’
பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணம், உ.வே.சா.பதிப்பு, சென்னை,
1937, Page 1195.
…………………..வரலாறு நமக்கு பாடம் . எதிர்காலத்தை மனதில் வைத்து விவேகத்தோடு சிந்திப்போம் உழைப்போம் ஜப்பானியர்களை போல்
இன்று இப்பகுதியில் வலையேற்றப் பட்ட கருத்து ஒன்றைப் படித்தபொழுது ஒன்று தெளிவாகத் தெரிகின்றது. மலையாளிகளை புறம்சொன்னால், தானும் பதிலுக்கு தமிழர்களை புறம் சொல்ல இணையத்தை சுற்றி வந்து தான் தேடியது கிடைத்த மகிழ்ச்சியில் “இதோ பாருங்கள் தமிழருடைய அநியாங்கள்” என்று பறைசாற்றக் கிளம்பி விட்டார் ஒருவர். பிற வலைப் பூங்காவில் இருந்து அங்கே இருக்கும் கருத்துக்களை சற்றும் ஆராயாமல் அப்படியே இங்கே வெட்டி ஒட்டுவது கற்றவர்களுக்கு அழகல்ல. ஒருவர் ஒரு கருத்து தெரிவிக்கின்றார் என்றால் அக்கருத்தின் மூலத்தையும் அவர் பின்னணியும், அவர் அந்தக் கருத்தை எந்த நோக்கில் கொண்டு எழுதினார் என்பதை முதலில் அறிய வேண்டும். அதை விடுத்து வெட்டி ஒட்டி வித்தை காட்டும் புலவரின் அறிவு சொந்த புத்தியில்லாமல் சொல் புத்தி அளவில் இருப்பதைக் கண்டு வியக்கின்றேன்.
மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய சமணமும் தமிழும் எனும் நூலை முழுமையாக படிக்காமல் அவர் பின்னணியையும் அறியாமால், அப்புத்தகத்தில் இருந்து ஒரு பத்தியை மட்டும் போட்டு விட்டு பாருங்கள் சைவர்கள், சமணருக்கும் பௌத்த மதத்தினருக்கும் இழைத்த கொடுமைகளை என்று பாயாஸ் கோப்பு படம் காட்டினால் மட்டும் போதாது. ம.சி.வே. சிறந்த தமிழ் அறிஞர், தமிழர் பற்றாளர். இது சரி. அவர் திராவிட பாசறையைச் சேர்ந்தவர் என்பதும் உண்மை. அவருக்கு “இந்து மதம்” மீது நம்பிக்கையின்மை என்பதும் உண்மை. அதனால் அவர் சமணமும் தமிழும் என்ற தனது புத்தகத்தை சமயக் கண்ணோடு பார்க்காமல் சமூகக் கண்ணோடுதான் பார்த்திருக்க வேண்டும். அந்த புத்தகத்தின் முன்னுரையில் இவ்வாறு குறித்துள்ளார்:
“இயன்றவரையில் சான்றுகளையும் ஆதாரங்களையும் தேடி மறுபடியும் எழுதினேன். ஆனால், இது முற்பகுதியே. இப் பகுதியில் சமய வரலாறு மட்டும் பேசப்படுகிறது. பிற்பகுதி எழுதப்படுகிறது. அப்பகுதியில்தான் சமண சமயத்தினர் தமிழ் மொழிக்குச் செய்த தொண்டுகள் கூறப்படுகின்றன. அப் பகுதியும் விரைவில் வெளிவரக்கூடும்”.
ஆனால் அவர் கூறிய மறுபகுதி வந்ததாக நான் காணவில்லை. இந்த சமணமும் தமிழும் என்ற நூலில் அவர் சமண தத்துவங்களை கற்றறிந்த அளவுக்கு சைவ சித்தாந்தத்தை அறிந்தவராகத் தெரியவில்லை. மேலும் சமணம் வடக்கே இருந்து தெற்கே வந்தது கி.மு. 3 நூற்றாண்டு முதல் என்று வரையறை இடுகின்றார். இக்காலக் கட்டத்திற்கு முன் தெற்கே வாழ்ந்த மக்களின் சமூக நிலையை அவர் விரிவாக விளக்கத் தவறி உள்ளார். ஆக அவர் எடுத்துக் கொண்ட கரு சமண மதம் வந்த பிறகு நடந்தது என்ன என்பதே. சமண மதம் தெற்கே வருவதற்கு முன்பே தமிழர்களிடையே திணை அடிப்படையில் சமய வழிப்பாடு இருந்தது என்பதை நாம் தொல்காப்பியரின் வழி அறிந்தோம். இயல்பாக தமிழரிடையே இருந்த சமய வழிபாடுகளையும், நம்பிக்கைகளையும் எவ்வாறு சமணர் தகர்த்தனர்?. இதனை விளக்க ம.சி.வே. அவர் நூலில் எவ்வித முயற்சியும் எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை.
இயல்பாக தமிழரிடம் இருந்த சமய வழிபாடு, நம்பிக்கைகளை வேற்றொரு நிலைக்கு மாற்றுவது சுலபமான காரியமல்ல. அதனால் அரசன் எவ்வழி, குடிகள் அவ்வழி என்ற வித்தையை எவ்வாறு ஆரியர்கள் கற்று வைத்திருந்தனரோ அவ்வாறே சமணர்களும் கற்று வைத்திருந்தனர். சமணர்களும் முதலில் அரசனை மதம் மாற்றினர். அதைக் கொண்டு தமிழர்களிடையே இருந்த சமய வழிபாடுகளை நிர்பந்த படுத்தி தடுத்தனர் என்பதற்கு தேவாரத் திருப்பதிகங்களில் சான்றுகள் உள்ளன. பல சிவாலயங்கள் மூடப்பட்டு பக்தி காலத்தில் அவை மீண்டும் திறக்கப் பட்டன என்பது உண்மை. ஆக தமிழர்கள் தாமாகவே சமணத்திற்கு மதம் மாறினார்கள் என்பது உண்மை அல்ல மாறாக அரசாணையை வலுக்கட்டையமாக அவர்தம் கையில் எடுத்துக் கொண்டு தமிழர்களை சமண மதத்திற்கு மாற்றினர் என்பதுதான் உண்மை. எது செயற்கையாக வந்ததோ அது நீண்டு நிலைக்காது என்பதுதானே இயல்பு. அதைப் போலவே செயற்கையாக வந்த சமணம் தென்னகத்தில் ஒரு சில நூற்றாண்டுகள் நிலைத்து மாய்ந்தது. ஏன் என்பதும் எப்படி என்பதும்தான் இங்கே பிரச்சனை. இத்தோடு அந்த கி.பி. 7-ம் நூற்றாண்டில் மலையாளிகள் என்ற சமூகம் ஒன்று இல்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நாளை தொடரும்.
நான் எழுதிய கருத்தை (எங்கேயும் வெட்டி ஓட்ட வில்லை)…………………………………
மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் சைவத்தை தனியொரு பெருஞ்சமயமாக பார்க்காமல் அதையும் ‘இந்து மதம்’ என்ற கூட்டுக் குடும்பத்தில் சேர்த்து தம் நூலில் கருத்து எழுதியுள்ளார்.
“கி.பி.ஏழாம் நூற்றாண்டில் சைவ அடியார்களான நாயன்மார்களும், வைணவ அடியார்களான ஆழ்வார்களும் ‘பக்தி’ இயக்கத்தை ஆயுதமாகக் கொண்டு சமண பௌத்த மதங்களை அழித்திட முற்பட்டனர்.’சமண சமயம் பலவிதத்தில் தாக்கப்பட்டது. கொடுமைப் படுத்துதல், கழுவேற்றுதல், கொலை செய்தல், கலகம் விளைவித்தல், நில புலங்களைக் கவர்தல் முதலிய செயல்கள் நிகழ்ந்ததைக் காண்கிறோம். இந்துக்கள் சமண மதத்தை அழித்த செய்திகள் பல உள்ளன – மயிலை சீனி வேங்கடசாமி, சமணமும் தமிழும்,
இதற்கு அவருக்கு கிடைத்த தகவல்கள் பெரும்பாலும் சைவ புராணங்களில் இருந்துப் பெறப்பட்டவையே. சமணர்கள் 8,000 பேர் கழுவேற்றப்பட்டார்கள் என்பதும் சைவர்களுடைய புராணத்தில் இருந்து பெறப்பட்டவையே. இதை அடுத்து ஆழ்வார்களின் பிரபந்தத்திலிருந்து சில பாடல்களையும் தேர்வு பண்ணி போட்டிருக்கின்றார். இதே ம.சி.வே. புராணத்தைப் பற்றி கூறும் பொழுது இவ்வாறு கருத்துரைத்துள்ளார்:
“இயற்கைக்கு மேற்பட்ட இயல்புகளைக் கற்பித்துக் கதை எழுதுவது வழக்கம். இது எல்லா மதங்களுக்கும் இயல்பு. தம்முடைய மதப் பெரியார்களின் பெருமை, ஆற்றல், சிறப்பு, தெய்விகத் தன்மை முதலியவற்றை அதிகப்படுத்த வேண்டும் என்னும் சமய ஆர்வத்தினால் ஒவ்வொரு சமயத்தாரும் தத்தம் சமயப் பெரியாரைப் பற்றிப் பலவித செய்திகளைக் கற்பித்து விடுகிறார்கள்.”
