இருநூறு ஆண்டுமுன்பு குமரி மண்ணில் இந்துக்களால் நடந்த வெறியாட்டத்தை …மறக்க முடியுமா ??ஆரிய இந்துக்களால் மனுதர்ம விதிகள் ஆட்சி செய்த காலத்தில்…..!! மறுக்க முடியுமா ?? அவற்றின் சில கொடுமைகள் …இதோ பாருங்கள் …!!
திருவிதாங்கூர் (தற்போதைய தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கேரளத்தில் உள்ள திருவனந்தபுரம் ) சமஸ்தானத்தின் கீழிருந்த குமரி மாவட்டத்தில் அன்று நிலவிய சாதிக் கொடுமை…!! தாழ்த்தப்பட்டவர்களும் சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட சாணார் [நாடார்], பரவர், ஈழவர், முக்குவர், புலையர்…. உள்ளிட்ட “18 சாதியைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணியமுடியாது. அப்படி அணிவது மாபெரும் குற்றம்.”
சமஸ்தானத்தில் பெரும் எண்ணிக்கையில் இருந்தபோதும் குறைந்த எண்ணிக்கையில் இருந்த நம்பூதிரி(பார்ப்பனர்கள்) மற்றும் உயர் சாதி நாயர்கள் பிள்ளைமார் இந்துக்களால் உலகில் மிகவும் கொடுரதனமாகவும் ,கேவலமாக நடத்தபெற்ற வரலாறு இன்றைய இளைய சமுதாயம் அறிந்திருக்க வேண்டும் .அதனால் இந்த பதிவு …!!
ஆரிய இந்துக்கள் அந்த காலத்தில் குளத்தில் உடைப்பு ஏற்பட்டால் தெய்வ குற்றம் எனக்கருதி ,தெய்வத்திற்கு வேண்டியவர்களான தாழ்த்தப்பட்ட அடிமைகளை உயிரோடு குளத்தில் உடைப்பெடுத்த இடத்தில போட்டு மூடியிருக்கிறார்கள் !!
மகாராஜா மார்த்தாண்ட வர்மா காலத்தில் அவருக்கு
அரசாங்கத்தில் ஏதாவது பிரச்சினை வந்தால் அதற்க்கு தெய்வ குற்றம்என நம்பூதிரி(பார்ப்பனர்கள்)
எடுத்து கூறி தெய்வ குற்றத்தை போக்க வேண்டும் எனில் தாழ்த்தப்பட்ட 15 குழந்தைகளை தெய்வத்திற்கு பலி கொடுக்கவேண்டும் என்றார்கள் .அதன்படி ஒரு மழை நாள் இரவு ஈழவர் சமுதாயத்தை சேர்ந்த 15 குழந்தைகள் திருவனந்த புரத்துக்கு பிடித்து செல்லப்பட்டு ,நம்பூதிரி(பார்ப்பனர்கள்) மந்திர ,தந்திர சடங்குகளுக்கு பின் நகரின் நான்கு மூலைகளிலும் உயரோடு புதைக்கபட்டார்கள் !! (அ.கா .பக்கம் .91-92 )
மேலும் எசமானுக்கு உடல் நலம் இல்லை எனில் ஆடு மாடுகளை பலி இடுவதற்கு பதிலாக எல்லா பெரிய கோவில்களிலும் நரபலி கொடுக்க பட்ட கொடுமைகள் கூட நடந்திருக்கிறது !! ( மறுபக்கம் ,ப.69)
கொடிய தீமைகளில் பாதிக்க பட்ட ஒரு பிரிவு தான்(சாணார்(நாடார் ) ,முக்குவர், புலையர்……) தாழ்த்தப்பட்ட மக்கள் இடுப்புக்கு மேலும், முட்டுக்கு கீழும் ஆடை அணியக்கூடாது என்றக் கட்டுப்பாடு இருந்தது . உயர்ந்த சாதி இந்துக்களின் முன்பு தாழ்த்தப்பட்ட பெண்கள் மறைக்கப்படாத மார்பகங்களுடன்தான் மரியாதை செலுத்த வேண்டும்.
மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி…
மார்புக்கு (முலை) வரி வசூலிப்பார்கள்…!!மார்பகம் அளவுக்கு ஏத்தா மாதிரி வரி; பெரிய மார்பகளென்றால் வரி அதிகம்…!! வரி கட்ட முடியாவிட்டால், இடுக்கியினை ( பனைமரத்து பூவை பத படுத்த பயன்படுத்துவது ) கொண்டு மார்பகங்களை திருகுவார்களாம் …சில இடங்களில் முலைகள் அறுத்து எறியப் பட்டது…!! என்ன கொடுமை இந்த கொடுமை உலகில் நடந்ததுண்டா…?
கோவில் தெருக்களில் செல்வதற்கும், உயர்சாதியினரின் தெருக்களில் செல்லவும், குளம், கிணறுகளில் தண்ணீர் எடுக்கவும், குளிக்கவும், காற்றோட்டமுள்ள வீடுகளில் வசிக்கவும் கூட தடை விதிக்கப்பட்டிருந்தது…!!
சாணார்(நாடார் ),முக்குவர், புலையர்… மக்கள் திருமணங்களில் தாலி கட்டுவதற்குக் கூட வரி விதிக்கப்பட்டது..!! பசுக்கள், மண்வெட்டிகள், அரிவாள்களுக்கும் கூட வரி விதிக்கப்பட்டது…!! பனைத் தொழில் செய்பவர்கள் பனை மரத்திற்கும் கூட வரி செலுத்த வேண்டும் என்ற பெயரில் கொத்தடிமைகளாகக் கூலியின்றி வேலை செய்ய வேண்டும்…!!
சாணார் (நாடார் ),முக்குவர், புலையர்… … மக்கள் தீண்டத்தகாதவர்களென்றும் தள்ளி வைக்கப்பட்டனர். பெண்கள் மேலாடை அணிவதற்கும், தெய்வத்தை வழிபடுவதற்கும் கூடத் தடை விதிக்கப்பட்டிருந்தது…!!
இன்னும் பாருங்கள் நாகர்கோயில் செல்லும் வழியில் தாளக்குடி எனும் கிராமம். அங்கு சாம்பவர் சாதியைச் சார்ந்த கர்ப்பிணி பெண் மாடத்தியை, மேலாடை அணிந்ததற்காக ஆதிக்கசாதியினர் அடிமையாய் வைத்திருந்தனர். அவரை மாட்டுக்குப் பதிலாய் கலப்பையில் பூட்டி நிலத்தை உழுது கொன்றனர். இந்த கொடுமை 19ம் நூற்றாண்டில் நடந்தது…!!
கன்னியாகுமரி அருகேயுள்ள கொட்டாரத்தில் திருமணமான சில நாட்களில் தாலி, மேலாடையுடன் வந்த பெண் அரசாணையை எதிர்த்த குற்றத்துக்காக பொது இடத்தில் தாலியறுத்து உடை களைந்து அரசுப் படையால் கொலை செய்யப்பட்டார். அந்த இடம் இன்றும் தாலியறுத்தான் சந்தை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது!!
மேலாடை அணிந்ததற்காக சிலரைச் சுடுமணலில் நாள் முழுவதும் நிற்க வைத்தார்கள் மேலாடை அணிந்த பெண்களின் மார்புகளை வெட்டினார்கள்…!!
இதையறிந்த அய்யா வைகுந்தர் கொடுமைகளுக்கு ஆளான மக்களிடம், “மார்பில் ஆடையணியுங்கள்…!! முட்டுக்குக் கீழ் துணி கட்டுங்கள்….!! தங்கத்தில் தாலி கட்டுங்கள்….!! இடுப்பில் குடம் வைத்துத் தண்ணீர் எடுங்கள்…!! கோவில்களை நீங்களே கருவறையில் சென்று பூசை செய்யுங்கள்…!! வணங்குங்கள்” என்றார்.
பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கூட “திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நிலவும் சாதியக் கொடுமைகளைப் போன்று உலகில் வேறெங்கும் கண்டதில்லை” என எழுதியுள்ளனர்…!!
இக்கொடுமைகளைக் கண்டதனால் தான் விவேகானந்தர் குமரிக்கு வந்த பொழுது, “திருவிதாங்கூர் சமஸ்தானம் பைத்தியக்காரர்கள் வாழும் இடம்” எனக் குறிப்பிட்டார்…!!
இது தமிழர் வலாற்றின் கறைகள்…!! காலம் மாறலாம் .வரலாறு தெரியாமல் இருந்தால், எதிர் காலம் மதவாத சத்திகளிடம் அடிமை பட்டு விட கூடாது !!