திருவிளையாடற் புராணத்திற்கு, பொழிப்புரையும் உரைநடையும் கொடுத்த ஆசிரியர்களை மேற்கோள் காட்டி இங்கே எழுதினால் அது உண்மையாகி விடுமா?. திருவிளையாடல் புராணத்தில் உள்ள 64 படலங்களையும் படித்தவருக்குத்தான் தெரியும் அந்த புராணத்தின் நடை. இதற்கு 5-வது படலமான ‘திருமண படலத்தை’ படித்தால் தெரியும் சிவபிரானுக்கும் தடாகை பிராட்டியாருக்கும் நடக்கும் திருமணத்தை எவ்வாறு மிகைபடுத்தி எழுதபட்டுள்ளது என்பது தெரியவரும். அதுபோலவே சைவர் சமணர்களை வெற்றிக் கொண்டு 8,000 பேரை கழுவேற்றினர் என்பதும் மிகைபடுத்தப் பட்ட செய்தியாகும். இவ்வாறு பல்லாயிரம் பேர் கழுவேற்றப் பட்டார்கள் என்பது சமணர்கள் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாக கருதப்படும் அல்லவா. இது உண்மையாக இருந்தால், ஏன் இந்த தகவல்கள் சமண நூல்களில் காணப்படவில்லை?.
உண்மை எதுவென்றால் அனல், புனல் வாதத்தில் சமணர் ஆளுடைய பிள்ளையாரிடம் தோற்றது உண்மை. அதனால் சத்திய வாக்கு செய்த சில சமணர்கள் களுவேரினார்கள் என்பது உண்மை. அவர்கள் செய்த சத்தியத்தை திருஞானசம்பந்தர் தடுத்து நிறுத்தி இருந்தால் சமணர்கள் சத்தியத்தை மீறியவர்கள் என்ற பழிச் சொல்லுக்குப் பலியாகி அவர்தம் மதத்தை மக்கள் வெறுத்து ஒதுக்கி இருப்பார்கள். அந்நிலை ஏற்படாமல் இருக்க சம்பந்தர் களுவேற்றத்தைத் தடுக்கவில்லை. மேலும் அரசாணையை எதிர்த்தவர் என்ற பழிச் சொல்லும் பிள்ளையாருக்கு ஏற்படும் என்பதால் சம்பந்தர் அந்த களுவேற்றத்தைத் தடுக்கவில்லை என்பதே உண்மையாகும். இதை ஆராய்ந்துப் பார்க்காமல் அந்த தெரு நாய் குறைத்தது அதனால் நானும் குறைத்தேன் எனும் போக்கில் கருத்து எழுதக்கூடாது. மேலும் தொடரும்.
தமிழுக்கான உலக மொழி அறிஞர்கள் அங்கிகாரம் எங்கே?என்கிற கட்டுரையில் உங்களுக்கு நான் எழுதிய கடைசி comment ஐ வாசித்தீரா?
அப்படியே குழப்பிக் கொண்டு இருப்பது என்று இன்னும் கங்கணம் கட்டிக் கொண்டு இருகிறீர்களா .தெரியாமல் தான் கேற்கிறேன்,நீங்கள் எழுதுவதை எல்லாம் எங்கிருந்து எழுதுகிறிர்கள். படித்தவற்றின் மறு படிவம் தானே?அதுவும் copy paste தானே.கல்லை தோண்டி மண்ணை கிளரியா ஆராய்ந்தீர்.இது எந்த விதத்தில் அழகு என்று கொஞ்சம் விவரமாக சொல்லுங்களேன். மயிலை சீனி.வேங்கடசாமி கருத்தை எந்த நோக்கில் கொண்டு எழுதினார் என்பதை முதலில் அறிய வேண்டும் என்கிறீர்.அவரின் நோக்கம் என்னவாக இருக்கும் என்பதை குறித்து பாரதிதாசன் பாராட்டுகிறதை படித்தால் புரியும்.
தமிழையே வணிகமாக்கித்
தன்வீடும் மக்கள் சுற்றம்
தமிழிலே பிழைப்பதற்கும்
தலைமுறை தலைமுறைக்குத்
தமிழ் முதலாக்கிக் கொண்ட
பல்கலைத் தலைவன் எல்லாம்
தமிழ்ச் சீனி வேங்கடத்தின்
கால்தூசும் பெறாதார் என்பேன்
கவனியும் பாரதிதாசன் யாரை சாடுகிறார் என்று.உம்முடைய மற்ற கேள்விகளுக்கு அதிரடியாய் வருகிறேன்.பொறுத்தருளும்.
“ம.சி.வே. சிறந்த தமிழ் அறிஞர், தமிழர் பற்றாளர். இது சரி.” என்று முன்னமே குறித்து விட்டேனே. அதைத்தானே கவிஞர் பாரதிதாசனும் சொல்லியுள்ளார். கவிஞர் சாடியது “பல்கலைத் தலைவன்”. இது அவர்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடும் அதனை ஒட்டிய அரசியலும். அது நமக்குத் தேவை அற்றது. எமது கருத்தை எழுதும் முன்னமே பாரதிதாசணனின் அந்த கருத்தையும் படித்து விட்டேன் அப்பா. “கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக” என்று வள்ளுவர் சொன்னது எதனால். எல்லாவற்றையும் படித்தவன் பண்டிதனாகி விட முடியாது. பிழையின்றி கற்க வேண்டும். அதனால் பிறர் சொல்வதை வெறுமனே நம்பிக் கொண்டிராமல் நாமும் உண்மையை அறிந்து எழுதினால் செம்பருத்தி வாசகர்கள் நன்மை அடைவர். அதுவே எமது நோக்கம். இதை சண்டைக் களமாக்கி விட வேண்டாம். அப்புறம் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதருக்கு அர்த்தம் விளங்காமல் போய் விடும்.
* மயிலை சீனி.வேங்கடசாமிக்கு “இந்து மதம்” மீது நம்பிக்கையின்மை என்பதும் உண்மை. அதனால் அவர் சமணமும் தமிழும் என்ற தனது புத்தகத்தை சமயக் கண்ணோடு பார்க்காமல் சமூகக் கண்ணோடுதான் பார்த்திருக்க வேண்டும்.
**சீனி.வேங்கடசாமிவழிபாட்டுத் தலங்களுக்கும் சென்று ஆய்வு செய்தார். தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல் ஆகிய துறைகளில் அரிய களப்பணியாற்றினார். தென்னிந்திய எழுத்து முறைகள் யாவற்றையும் கற்றுத் தேர்ந்தார். பிராமி, கிரந்தம், தமிழ் என அனைத்து எழுத்துமுறை கல்வெட்டுகளைப் படித்து ஆராயும் திறன் பெற்றார். கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளையும் கற்றறிந்திருந்தார். இந்து சமய வரலாற்றாளர்கள் அதிகம் கவனம் செலுத்தாத சமண, புத்த சமய கோயில்களையும் தொல்லியல் களங்களையும் ஆய்வு செய்தார்.wiki
ஒரு தொண்டனுக்கு கட்சி விசுவாசமும் ஒரு பக்தனுக்கு பக்தியும் எப்படியோ ஒரு சரித்திர ஆய்வாளனுக்கு திறந்த மனச் சிந்தையும், விசாலமான பார்வையும் தேவை.திறம்பட ஒரு ஆய்வை செய்த இவரை சமயக் கண்ணோட்டத்தோடு ஆராயவில்லை என்று சொல்வது உமது குறுகிய இன,ஜாதி சமய வெறி கண்ணோட்டத்தையே வெளிப்படுத்துகிறது.
* “இயன்றவரையில் சான்றுகளையும் ஆதாரங்களையும் தேடி மறுபடியும் எழுதினேன். ஆனால், இது முற்பகுதியே. இப் பகுதியில் சமய வரலாறு மட்டும் பேசப்படுகிறது. பிற்பகுதி எழுதப்படுகிறது. அப்பகுதியில்தான் சமண சமயத்தினர் தமிழ் மொழிக்குச் செய்த தொண்டுகள் கூறப்படுகின்றன. அப் பகுதியும் விரைவில் வெளிவரக்கூடும்”….ஆனால் அவர் கூறிய மறுபகுதி வந்ததாக நான் காணவில்லை.
**ஒரு கொடுங்கோல் இனப்படு கொலை வரலாற்றுப் பதிவுகளை ஆராய்ந்தப் பின் சமணர்கள் தமிழுக்கு செய்த தொண்டினை தானே எழுதப் போகிறேன் என்றார்.தொண்டினை எழுதுவதற்க்கு என்ன தர்க்கம் வேண்டிருக்கிறது.அதில் எதை கண்டுபிடித்து எழுதுவீர் ?
*அவர் சமண தத்துவங்களை கற்றறிந்த அளவுக்கு சைவ சித்தாந்தத்தை அறிந்தவராகத் தெரியவில்லை.
**ஐயா ஒரு இனப் படுகொலை பதிவை ஆராய்ந்து எழுதுவதற்கு எதற்கு சமண சைவ தத்துவங்கள்.கடவுளை எவ்வாறு பாடி புகழ்ந்தார்கள் என்று அறியவா?கடவுள்ளை புகழ்ந்து பாடுபவரின் படு பாதக செயலை இப்பொழுது நீர் ஆராய்ந்துப் பாரும்.
* அரசன் எவ்வழி, குடிகள் அவ்வழி என்ற வித்தையை எவ்வாறு ஆரியர்கள் கற்று வைத்திருந்தனரோ அவ்வாறே சமணர்களும் கற்று வைத்திருந்தனர். சமணர்களும் முதலில் அரசனை மதம் மாற்றினர்.
**இந்த வித்தைக்கு தமிழர்கலும் சளைத்தவர்களல்ல என்பது தானே இந்த ஆய்வின் வெளிப்பாடு.இந்த வெறி ஆட்டத்தை தாங்களாகவே செய்திருந்தால் அரச நிந்தனைக்கு ஆளாயிருப்பார்கள்.ஆனால் அரச கட்டளையை பெற்றப் பின் தானே தானே இந்த கொலை படுபாதக செயலையே நிறைவேற்றினார்கள்.இதை உங்களால் மறுக்க முடியுமா.
இங்கு உங்களுக்கு பிடிக்காத வெட்டி ஒட்டிய,சுபேசன் என்பவருடைய கேள்விக்கு நீங்களே பதில் சொல்லுங்களேன் பார்க்கலாம்.
*** 1) சித்தர்களை கழுவில் ஏற்றிக் கொன்றதாக சொல்கிறீர்களே தவிர, அது பற்றி ஒரு குறிப்பும் தருகிறீர்கள் இல்லை.
*** 2) சமணர்களால் அழிக்கப்பட்ட தமிழ் நூல்கள் சிலவற்றை குறிப்பிடுங்கள்!
இதற்கு மேல் நீட்டிக்க மனமின்மையால் கடைசியாக இன்றைய காலத்திலும் தொடர்வதாக சொல்லப்படுகிற ஒன்றை வெட்டி ஓட்டிவிட்டு நிறைவு செய்கிறேன்.
இன்னும் சீர்காழியில், ஆண்டுதோறும் ஏப்ரல் திங்கள் ஞானசம்பந்தரின் திருமுலைப்பால் விழா நடைபெறுவதாகவும், அவ்விழாவில் ‘சமணப் பெண்களை…’ என இசையோடு கூவி சொல்லொணா வார்த்தைகளால் பெண்களின் தலை முதல் கால் வரை ஒவ்வொரு அங்கத்தையும் குறிப்பிட்டுப் பாடுவதாகவும், அதைப் பார்த்துக் கேட்டு தாம் கண்ணீர் விட்டு அழுததாகவும் ஜீவபந்து ஸ்ரீபால் அவரது தமிழகத்தில் ஜைனம் என்ற நூலில் குறிப்பிடுகின்றார்.
:-வழிபோக்கன்.(தொடருவேன்)
தேனீ அகஸ்டின் யார் என்பது புரிகிறதா?
ஒவ்வொரு தமிழனும் பார்க்கவேண்டிய காணொளி
http://tamilanseemanvideos.com/full-interview-seeman-interview-to-agni-paritchai-7-march-2015/
* சமணர்கள் 8,000 பேர் கழுவேற்றப்பட்டார்கள் என்பதும் சைவர்களுடைய புராணத்தில் இருந்து பெறப்பட்டவையே.
தம்முடைய மதப் பெரியார்களின் பெருமை, ஆற்றல், சிறப்பு, தெய்விகத் தன்மை முதலியவற்றை அதிகப்படுத்த வேண்டும் என்னும் சமய ஆர்வத்தினால் ஒவ்வொரு சமயத்தாரும் தத்தம் சமயப் பெரியாரைப் பற்றிப் பலவித செய்திகளைக் கற்பித்து விடுகிறார்கள்.”
** மேற்கூறப்பட்டது உங்களுடைய ஒப்புதல் வாக்குமூலம்.இதை சமணர்கள் சொல்லி இருந்தால் அவைகள் மிகைப்படுத்தி கூறப்பட்டது என்று சொல்லல்லாம்.ஆனால் தங்கள் சமயப் பெரியாரைப் பிராஸ்த்தாபித்துக் கொள்ள எழுத்தப்பட்டது என்பது ஒரு திரைப் படத்தில் வடிவேலு நான் ஒரு ரவுடி ,நான் ஒரு ரவுடி,நான் ஒரு ரவுடி,என்று சொன்னதைப் போல்தான் உள்ளது.
** உண்மை எதுவென்றால் அனல், புனல் வாதத்தில் சமணர் ஆளுடைய பிள்ளையாரிடம் தோற்றது உண்மை. அதனால் சத்திய வாக்கு செய்த சில சமணர்கள் களுவேரினார்கள் என்பது உண்மை. அவர்கள் செய்த சத்தியத்தை திருஞானசம்பந்தர் தடுத்து நிறுத்தி இருந்தால் சமணர்கள் சத்தியத்தை மீறியவர்கள் என்ற பழிச் சொல்லுக்குப் பலியாகி அவர்தம் மதத்தை மக்கள் வெறுத்து ஒதுக்கி இருப்பார்கள். அந்நிலை ஏற்படாமல் இருக்க சம்பந்தர் களுவேற்றத்தைத் தடுக்கவில்லை. மேலும் அரசாணையை எதிர்த்தவர் என்ற பழிச் சொல்லும் பிள்ளையாருக்கு ஏற்படும் என்பதால் சம்பந்தர் அந்த களுவேற்றத்தைத் தடுக்கவில்லை என்பதே உண்மையாகும்.
* இதில் சப்பை கட்டு கட்ட என்ன வேண்டி இருக்கிறது?இப்படியுமா உங்களால் சிந்திக்க முடியும்.இவ்வளவு கொடூர குதர்க்க குணம் உடையவர்கலாகவா இந்த சமய பெரியார்கள் இருந்திருப்பார்கள். “வாடினேன் வாடியப் பயிரைக் கண்டு”. என்பதன் தத்துவம் தான் என்ன?அசோக சக்கரவர்த்தி யுத்த களத்தில் இறந்த உடல்களை பார்த்து மனம் வெதும்பி சமயம் மாறினான் என்பது வரலாறு.ஆனால் நமது சமய பெரியார்கள்?
** தெரு நாய் குறைத்தது அதனால் நானும் குறைத்தேன் எனும் போக்கில் கருத்து எழுதக்கூடாது.
* தெரு நாய் தான்.என்ன செய்வது தமிழ் சோறு சாபிட்டேனே,அதன் பால் உள்ள நன்றியால் தானையா குறைக்கிறேன்.இது தெரு காவல் நாய் தான்.வெறி நாய் அல்ல.
இதை ஒரு விவாதக் களமாக்கவே எம் நோக்கமும்.சண்டைக் கலாமாகுவது என் நோக்கமல்ல. இதில் சற்று காரம்,சாரம் இருக்கலாம்,அனால் சண்டைக் களமாக மாறுமானால் முதலில் வெளியேறுவது நானாகத்தான் இருப்பேன்.
தெலுங்கு பேசுபவர் தமிழன்
மலையாளம் பேசுபவர் தமிழர்
கன்னடம் பேசுபவர் தமிழர்
தமிழ் பேசுபவர் தமிழர் அல்ல ‘திராவிடன்’
இந்த அதிசயம் தமிழ்நாட்டுலதான் நடக்கும்
நடைமுறை அரசியல்களத்தில் திராவிடர் என்பது கேரளத்தில் வாழும் மலையாளியைக் குறிக்காது! ஆந்திராவில் வாழும் தெலுங்கர்களைக் குறிக்காது! அல்லது கர்நாடகத்தில் வாழும் கன்னடர்களையும் குறிக்காது! அப்படியானால் தமிழ்நாட்டில் வாழும் தமிழரை மட்டும் அது எப்படிக் குறிக்கும்? அது தமிழ்நாட்டில் வாழும் பிற இனத்தாரைக் குறிக்கிறது. குறிப்பாக தெலுங்கு, கன்னட, மலையாளிகளைக் குறிக்கிறது. திராவிடம் என்பது அவர்களின் வல்லாதிக்கத்திற்கான கொள்கையைக் குறிக்கிறது. அது எப்படி தமிழருக்கு நன்மை பயக்கும்? அந்த திராவிடத்தின் சூத்திரதாரி பெரியார்! அவர் எப்படி இந்த வீழ்ந்து கிடக்கிற தமிழ் இனத்தில் ஓர் விடுதலைக்கான அடையாளமாவார்?
தமிழன் தந்த வீடியோ linkல் சீமானின் வேலுடன் பச்சை ஆடை பேரணியைப் பற்றிய பேட்டியில் பெரியாரின் பேரன் என்று தன்னை சொல்லிக் கொண்ட முறையும் பேட்டியாளரின் கேள்வியும் அவரை திக்கு முக்காட வைத்த விதமும்,அவரின் தவிப்பும் சிரிப்பைத்தான் வரவழைத்தது.கிழே திராவிடம் என்பதைப் பற்றிய குறிப்பு ஒன்று.
தமிழ் நாடு — திராவிடம் அல்ல!!!!!