–தன்மான தமிழன்
“திருஞானசம்பந்தர் சமணர்களை வாதில் வென்று பாண்டிய மன்னனை மதமீட்டுருவாக்கம் செய்துள்ளார்.
வாதில் தோற்ற சமணர்கள், அவர்கள் ஏற்கனவே வகுத்துக் கொண்டபடி கழுவேறியுள்ளனர் என்றும், சம்பந்தர் பெருமான் சமணர்களை வாதில் வென்றதற்கு ”சம்பந்த தேவாரத்தில்” (மட்டும்) சான்றுகள் உண்டா? உண்டென்றால்,எமக்கு தந்தருளும்படி கேட்டு கொள்கிறேன் ஐயா.”
இதைத்தான் கூறுகெட்ட கேள்வி என்பது. 8,000 சமணர்கள் கழுவேறினர் என்று சொன்னது கி.பி.11-ம் நூற்றாண்டில் வந்த சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணத்தில்.இதற்கு ஆதாரம் கி.பி. 7-ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர் தேவாரத்தில் எங்கே இருக்கின்றது என்று கேட்டால் இது குருமுட்டைக் கேள்வி அல்லவா. 8,000 சமணர்கள் கழுவேறினார்கள் என்று திருஞானசம்பந்தரா சொன்னார் பிள்ளையாரின் தேவாரத்தில் தேட?.
கீற்று.காம் திராவிட பாசறையைச் சார்ந்தது. அதில் உள்ள செய்திகளை எங்கனம் பார்க்க வேண்டும் என்பது எம்மைப் போன்றோருக்கே தெரியும் காரணம் அப்பகுதியில் இருந்து பல செய்திகளை நானும் பெற்று செம்பருத்தியில் போட்டிருக்கின்றேன்.
“இவ்விரண்டு நிகழ்ச்சிகளிலும் ச(அ)மணர்களாக மாதம்மாற்றம் செய்யப்பட்டவர்களின் உயிர்களே பலியாகியுள்ளன. மதமாற்றம் தடைபட்டுள்ளது. எனவே இந்நிகழ்ச்சிகளை சமணர்கள் தங்களது குறிப்புகளில் எழுதி வைத்திருக்க வாய்ப்பே இல்லை என்றும் கருதுகிறேன். அப்பர் பெருமானை யார் மதம் மாற்றினார்கள்? அவராகத்தான் சைவ மதத்திலிருந்து சமண மதம் புகுந்தார்? என்று அவரின் பாடலகள் கூறுகின்றன?என்னமோ தொன்றுதொட்டு தமிழர்கள் சைவர்களாக வாழ்ந்து வந்ததுபோலவும், பின்னால் வந்த சமணர்கள் சைவர்களை மதம் மாற்றினார்கள் என்பது போலவும் நிறைய வலைஞ்ர்கள் எழுதி வருகிறார்கள்.”
தமிழர் சமய வரலாற்றை அறியாத ஒரு நாத்திகரின் வார்த்தையை இங்கே கொண்டு போடும் நீரும் தமிழரின் சமய வரலாற்றை அறியாதவரே. சிலப்பதிகாரத்தில் ‘பிறவா யாக்கை பெரியோன்” கோவில் என்று சிவன் கோவிலைப் பார்த்து சொன்னது எதனால். அந்த கி.பி. 3-ம் நூற்றாண்டில் சிவ நெறி இருந்தது தெளிவல்லவா?. அப்படியானால் தமிழரிடையே சிவநெறி தொன்றுதொட்டு இருந்தது என்பதையும் அறியாமல் எழுதிய கருத்துக்குப் பதில் எழுதுவது எம் நேரமே வீணாகும்.