இதைவிட வியப்பான மற்றொரு செய்தியும் நமது இலக்கியங்களில் உள்ளது. ஆதி காலத்தில் திராவிடத்துக்கும் தமிழ் நாட்டுக்கும் சம்பந்தமே இல்லை!!!.இந்தச் சொல் பழந்தமிழ் இலக்கியத்தில் எங்கும் இல்லை. இந்தியாவில் இருந்த 56 தேசங்களில் சேர, சோழ, பாண்டிய, கேரள, கொங்கண தேசங்களுக்குப் பின்னர் திராவிட என்றும் ஒரு தேசம் குறிப்பிடப்படுகிறது. ஆக இது தமிழ்நாட்டின் பகுதி அல்ல. பழங்கால தேசப்பட புத்தகங்களிலும் தமிழ் நாட்டுக்கு வெளியேதான் திராவிடம் காட்டப்பட்டிருக்கிறது. தெலுங்கு தேசத்தில் ஒரு சிறிய பகுதிக்கு இப்படி பெயர் இருந்ததோ என்று எண்ணத் தோன்றுகிறது. இன்னும் தோண்டத் தோண்ட செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது.
வீடியோ லிங்க் தன்மான தமிழன் உடையது.
திராவிட நாடு என்பது தமிழ் நாடு, கேரளம், ஆந்த்ரா , தெலுங்கான, கர்நாட்டகம் ஆகிய பிரதேசங்களை கொண்டது.
பழம் புராணங்களிலும் வரலாறுகளிலும் புராதான இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் குறிப்படப்படுகின்றன.அவை:-
௺(51) திராவிட தேசத்தை குறிக்கிறது.
1) குருதேசம் 2) சூரசேனதேசம் 3) குந்திதேசம் 4) குந்தலதேசம்
5) விராடதேசம் 6) மத்சுயதேசம் 7) திரிகர்த்ததேசம் 8) கேகயதேசம்
9) பாஹ்லிகதேசம் 10) கோசலதேசம் 11) பாஞ்சாலதேசம் 12) நிசததேசம் 13) நிசாததேசம் 14) சேதிதேசம் 15) தசார்ணதேசம்
16) விதர்ப்பதேசம் 17) அவந்திதேசம் 18) மாளவதேசம்
19) கொங்கணதேசம் 20) கூர்சரதேசம் 21) ஆபீரதேசம் 22) சால்வதேசம்
23) சிந்துதேசம் 24) சௌவீரதேசம் 25) பாரசீகதேசம் 26) வநாயுதேசம்
27) பர்பரதேசம் 28) கிராததேசம் 29) காந்தாரதேசம் 30) மத்ரதேசம்
31) காசுமீரதேசம் 32) காம்போசதேசம் 33) நேபாளதேசம்
34) ஆரட்டதேசம் 35) விதேகதேசம் 36) பார்வததேசம் 37) சீனதேசம்
38) காமரூபதேசம் 39) பராக்சோதிசதேசம் 40) சிம்மதேசம்
41) உத்கலதேசம் 42) வங்கதேசம்(புராதனம்) 43) அங்கதேசம்
44) மகததேசம் 45) ஹேஹயதேசம் 46) களிங்கதேசம்
47) ஆந்திரதேசம் 48) யவனதேசம் 49) மகாராட்டிரதேசம்
50) குளிந்ததேசம் 51) திராவிடதேசம் 52) சோழதேசம் 53) சிம்மளதேசம்
54) பாண்டியதேசம் 55) கேரளதேசம் 56) கர்னாடகதேசம்.
உலகின் பல நாடுகளையும் இந்தப் பெயர் பட்டியல் உள்ளடக்கியுள்ளதே பின் எப்படி இது இந்திய தேசமாகும் என்கிற கேள்வி எழலாம் !!.
ஆனால் தேசம் என்பதும் நாடு என்பதும் வேறு பொருள்படும்
தேசம் என்பது வரலாறு, மொழி பண்பாட்டை பகிர்ந்து ஒரு அரசின் கீழ் வாழும் ஒரு பெருங் மக்கள் கூட்டமாகும்.
நாடு என்பது ஒரு தேசமாகவும் இருக்கலாம்,ஒரு ஆட்சியின் கீழ் பல தேசங்களை உடையதாகவும் இருக்கலாம்.(உ-ம் )இந்திய நாடு.பெரு நிலப்பிரிவுகளை கொண்ட பல மொழி பண்ப்பாட்டை கொண்ட இனங்களை ஐக்கியத்திற்குள்(Union States ) கொண்டு வந்து ஆட்சி செய்கிற நாடு.
திராவிட தேசம்.
திராவிடதேசம் குளிந்ததேசத்தின் தெற்பாகத்தில் ஓடும், கிருட்டிணா நதிக்கு தெற்கிலும், சோழதேசத்திற்கு வடக்கிலும்,விசாலமான பூமியில் பரவி இருந்த தேசம்.
இந்த தேசத்தில் பூமி கிடைமட்டமாகவும், மேடு, பள்ளமும், காணப்படும்.
இந்த தேசம் வருடத்தில் 6 மாத காலம் வெப்பம் அதிகமாக இருப்பதால் இப்பூமியின் மக்கள் கருத்த நிறமுடையவர்களாக இருப்பார்கள்.
இந்த தேசத்தின் நான்கு பக்கங்களிலும் மலைகள் உண்டு. இவை பெரும்பாலும் சிறு, சிறு குன்றுகளும், சிறு, சிறு காடுகளும் செழிப்பான நல்ல பூமி அதிகமாகவும் இருக்கும்.
இந்த திராவிடதேசத்தில் சுவர்ணமுகி நதியும், வேகவதி நதியும், க்ஷீரநதி (பாலாறு) பெண்ணையாறு, கருடநதி சேர்ந்து திராவிடதேசத்தை செழிக்க வைக்கின்றது.
இந்த திராவிடதேசத்தில் நந்தவனங்கள், ஈச்சை, நாணல், கொங்கு, பனை, பலா, புளி, இலவை, இலுப்பை, முதலிய எண்ணெய் வித்துக்கள் உள்ள மரங்களும், துவரை, கடலை போன்ற புன்செய் பயிர்களும் விளைகின்றது.wiki
47)ஆந்திரதேசம் 48) யவனதேசம் 49) மகாராட்டிரதேசம்
50) குளிந்ததேசம் 51) திராவிடதேசம் 52) சோழதேசம் 53) சிம்மளதேசம்
54) பாண்டியதேசம் 55) கேரளதேசம் 56) கர்னாடகதேசம்.
மேலேயுள்ள பட்டியலை பார்த்தால் தமிழர்களுக்கு என்று ஒரு தேசம் இல்லாததை போல் தான் இருக்கும்.ஆனால் உலகம் முழுவதும் அவன் பரம்பி வாழ்ந்தான் என்று வரலாறு அவனை அடையாளமிட்டு கூறிக் கொண்டே இருக்கிறது.தமிழன் தன் இனத்தை சொல்லி ஆட்சி செய்யவில்லை என்றும் யாதும் ஊரே யாவரும் கேளிர் வாழ்த்தாக தான் தெரிகிறது.தெலுங்கர்களுக்கு ஆந்திர தேசம்,மலையாளிகளுக்கு கேரளதேசம்,கன்னடர்களுக்கு கர்னாடகதேசம்,திராவிடர்களுக்கு திராவிடதேசம்என்று இருக்கிறது?
திராவிட தேசம் என்று தனியாக ஒரு தேசம் இருக்கும் போது எவ்வாறு தமிழன் திராவிடன் ஆனான்?பிற இனத்தவரும் எப்படி திராவிடர் ஆனார்கள்?
இந்த புராண புரட்டுக்கள் எமக்கு வேண்டாம்யா . எமது வரலாற்று நூல்கள் இலங்கிய நூல்கள் எதிலும் இந்த திருட்டுதிராவிடம் இல்ல .
எமது பாட்டன் வள்ளுவபெரும்தகை எமக்களித்த திருகுறளில்குட எங்கும் தாராவிடம் இல்லை .. தமிழர்களை ஒன்டாண்டியாக்க பலியா நாய்டு செய்தவினை …
அய்யா,நம்மவர்க்கு யார் தமிழன் என்று தெரியாது.20முரை மற்ற மாநிலத்தார் தமிழ் நாட்டை ஆண்டார்கள்.7முரை தமிழர் தமிழ் நாட்டை ஆண்டார்கள்.1920-2015வரை.மேனன் தமிழர் என்றும்,கர்நாடக தமிழர் என்றும் இந்த மக்கள் நன்ம்புகிற வரையில் நாம் என்ன செய்வது ?
2. இராமலிங்கப் பெரியாரை வெட்டிப் பலியிட்டது யார்?
3. நந்தனாரை நெருப்பிலிட்டுக் கொன்றது யார்?
4. திருப்பாணாழ்வாரைத் தீயிலிட்டுக் கொன்றது யார்?
5. யாகத்தில் ஆடு, மாடு, குதிரை, பன்றி, இவைகளைச் சுட்டுத் தின்று சுரா பானமருந்தியது யார்?
6. வருணாச்சிரம தருமத்தை ஆதரிப்பவன் யார்?
7. மனுதர்ம சாத்திரம் எழுதி நம்மை ஏமாற்றி வந்த கூட்டம் எது?