திராவிட பாசறைக்கு ஏன் சமண மதத்தினர் மீது இவ்வளவு கரிசனம் தெரியுமா?. அவர்கள் இந்து எனப்படும் மதத்தை எதிர்த்தனர். இந்துக்குள் சைவமும் புகுந்துக் கொண்டதால் சைவம் தனித் தமிழர் சமயம் என்று அறியாமலும், இது ஆரிய வேத நெறிகளுக்கும், வேதாந்த கோட்பாடுகளுக்கும், மனு சாத்திரத்திர்க்கும் வேறுபட்டவை என்று பகுத்தறியாமலும் சைவத்தையும் சேர்த்தே தாக்கினர். இதுதான் கொசுவிர்க்குப் பயந்து வீட்டைக் கொளுத்திய கதையாக மாறியது. வைதீக மதத்தை எதிர்க்கப் போராடி, தமிழர் சமய நெறிகளை அறியாமல் அதையும் சேர்த்தே ஒதுக்கினர் திராவிட கழகத்தார். அன்றே அவர்கள் இந்த மயக்க நிலையில் இருந்து தெளிந்து தமிழருடைய தனித்துவம் வாய்ந்த இறை தத்துவங்களையும், சமய கோட்பாடுகளையும் அறிந்து சைவத்தைப் போற்றி இருந்தால் இன்று அவர்கள் நாத்திகர்களாகிப் போயிருக்க மாட்டார் என்பது திண்ணம். மேலும் வைதீக மதம் மீண்டும் தமிழகத்தில் குன்றிப் போயிருக்கும். நிற்க.
ஒருவருக்கு நேர்ந்த நல்லதையும், கெட்டதையும் எதிர்கால தலைமுறையினருக்கும் தெரிய வேண்டும் என்று எழுதி வைப்பதே வரலாறு. சமண துறவிகள் என்ன பிற மதத்தினருக்கு சளைத்தவர்களா?. வடக்கே இருந்து மைசூருக்கு 2,000 சமண துறவிகளோடு இறுதி தீர்தங்கருடன் கி.மு. 3-ம் நூறாண்டில் வந்து சேர்ந்த வரலாற்றை எழுதி வைத்தவர், கி.பி. 7-ம் நூற்றாண்டில் நடந்த சம்பவத்தை எழுதி வைக்காமல் போய் விட்டனர் என்று யார் காதில் பூ சுற்றுகின்றார் அந்த நாத்திகர்?. சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்!.
“மாதம்மாற்றம் செய்யப்பட்டவர்களின் உயிர்களே பலியாகியுள்ளன”. மதம் மாற்றம் செய்யப்பட்டவர்கள் யார்? தமிழர்கள்தான் என்று சொல்லாமல் சொல்லி, தமிழர்கள் கழுவேறினால் வேற்று இன சமண துறைவிகள் ஏன் அவ்வரலாற்றை எழுதி வைக்க வேண்டும் என்று சொல்ல வருகின்றாரா அந்த நாத்திகர். விவேகம் இல்லாத அந்த நாத்திகரின் கருத்துக்கு பதில் எழுதுவது விவேகமான செயலாக எமக்குப் படவில்லை.
தமிழரிடையே சமணர் வருகைக்குக் முன்னர் இருந்த திருமேனி வழிபாடும், உயிருக்கும் மேற்பட்ட ஒரு சக்தியை இறைவன் என்ற உருவில் பார்த்த நெறிமுறையும் தொன்று தொட்டு இருந்தது தொல்காப்பியர் நமக்குத் தெரிவித்த தமிழர் வரலாறு. இந்நெறிகளுக்கும், நம்பிக்கைகளுக்கும் புறம்பான நெறியைக் கொண்டு வந்தவர் சமணர். சமணர் மத தத்துவத்தில் கடவுள் நெறி இல்லை. தமது மத துறவியாகிய அருகர் சிலை வழிபாடே அவர்களின் கடவுள் வழிபாடாக இருந்தது. குறிஞ்சி முருகனையும், முல்லைத் திருமாலையும், மருத வேந்தனையும், நெய்தல் வருணனையும், பாலை கொற்றவையும் வழிபட்டுப் பழகிப் போன தமிழரை மாற்று சிலை வழிபாட்டைச் செய்ய சொன்னால் செய்வாரா?. மேலும் சமண மத தத்துவம் வீடு பேற்றினை கடுந்துறவம் கொண்டே வினைப்பயனை போக்கி அவர்தம் அருகரின் பேற்றை பெற முடியும் என்பதாகும். தமிழர் இல்லறத்திலிருந்தே வீடு பேற்றைப் பெற முடியும் என்று விளக்கியது சைவ தத்துவம். இந்த வேற்றுமைதான் பாண்டிய அரசன் மதம் மாறியதும் சமண மதம் தென்னாட்டில் வெகு விரைவாக குன்றியதர்க்குக் காரணம். தமிழர் மீண்டும் தத்தம் திருமேனி வழிபாட்டிற்கே திரும்பினர். இதனைத் தவிர்த்து. சமணர்களிடம் இருந்த அறநெறியே தமிழரில் ஒரு பகுதியினர் சமணத்திற்கு மாறுவதற்கு வழிவகுத்தது. மருள்நீக்கியார் என்ற திருநாவுக்கரசரும் குடும்பச் சூழல் காரணமாக சமணம் போந்ததும் அவ்வாறே. மீண்டது சிவபெருமானின் மறக்கருணை. நாளை சிந்திப்போம்.