8. புராண ஆபாசக்கதைகளை எழுதி நம்மை ஏய்த்து வந்தவன் யார்?
9. திருப்பதிக்குப் போய் மொட்டையடிக்காமல் திரும்பி வருபவன் யார்?
10. மோட்ச லோகத்துக்கு வழிகாட்டி டிக்கெட் கொடுப்பவன் யார்?
11. திவசம், திதி, கருமாதி, கலியாணம், சடங்குகள் நடத்தி வைப்பவன் யார்?
12. திராவிடன் கட்டிய கோவில்களில் அதிகாரம் செலுத்தபவன் யார்?
13. திராவிடன் கட்டிய சத்திரமானிய வருமானத்தில் உண்டு களிப்பவன் யார்?14. கஷ்டப்பட்டுக் கோயில் கட்டியது யார்? உள்ளே புகுந்து கொள்ளையடிப்பது யார்?
15. சத்திரம் கட்டியது யார்? மானிய சொத்தில், சாய்ந்து சாப்பிடுவது யார்?
16. பல சாதிகளை உண்டு பண்ணியது யார்?
17. உடன்கட்டை ஏறும்படிச் செய்து பெண்களை வஞ்சித்தது யார்?
18. திராவிடன் ஆசாரத்துடன் பக்தி பண்ணினால் கண்ணைத் தோண்டிக் காட்டில் விட்டவன் யார்?
19. திராவிடன் ஆரியப் பாஷையைப் பேசியதற்காக நாக்கை அறுத்தது யார்?
20. திராவிடனை அரக்கனாகவும், சூத்திரனாகவும், குரங்காகவும் எழுதிவைத்தவன் யார்?
21. திராவிட இனத்தவரை முன்னுக்கு வரவொட்டாமல் முட்டுக்கட்டை போடுவது யார்?
22. திராவிட நாட்டுப் பிரிவினையைக் கூடாதென்று கொக்கரிப்பவர் யார்?
23. உழைப்பின்றி ஊரார் உழைப்பில் உண்டுகளிப்பவன் யார்?
24. கடவுளைத் தரிசிக்கத் தரகனாக இருப்பவன் யார்?
25. தென்னாட்டானைச் சுரண்டுபவன் யார்?
26. மதவெறி பிடித்து மதிகெட்டுத் தகாத காரியம் செய்தலைபவன் யார்?
27. தர்ப்பைப் புல்லையும், பஞ்சாங்கத்தையும் காட்டி, இன்றும் ஏமாற்றுபவன் யார்?
28. நீ சுவாமி என்று கும்பிட்டால் இடதுகையை நீட்டி உன்னை அவமதிப்பவன் யார்?
29. பெண்களை ஆடல், பாடல் கற்பித்து சினிமாவில் சேர்த்துப் பணம் சம்பாதிப்பவன் யார்?
30. கெஞ்சிக் கூத்தாடி லஞ்சங் கேட்கும் பஞ்சாங்கம் யார்?
31. இந்திப் படிப்பைக் கட்டாயப் பாடமாகக் கொணர்ந்தது யார்?
32. நான்கு சாதிகளை உண்டு பண்ணியவன் யார்?
33. மதவெறி பிடித்தலையும், மடையனும், முட்டாளும் யார்?
34. முதல் சாதி என்று தன்னைச் சொல்லிக் கொள்பவன் யார்?
35. தொழிலாளி கூலி கேட்டதற்கு மலபார் போலீசை விட்டு அடித்தது யார்?
36. வில் வித்தை கற்ற ஏகலைவன் கட்டை விரலை நறுக்கிக் கொடுக்கும்படி கேட்டவன் யார்?
37. வேதம் ஓதிப் பாதகம் விளைவிப்பவன் யார்?
38. நாம் பிறந்தது முதல் இறக்கும் வரை நம்மிடம் வரி வாங்குபவன் யார்?
39. ஹரிஜன சகோதரரை அக்ரகாரத்துக்குள் விடாமல் தடுப்பவன் யார்?
40. சாதி வேறு, சமயம் வேறு, கலை வேறு என்பவன் யார்?
41. சாதியைக் கடவுள் படைத்தார் என்று சொல்லி தர்ப்பை ஏந்துங் கை வாளுமேந்தும் என்றவன் யார்?
42. உலகம் போற்றும் உத்தமர் காந்தியாரைச் சுட்டுக் கொன்றது யார்?
43. காந்தியார் இறந்த தினத்தன்று மிட்டாய் வழங்கியது யார்?
44. காந்தியாருக்கு ராம் தூன் பசனை பண்ணி ஓலமிட்டழுதது யார்?
45. காந்தியார் கொலை வழக்குகளை பிரசுரிக்கக் கூடாதென்பவன் யார்?
46. காந்தியாரைச் சுட்டுக் கொன்றதை இருட்டடிப்பு செய்துவிட்டது யார்?
47. காந்தியார் கொலைக்கு நியாயம் வழங்கும்படி கேட்ட கழகத்தவர்களைத் தடை உத்தரவு போட்டுச் சோதனையிட்டவன் யார்?
48. சரித்திர ஆதாரப்படி அன்றிலிருந்து கொலை செய்து வரும் கூட்டம் எது?
49. திராவிடனைத் தலையெடுக்கவொட்டாமல் தட்டி விட்டுக் கொண்டிருப்பவன் யார்?
50. திராவிடச் சம்புகன் தலையை வெட்டி ஆரியப் பிள்ளையைப் பிழைக்க வைத்தது யார்?
51. காந்தியாரைக் கொலை செய்த விநாயகக் கோட்சே கூட்டம் எது?
52. காந்தியார் சதியாலோசனை சம்பந்தப்பட்ட ரிக்கார்டுகளைக் களவாடியவன் யார்?
53. அடுத்துக் கெடுப்பதில் அசகாயசூரனாய், கூடியிருந்து குடி கெடுப்பவன் யார்?
54. தஞ்சை நாயக்கர் வம்சத்தை வேற்றரசரிடம் காட்டிக் கொடுத்தவன் யார்?
55. சமணர்களைக் கழுவேற்றியது யார்?
56. சந்திர குப்தனுக்கு சாம்ராச்சியம் கிடைக்கும்படி செய்தது யார்?
57. நவ நந்தர்களின் ஆட்சியை வேரறுத்தவன் யார்?
58. சிறுத்தொண்டனைப் பிள்ளைக்கறி சமைத்துக் கேட்டது யார்?
59. வல்லாள மகாராசாவின் மனைவியைப் பெண்டாளக் கேட்டது யார்?
60. அசோக வம்சத்தரசரை அழித்தவன் யார்?
61. சைவனுக்குக் கந்தபுராணமும், வைஷ்ணவனுக்கு இராம புராணமும் கட்டியது யார்?
62. தேவடியாள் வீட்டில் தரகனாக இருப்பவன் யார்?
63. தாசிகளுக்குப் பரதநாட்டியம் கற்றுக் கொடுப்பவன் யார்?
64. அரிச்சந்திரனைப் பொய் சொல்லும்படி படாதபாடு படுத்தியது யார்?
65. திராவிட மக்களை ஏமாற்றிப் பிழைக்க வந்த கூட்டம் எது?
66. பல காமாந்தகாரக் கடவுளர்களையுண்டு பண்ணியது யார்?
67. நம்மைப் பல சாதிகளாக்கி மொழி, கலை, நாகரீகம், வாணிபம் ஆகிய பல துறைகளிலும் வீழ்ச்சியுறச் செய்தது யார்?
68. எண்ணத் தொலையாத கடவுளை உண்டாக்கி எழுதியது யார்?
69. கடவுளுக்கும் மனைவி, கூத்தி, பிள்ளை குட்டிகள் இருப்பதாக எழுதியவன் யார்?
70. எவ்விதத் தொடர்புமின்றிச் சாஸ்திர ரீதியாகப் பிரித்து வைத்தது யார்?
71. காந்தியார் கொலைக்கு முன் திருவுளச் சீட்டுப் போட்டு ஒத்திகை நடத்திய கூட்டம் எது?
உங்களுடைய நண்பர்களுக்கு இந்த பதிவை பற்றி தெரிய வேண்டும் என்றால்
கீழ் உள்ளது 2009 ல் பதிக்கப்பட்டது.அதை இங்கு வெட்டி ஒட்டுகிறேன்.இன்னமும் பலருக்கு இந்த பார்ப்பிணிய திராவிட போதை மயக்கம் தெளிவதாய் இல்லை.பழங் கள்ளை குடித்தே பழக்கம் உள்ளவர்கள் போல உளறுகிறார்கள். என்று தான் நிதர்சனத்துக்கு விழித்துக் கொள்வார்களோதெரியவில்லையே..ம்ம் சரி படியுங்கள்.
காவிரிமைந்தன் சொல்கிறார்:
8:44 பிப இல் ஒக்ரோபர் 10, 2009
இன்னும் 1949 லேயே இருக்கிறீர்களே தோழரே !
நகர்ந்து வாருங்கள் – 2009 க்கு.
புதிய பார்ப்பனர்கள் நிறைய பேர் வந்திருக்கிறார்கள்.
அவர்களை எல்லாம் தெரிந்துகொள்ளுங்கள் !