மதத்திற்கு அப்பால் பட்டவன் இறைவன்,நம் பக்குவதிற்கே அனைத்து மதங்களும், எல்லா நதிகளும் ஒரு கடலின் சங்கமத்தை நாடி நம் பயணம் .இங்குள்ள கருத்துக்கள் மானிட அறிவுக்கு எட்டியது மட்டுமே.”ஓம்” எனும் பிரணவத்தை முழுமையாக அறிய வெகுகாலம் பிடிக்கும் ஐயா!.ஒலி.ஒளி ஒற்று கூடும் வரை காத்திருக்க வேண்டும்,இந்த ஒரு பிறவி போதாது.
அன்னை எத்தனை எத்தனை அன்னையோ!
அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ!
பின்னை எத்தனை எத்தனை பெண்டிரோ!
பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ!
முன்னை எத்தனை எத்தனை சன்மமோ!
மூடன் நான்அடி யேனு மறிந்திளேன்!
இன்னம் எத்தனை எத்தனை சன்மமோ!
என்செய் கேன்கச்சி யேகம்ப நாதனே! – பட்டினத்தார்
முக்காலமும் அறிவது பரம்பொருளின் கருணை படியே ஆகும்! இப்பொது புரிகிறதா ஐயா சில நாட்களுக்கு முன்பு திருவிளையாடல் அரம்பம் என்று தாங்கள் கூறியதற்கு பொருள்? அன்பே சிவம்!
புராணத்தில் வரும் “எண்ணாயிரவரும்” என்பதை ஏற்றுக் கொள்வேன் ஆனால், தன்வினைச் சுட்டாக வரும் “ஏறினார்கள்” என்பதை ஏற்க மாட்டேன் என்றால் தங்களுக்கு தமிழ் இலக்கணம் புரியவில்லை என்றுதானே அர்த்தம்!. பின்னதை ஏற்கவில்லை என்றால் முன்னதையும் ஏற்கக் கூடாது.
எப்படி ஏற்க முடியும்?நீங்கள் தானே இப்படி சொல்லி இருக்கிறிர்கள்..
8 March, 2015, 11:21 ”இயற்கைக்கு மேற்பட்ட இயல்புகளைக் கற்பித்துக் கதை எழுதுவது வழக்கம். இது எல்லா மதங்களுக்கும் இயல்பு. தம்முடைய மதப் பெரியார்களின் பெருமை, ஆற்றல், சிறப்பு, தெய்விகத் தன்மை முதலியவற்றை அதிகப்படுத்த வேண்டும் என்னும் சமய ஆர்வத்தினால் ஒவ்வொரு சமயத்தாரும் தத்தம் சமயப் பெரியாரைப் பற்றிப் பலவித செய்திகளைக் கற்பித்து விடுகிறார்கள் என்று.
ஆக ஒரு கொலையை மறைக்க தற்கொலை என தம்முடைய மதப் பெரியார்களின் பெருமை, ஆற்றல், சிறப்பு, தெய்விகத் தன்மை முதலியவற்றை அதிகப்படுத்த வேண்டும் என்னும் சமய ஆர்வத்தினால் இப்படி எழுதியிருக்கிறார்கள் என்று தானே கொள்ள வேண்டும்?இதில் என்ன விளக்கெண்ணை இலக்கணம் வேண்டி இருக்கு?