– தோழமையுடன் – காவிரிமைந்தன்
இவர்களுக்கு மீண்டுமாய் நினைவுப்படுத்த வேண்டி இருக்கிறது.நாம் இப்பொழுது 2015ம் ஆண்டில் அடி வைத்து ஓடிக்கொண்டிருக்கிறோம் என்று.
மற்றவர் இப்படியும் சொல்லி இருக்கிறார்,அதையும் படியுங்கள்.
நெற்குப்பை தும்பி சொல்கிறார்:
11:41 முப இல் ஒக்ரோபர் 13, 2009
சரி எல்லாவற்றுக்கும் விடை பார்ப்பனர் தான்.
கடந்த ஐம்பது அறுபது ஆண்டுகளிலே சாதியைப்பற்றி ஐயா பெரியார் தமிழகத்திலும், அம்பேத்கார் அகில இந்தியாவிலும் சொன்ன கருத்துக்கள் ஓரளவுக்கு/ பெருமளவுக்கு பெரும்பான்மையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு சாதி பிரிவனை இருக்கக் கூடாது; சாதியற்ற சமுதாயம் உருவாக வேண்டும் என்று தம் மனத்தளவிலாவது நினைப்பது உண்மை. ரெட்டைக் குவளை கண்டு மனதுக்குள் பொருமும் மக்கள் எண்ணிக்கையில் மிக அதிகம். அதற்காக பெரியாருக்கும் அம்பேத்காருக்கும் இந்த நாட்டு மக்கள் அனைவரும் நன்றி சொல்ல வேண்டும்.
அதே சமயம், ஒரு சின்ன மனத்தாங்கல் : சாதி என்ற சனியனைத் தோற்றுவித்த பார்ப்பனர்களை விடவும், பிற “உயர்ந்த சாதி மக்கள் ” சாதியை பிடித்து தொங்கிக்கொண்டு, சாதியற்ற சமூகம் உருவாக தடை போடுகிறார்கள் என்பது ஒரு வாதம். திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்த பின்பும், தமிழகத்தில் சாதி பிரிவினைகள் கொடியோச்சி நிற்பதில் தற்போது ஆட்சியில் இருக்கும், பிற சாதிக்காரர்களும், அரசு அலுவல்களில் உள்ள பிற சாதிக்காரர்களும் தான் என்று கருதும் நிலை உள்ளது.
அதாவது, பார்ப்பனர்களை அடக்கிய அளவு மற்ற “உயர்ந்த சாதி”க்காரர்களை வழி நடத்த தவறி விட்டோமோ என்று ஒரு ஐயம்.
போர் நடக்கும் பொது, சமயத்துக்கு ஏற்ப, உத்திகளை சீரமைத்து, போரைத் தொடர வேண்டும். இந்த காலக் கட்டத்தில், சாதி பிரிவினையை தூண்டும் நபர்களை அடையாளம் கண்டு, அவர்களை அடக்கி வைக்க வேண்டும்.
இதற்கு பதிவுலக அன்பர்கள் கருத்து எழுதினால் மிக மகிழ்ச்சி அடைவேன்.
எதிலும் எல்லாவற்றிலும் திறன்பட கற்பனை ஆதிக்கம் அதிகமாக காணபடுகிறது. இனி நடப்பதை சரியாக வழி நடத்துவோம்! தனி தமிழர் நாடு ஒன்றே தீர்வு! மற்றவை எல்லாம் தேவையற்றது!!!
அதிரடியாய் வருகிறேன் என்று கூறி ஓடினார், ஓடினார் இணைய வலைத்தளங்களின் எல்லைக்கே ஓடினார். வழியில் தட்டுத் தடுமாறி பல குப்பையைப் பார்த்தார், அந்த குப்பைகளை இங்கே கொண்டு வந்து போட்டால், அதைக் கிண்டிப் பீராய்ந்து பார்க்கும் தேனியின் கண்ணில் பட்டால் மேலும் நாற்றமெடுக்கும் என்றெண்ணி அதை வழியிலேயே போட்டு விட்டு கையைப் பிசைந்துக் கொண்டே வந்தார். வந்தவருக்கு அசைப் போட ஒன்றுமில்லாதலால் எம் கருத்தையே மூலதனமாகக் கொண்டு அசைப் போட துணிந்து விட்டார். துணிந்தவர், துப்புக் கெட்டவராகி எதையும் நடுநிலையோடு சீர்தூக்கிப் பார்க்க முடியாமால் இனப் படுகொலை, இனப் படுகொலை என்று வேகமாக கத்தினால் எல்லோரும் நம்பி விடுவர் என்ற நப்பாசையில் கத்தினார். இந்த தேனியை விட்டால் செம்பருத்தி களத்தில் தமிழர் கண்ட சைவத்தை தர்காக்க வேற்றொரு தமிழர் இல்லாதால் வேற்று மதத்தை சார்ந்தோர் தமிழர் சமயத்தை தாக்க அதனை தர்காக்க எவரிடமும் தன்மானம் இல்லாமல் போய் விட்டது போலும். அன்று ஆரியனிடம் வீழும் பொழுதும் தமிழரிடம் தன்மானம் இல்லை. இன்று கிறிஸ்துவரிடம் வீழும் பொழுதும் தமிழரிடம் தன்மானம் இல்லை. எப்படி வரும் தன்மானம்!. மதம் மாறி, பண்பாடு மாறி பெயர் மாறி, மொழி மாறி வாழும் தமிழரும் “தமிழன்தானே”!. வருடத்திற்கு ஒரு முறை “பொங்கு”வோரும் தமிழர்தானே!. இதுதான் இன்றைய தமிழரின் நிலை. நாளை நாமும் அவர்களாகி வாழ்ந்திட, “வாழத் தெரியாத உண்மைத் தமிழன் அழிந்தான்” என்று தமிழருக்குரிய வார்த்தைக்கு விளக்கம் ‘OXFORD’ அகராதியில் ஓர் ஆங்கிலேயன் எழுதி வைத்திருப்பான். அந்நாள் எந்நாளோ?.
இனப் படுகொலை, படுகொலை என்று முழங்கியவரே, திருநாவுக்கரசர் தமிழர். அவரே சமணர்களுக்கு தருமசேனர் என்ற பட்டத்துடன் படாலிபுரத்தில் தலைவராக இருந்தார் என்பது வரலாறு. அவ்வாறு தமிழரில் ஒரு பகுதியினர் சமண மதத்தை தழுவி வாழ்ந்தனர் என்பதை ஏன் எண்ணிப் பார்க்க முடியவில்லை?. இதற்குத்தான் சொந்த புத்தி வேண்டும் என்பது. சொல் புத்தி கொண்டு செயல்படுவோர் நிலை இதுதான். தமிழரை, தமிழரே ஏதோ ஒரு காரணத்தால் அழித்துக் கொண்டால் அது இனப் படுகொலையா?. அப்படியானால், சேரன், சோழன், பாண்டிய சிற்றசுகளிடையே நடந்த போர்களில் இறந்த தமிழரும் இனப் படுகொலை செய்யப்பட்டனர் என்றாகுமா?. அல்லது இங்கே குறிக்கப் படும் சமணர் எந்த இனத்தவர் என்று சொல்ல உம்மிடம் வரலாற்று ஆதாரம் ஏதேனும் இருக்கின்றதா?. எடுத்து வையும் அதையும் பார்க்கின்றேன். கடந்த 50 ஆண்டுகளாக பாலஸ்தீன மக்களைக் கொன்று குவித்து வரும் ஓர் இனத்தைச் சார்ந்தவர் மதம்தான் உலகில் நல்ல மதம் என்போரும் கண்ணுக்கேதிரே தெரியும் இனப் படுகொலையை மெய்மறந்து இதர சமயத்தாரை படுகொலையாளர்கள் என்பதின் நோக்கம் என்ன?. சைவத்த்தை அறிந்தோர் அச்சமயத்தின் உண்மையை அறிவர். அதனை அறியாதோர் நிலை என்ன?. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதா?.
“இனப் படுகொலை” என்று முழக்கமிடுவோருக்கு அந்த வாசகம் எங்கிருந்து வந்தது என்றும் தெரியாது!. அது எப்படி சொல்லப் பட்டது என்பதும் தெரியாது!. அதன் பின்னணியில் நடந்த கதையும் தெரியாது!. ஆனால், இணைய வலைதளங்களில் இருக்கும் குப்பையை மட்டும் நொறுக்குத் தீனி போன்று மென்று துப்ப முடியும்!. படுகொலை என்று வாய் கிழிய கத்தியவருக்கு தமிழறிவு இருந்தால் சேக்கிழார் எழுதிய திருத்தொண்டர் புராணத்தில் இருக்கும் இந்த செய்யுளைப் படியும்.
“பண்புடைய அமைச்சனாரும்
பாருளோர் அறியும் ஆற்றால்
கண்புடை பட்டு நீண்ட
கழுத்தறி நிறையில் ஏற்ற
நண்புடை ஞானம் உண்டார்
மடத்துத்தீ நாடி இட்ட
எண்பெரும் குன்றத்து எண்ணா
யிரவரும் “ஏறினார்கள்”. (திருமுறை 12:855)
“ஏறினார்கள்” என்றால் சத்தியத்தில் தோற்றவர் “தானே” கழுமரம் ஏறினார் என்று பொருள். இது தற்கொலைக்குச் சமம். இது சத்தியம் மீறாத சமணர் மேற்கொண்ட சத்திய சோதனை.இது அந்த காலத்தில் இருந்த அரச தண்டனை முறைகளில் ஒன்று. இதனை இனப் படுகொலை என்பது சரியா?. இவ்வாறு சொல்பவர் தமிழரா? அல்லது தமிழருக்குச் சொந்தமானவரா? அல்லது வருடத்திற்கு ஒரு நாள் “பொங்கும்” தமிழரா?. கேள்விரகில் நெய் வடிகின்றது என்று சொன்னால் கேட்பாருக்கு மதியில்லையா?. தமிழரே, தமிழர் சமயத்தின் உண்மையை அறியாத பொழுது அதை ஒரு கிறிஸ்துவரிடம் எதிர்பார்ப்பதும் தமிழரின் தவறுதான்!. என்னத்தைச் சொல்லி என்னத்தைச் செய்ய!. தமிழர் கூறு கெட்டு கேப்பார் பேச்சை கேட்டுக் கொண்டு வாழ்வதால் பிறரும் நம்மை தூற்றும் நிலை இது. இத்துடன் முடிந்து விடவில்லை. இன்னும் தொடரும். எம்மனத்தில் ஒரு வாரமாக குமரிக் கொண்டிருந்த நெருப்பை இன்னும் முழுமையாக கொட்டவில்லை. பொறும்.
மயிலை சீனி வேங்கடசாமி வரைந்த “சமணமும் தமிழும்” என்ற நூலை அனைத்து தமிழரும் படிக்க வேண்டியது அவசியம். இந்நூலை எழுதி அதனை வெளியிட முடியாமல் 10 ஆண்டுகள் கிடப்பில் போட்டு பின்னர் சைவ சமய நூற்பதிப்பு கழகத்தின் தலைவர் திரு. வ. சுப்பையா பிள்ளை அவர்கள் இந்நூலை பதிற்ப்பித்து வெளியிட முன் வந்து 1954-ல் வெளியிடப் பட்ட நூல். சைவத்திற்கு எதிரான நூல் அல்ல ‘சமணமும் தமிழும்’. அது தமிழுக்கும், தமிழருக்கும் அவர்தம் வரலாற்றை அதுவரை சொல்லியிராத வகையில் வேற்றொரு கோணத்தில் உணர்த்த வந்த நூல். ம. சீ. வே. அவர்தம் வார்த்தையாலே முன்னுரையில் சொல்லியதை அனைவரும் படிப்பது நல்லது:
“வரலாறுகளை ஆராய்ந்து எழுதுவது, கதைகளை எழுதுவது போல, எளிதான காரியமன்று, ஒவ்வொன்றையும் துருவித் துருவிப் பார்த்துச் சான்று காட்டி ஆதாரத்தோடு எழுதவேண்டும், அன்றியும், எனது மதம் பிறர் மதம் என்று கொள்ளாமல், காய்தல் உவத்தல் இல்லாமல், நடுநின்று செம்பொருள் காண வேண்டும். சாசனங்களையும், பல நூல்களையும், ஏனைய சான்றுகளையும் ஆராய்ந்து ஒத்திட்டுப்பார்த்து முடிவு காணவேண்டும். (இந்த மனப்பான்மை நூலை வாசிப்பவர்களுக்கும் இருக்கவேண்டும்). வாழ்க்கைப் போரட்டத்தின் இடையே கிடைத்த சிறு சிறு நேரங்களைப் பயன்படுத்திக்கொண்டு, என்னால் இயன்ற வரையில் எனது சிற்றறிவுக் கெட்டியவரையில் ஏறக்குறைய நான்கு ஆண்டுகள் இதனை எழுதி முடித்தேன். ஆயினும், முதலில் சொல்லியபடி, ””ஊழ்”” இதனைப் பத்து ஆண்டுகளாக வெளிவராமல் செய்துவிட்டது. நேரத்தையும் உழைப்பையும் செலவிட்டு இந்த நூலை எழுதி ஏன் என் ஆயுளை வீணாக்கினேன் என்று கருதி இதை வெளியிடாமலே இருந்துவிட்டேன். அதற்குச் சில காரணங்கள் உண்டு. அவற்றை இங்குக் கூறவிரும்பவில்லை. ஒன்றைமட்டும் கூற விரும்புகிறேன்; உண்மையாக உழைத்து ஆராய்ச்சி நூல் எழுதும் உழைப்பாளிகளுக்குத் தமிழ் நாட்டிலே இடமில்லை என்பதே அது. பாமர்களைப்பற்றியும் படியாத பணக்காரர்களைப்பற்றியும் கூறவில்லை நான் “கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள “, கல்வித்துறையிலே மிகவுயர்ந்த நிலை பெற்று ஆராய்ச்சியின் அருமை பெருமைகளை அறிந்தவர்கள்கூட, ஆராய்ச்சியாளரைப் போற்றுவதில்லை யென்றால் இந்நூல்களை ஏன் எழுதவேண்டும் ஏன் வெளிப்படுத்த வேண்டும்?
பத்து ஆண்டுகள் கடந்தன. இந்நூல் எழுதுவது பற்றிப் பலரும் முன்னமே அறிந்திருந்தபடியினால், பல நண்பர்கள் நேரிலும் கடிதம் எழுதியும் இதைப்பற்றிக் கேட்டார்கள். இலங்கயைலிருக்கும் நண்பர்கள் சிலரும் கடிதம் எழுதிக் கேட்டார்கள். அவர்களுக்கெல்லாம் வெளிவரும் வெளிவரும் என்று கூறினேனே யல்லாமல் என் மனவேதனையைக் கூறவில்லை.
உண்மை அறிந்த நெருங்கிய நண்பர்கள் சிலர் இதனை வெயிடுமாறு வற்புறுத்தினார்கள். ‘கிருஸ்துவமும் தமிழும் ‘, ‘பௌத்தமும் தமிழும்’, எழுதியது தமிழ்நாட்டின் சமயவரலாறு இலக்கிய வரலாறுகளை அறிதற்கு ஏற்றதாயிற்று. அதுபோலவே ‘சமணமும் தமிழும்’ வெளிவரவேண்டும். அதுமட்டுமல்ல ‘இஸ்லாமும் தமிழும்’. ‘இந்துமதமும் தமிழும்’ என்னும் நூல்களையும் எழுதவேண்டும் என்று அடிக்கடி வற்புறுத்தத் தொடங்கினார்கள். கடைசியாக சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் ஆட்சிப் பொறுப்பாளர் திரு,வ, சுப்பையா பிள்ளை அவர்கள் இந்நூலை அச்சிடுவதாகக் கூறிக் கையெழுத்துப் பிரதியைக் கேட்டார்கள். அதற்கு இணங்கிக் கையெழுத்துப் பிரதியைத் தேடினேன்.அந்தோ! நான் கண்டதென்ன! பெட்டியினுள் சிதல் அரித்த ஏடுகள்! தாள்கள் பெரும்பாலும் மறைந்து விட்டன. சில தாள்களே அரைகுறையாகச் செல்லரிக்கப்பட்டுக் கிடந்தன. எனது சில ஆண்டு உழைப்பு வீணாய்ப்போயிற்று. மீண்டும் எழுத வேண்டியதாயிற்று.”.
அவர் இந்நூலை எழுதிய தினத்தில் சைவ வைதீக சமரசம் ஏற்பட்டு சைவம் தாழ்ந்திருந்த காரணத்தால் ம.சீ.வே. – வால் சைவத்தை தமிழரின் தனிப்பெரும் சமயமாக பார்க்க முடியவில்லை. இது அன்றைய தமிழ் நாட்டு நிலை. இன்றும் அவ்வாறே உள்ளது. சைவம் கொண்டிருந்த தொன்மையையும், வேதாந்ததிற்கு வேறுபட்ட தனி கொள்கைகளையும், கோட்பாடுகளையும், இறை தத்துவங்களை சைவம் கொண்டிருந்ததையும் “இந்து மதம்” என்ற போர்வை அதனை மறைத்திருந்ததையும் அவர் பகுத்தறிய தவறி விட்டார். இருந்தாலும் அவர் சொல்லிய பல உண்மைகள் தமிழரின் உண்மை வரலாற்றை அறிய உதவுகின்றது. “சமணமும் தமிழும்” என்ற நூலைப் படிக்க கீழே கொடுக்கப் பட்டுள்ள வலைசுட்டியை நாடுங்கள். நன்றி “தமிழ் உலகம்”.
http://www.tamilvu.org/library/lA470/html/lA470soi.htm
என்னாங்க தேனீ ஐயா இப்படி சொல்லிட்டிங்க? திருஞானசம்பந்தர் பாடல்கள் போதும் என்றதால் சிவ பெருமான் அவரை சீக்கிரம் அழைத்துகொண்டார்.திருநாவுக்கரசர் பாடல்கள் கேட்க கேட்க இனிமையாக இருந்ததால் நீண்ட நாட்கள் இங்கேயே விட்டு விட்டார் அந்த கள்வன்.அதுபோலதான் தங்கள் கருத்துக்கள் அனைத்தும் இனிமையாக இருப்பதால் மற்ற அனைவரும் அதை படிப்பதிலே ஆர்வமாக இருக்கிறோம்…
9 March, 2015, 12:51 தூங்க சென்ற கும்பகர்ணன் 14 March, 2015, 2:06 எனது தொகுப்பை படிக்க வேண்டுமே என்று அதிர்ந்து தூக்கம் தெளியாமல் விழித்துக்கொண்டு என்னனவோ பினாத்துகிறார்.
ஆட்டை கடித்து,மாட்டைக் கடித்து மனுஷனை கடித்தது(personal attack ) என்பார்களே அது போல தாக்க ஆரம்பித்து விட்டார்.நான் வெறி நாயல்ல என்று குறிப்பிட்டது இப்ப விளங்கிருக்கும்.வாழ்க நின் தொண்டு .
எனது முன் commentsஐ படித்தால் அவர் எழுதியவற்றிற்கெல்லம் பதில் இருக்கிறது.
தூற்றுவது என் நோக்க அல்ல.ஆனால் தமிழர்கள் இடையே நடந்த வரலாறு எல்லாவற்றையும் எல்லோரும் அறிந்து இருக்க மாட்டார்கள்.இவை எல்லாம் நமக்கு ஒரு படிப்பினையே.ஆர்வம் உள்ளவர்கள் இதை ஆராய்வார்கள்.நிற்க
நற்பண்புடைய அமைச்சரும், உலகில் உள்ளவர் அறியும்படியாகக் கணுக்களைப் பக்கங்களில் வெட்டிக் கூர்மையான கழுக்களை நிரல்பட அமைத்திட, அரசாணைக்கு இணங்கி சமணர்களும் தற்கொலை செய்துக் கொண்டார்களாம்.(எத்தனை திரை படங்களில்
நாம் பார்த்திருக்கிறோம் வில்லன் விஷத்தை கொடுத்தோ துப்ப்பாக்கியால் தங்களை தாங்கலே சுட்டுக் கொள்ள வைப்பதை)அதை எல்லாம் தற்கொலை என்பார்களா?சரி சரி இன்னொரு வெட்டி ஒட்டு..
ஐயா,
சிவனே என்று யாரிருந்தார்கள்? சிலர் வந்து சமணர்களாகவும் அமணர்களாகவும் மாற்றிடுகின்றனர்? அந்த சிலர் யார்?
2) திருஞானசம்பந்தர் சமணர்களை வாதில் வென்று பாண்டிய மன்னனை மதமீட்டுருவாக்கம் செய்துள்ளார்.
வாதில் தோற்ற சமணர்கள், அவர்கள் ஏற்கனவே வகுத்துக் கொண்டபடி கழுவேறியுள்ளனர் என்றும், சம்பந்தர் பெருமான் சமணர்களை வாதில் வென்றதற்கு ”சம்பந்த தேவாரத்தில்” (மட்டும்) சான்றுகள் உண்டா? உண்டென்றால்,
எமக்கு தந்தருளும்படி கேட்டு கொள்கிறேன் ஐயா.
3) இவ்விரண்டு நிகழ்ச்சிகளிலும் ச(அ)மணர்களாக மாதம்மாற்றம் செய்யப்பட்டவர்களின் உயிர்களே பலியாகியுள்ளன.
மதமாற்றம் தடைபட்டுள்ளது. எனவே இந்நிகழ்ச்சிகளை சமணர்கள் தங்களது குறிப்புகளில் எழுதி வைத்திருக்க வாய்ப்பே இல்லை என்றும் கருதுகிறேன்.
அப்பர் பெருமானை யார் மதம் மாற்றினார்கள்? அவராகத்தான் சைவ மதத்திலிருந்து சமண மதம் புகுந்தார்? என்று அவரின் பாடலகள்
கூறுகின்றன?என்னமோ தொன்றுதொட்டு தமிழர்கள் சைவர்களாக வாழ்ந்து வந்ததுபோலவும், பின்னால் வந்த சமணர்கள் சைவர்களை
மதம் மாற்றினார்கள் என்பது போலவும் நிறைய வலைஞ்ர்கள் எழுதி வருகிறார்கள்.
http://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagammar2014/26324-2014-04-18-13-24-58 ‘’…கி.பி 16 – 19 வரையான காலகட்டம் சங்கப் பிரதிகளுக்கு வளமான காலகட்டமாக அமையவில்லை. 17ஆம் நூற்றாண்டில் எழுந்த இலக்கணக் கொத்து எழுதிய சுவாமிநாத தேசிகர் ஒரு சைவப்பற்றாளர். சைவ சமயம் 12ஆம் நூற்றாண்டு முதல் மிகத் தீவிரமாக இருந்து வந்தது. சிவஞான முனிவர் உள்ளிட்ட சைவப்பெரியார்கள் சங்க இலக்கியங்களை சமண – பௌத்த இலக்கியங்களாகப் பார்த்தார்கள். அவர்களின் சமயக் காழ்ப்புணர்வு காரணமாகத் திருக்குறள், சிலப்பதி காரம் முதலியவற்றோடு சங்க இலக்கியங்களையும் புறக்கணித்தனர். இலக்கணக் கொத்தின் ஆசிரியர் சுவாமிநாத தேசிகர் தம் நூலின் முன்னுரையில் “சைவர் களெல்லாம் திருக்குறள், சங்க இலக்கியம், சிலப்பதிகாரம் போன்ற மோசமான இலக்கியங்களைப் படித்துக் கெட்டுப்போகிறார்கள்” என்ற பொருளில் குறிப்பிடு கிறார்”.
அதாவது சங்க இலக்கியம், திருக்குறள், சிலப்பதிகாரம் போன்ற நூற்களை மோசமான இலக்கியம் என்றும் அவற்றை சைவர்கள்
படிக்கக்கூடாது என்றும் சுவாமிநாத தேசிகர் கூறியிருக்கிறார்கள் என்றால் அந்த நூற்களை இயற்றியவர்கள் யார்? நிச்சயம் சைவர்களாகயிருக்க
முடியாது. அக்கோண்த்தில் பார்த்தால், யார் யாரை மதம் மாற்றினார்கள்?
மேலும் ஒரு தரவு.

பாலசுப்பிரமணியன் அவர்களின்
ஒரு கருத்து மிகவும் வியப்பாகவுள்ளது. அவர், முதற்பதிப்பின், முகவுரையில் இவ்வாறு எழுதுகிறார்.
”நமது சமாஜம் சங்க இலக்கியத்தை வெளியிடுதல் பொருத்தமாகுமா என்று சிலர் ஐயுறுதல் கூடும். “சங்க நூல்களெல்லாம் புத்தசமண சமயச் சார்புடையன; அவைகளைப் பயிலுதல் கூடாது” என்று எனது இளமைப் பருவத்திற் சில சிவனடியார்கள் கூறியதுண்டு”.
யாரும் யாரையும் ஒழிக்கவில்லை, தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொண்டுள்ளனர் என்றே கருத வேண்டியுள்ளது
அன்பன்
கி.காளைராசன்.
…கண்ணை கசக்கி இதை எல்லாம் படிக்க யாரும் வற்புறுத்தவில்லை பொறுமையாய் நிதானித்து எழுதலாம்.ஒன்றும் அவசரமில்லை.
கேள்வி கேட்பதற்கு முன் சற்று யோசித்துக் கேட்க வேண்டும். சைவர்கள் 8,000 சமணர்களை கழுவேற்றினர் என்று கூறியது யார்?. நீரே. இந்த கூற்றுக்கு மூலம் திருத்தொண்டர் புராணம் (முன் பதிவுகளைக் காண்க) என்று உணர்த்தி அதன் பொருள் விளக்கமும் தந்தேன். இப்ப அந்த புராணத்தில் வரும் “எண்ணாயிரவரும்” என்பதை ஏற்றுக் கொள்வேன் ஆனால், தன்வினைச் சுட்டாக வரும் “ஏறினார்கள்” என்பதை ஏற்க மாட்டேன் என்றால் தங்களுக்கு தமிழ் இலக்கணம் புரியவில்லை என்றுதானே அர்த்தம்!. பின்னதை ஏற்கவில்லை என்றால் முன்னதையும் ஏற்கக் கூடாது. பால் வேண்டும் என்றால் பசுவும் வேண்டுமல்லாவா? பசு இல்லாமல் பால் எங்கனம் வரும்?. இதிலிருந்து என்ன தெரிகின்றது?. மூலத்தை அறியாமல் வார்த்தையை விட்டு விட்டோம் இப்பொழுது அதற்கு சப்பை கட்டுவதற்கு தமிழ் படக் காட்சி என்றும் நம்பத் தகுந்தாக இல்லை என்றும் பேசினால் என்ன அர்த்தம். நீர் அந்த புராணத்தில் உள்ளதை நம்பவில்லை என்றுதானே அர்த்தம். அப்படியானால் ஏன் 8,000 சமணர்கள் சைவர்களால் இனப்படுகொலை செய்யப்பட்டனர் என்று பொய்யுரைத்தீர்? நீரே விரித்த வலையில் இப்பொழுது நீரே சிக்கிக் கொண்டீர் பார்த்தீரா.