இது கொலை இல்லை என்று கொள்வோமானால் ஏன் 1)இன்னும் சீர்காழியில், ஆண்டுதோறும் ஏப்ரல் திங்கள் ஞானசம்பந்தரின் திருமுலைப்பால் விழா நடைபெறுவதாகவும், அவ்விழாவில் ‘சமணப் பெண்களை…’ என இசையோடு கூவி சொல்லொணா வார்த்தைகளால் பெண்களின் தலை முதல் கால் வரை ஒவ்வொரு அங்கத்தையும் குறிப்பிட்டுப் பாடுவதாகவும், அதைப் பார்த்துக் கேட்டு தாம் கண்ணீர் விட்டு அழுததாகவும் ஜீவபந்து ஸ்ரீபால் அவரது தமிழகத்தில் ஜைனம் என்ற நூலில் குறிப்பிடுகின்றார்?
2)இங்கு, சைவ சமயத்தை சேர்ந்த ஞான சம்பந்தர் சமண மதத்தவர்களை வென்ற பின், அம்மத பெண்களை கற்பழிக்க இறைவன் அருள் செய்ய வேண்டும் என்று வேண்டுகிறார்…..
என்ன…தூக்கி வாரி போடுகிறதா ?
பால ஞானியான ஞான சம்பந்தர் பெண்களை கற்பழிக்க நினைப்பாரா?அதற்க்கு இறைவனின் அருளை நாடுவாரா ?
குழப்பமாய் இருக்கிறதா?
பாடல்:
மண்ண கத்திலும் வானிலு மெங்குமாம்
திண்ண கத்திரு வாலவா யாயருள்
பெண்ண கத்தெழிற் சாக்கியப் பேயமண்
தெண்ணர் கற்பழிக் கத்திரு வுள்ளமே.
சீர் பிரித்த பின்:
மண் அகத்திலும் வானிலும் எங்குமாம்
திண் அகத்து திரு ஆலவாய் அருள்
பெண் அகத்து எழில் சாக்கியப் பேய் அமண்
தெண்ணர் கற்பழிக்கத் திரு உள்ளமே
பொருள்:
மண் அகத்திலும் = மண்ணிலும், இந்த பூமியிலும்
வானிலும் = தேவர் உலகிலும்,
எங்குமாம் = வேறு எல்லா இடத்திலும்
திண் அகத்து = திண்மையான மதில்களை கொண்ட
திரு ஆலவாய் = மதுரை (திரு + வால் + வாய்)
அருள் = அருள் செய்ய வேண்டும்
பெண் அகத்து எழில் = பெண்களிடம் உள்ள எழில்
சாக்கியப் பேய் அமண் = சாக்கியரோடு கூடிய பேய் போன்ற சமண சமயத்தை சேர்ந்த
தெண்ணர் = திண்ணர், திண்மையான உடல் உள்ளவர்கள், குண்டர்கள்,
கற்பழிக்கத் திரு உள்ளமே = கற்பை அழிக்க திருவுள்ளம் அருள வேண்டும். அறியாமையை அழிக்க திரு உள்ளம் அருள வேண்டும் என்று பெரியவர்கள் உரை கூறுகிறார்கள்.Posted by Rethin at 9:28 PM
இதற்கும் ஒரு comment .
AnonymousJuly 13, 2012 at 2:49 PM
பெண் அகத்து எழில் சாக்கியப் பேய் அமண்
தெண்ணர் கற்பழிக்கத் திரு உள்ளமே
கற்பு என்பதற்கு கல்வி என்று இங்குப் பொருள் எடுத்துக் கொண்டால், சமண, சாக்கிய மக்களிடம் உள்ள கற்பை அழிக்க உதவ வேண்டும் என்று பாடியிருக்கவேண்டும். அதைவிட்டு, சமண, சாக்கிய பெண்களை (மட்டும்) கற்பழிக்கவேண்டும் என்று கூறுவதென்ன?
இதில் சமணர்களது கொலையா,தற்கொலையா என்பதே வாதம்.காரியம் காரணம் ஆராய்வது வாதத்தின் வேறு கோணமாகும் கொலை என்பதையே மேற் சம்பவம் சுட்டும்.
“கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே” என்று அவர்களே குறிப்பிட்ட பிறகு மேலும் வீ அரசு எழுதிய கருத்து அவரின் சொந்த கருத்து என்பதைச் சொல்லவும் வேண்டுமா. தனிபட்ட நபர்களை மேற்கோள் காட்டி அவர் இப்படிச் சொன்னார், இவர் அப்படிச் சொன்னார் என்பதற்கான மூலங்கள் எங்கு உள்ளனவோ அவற்றை ஆராய்ந்து, அவ்வாறு சொன்னதற்க்கான காரணம் தெரிந்து, சொன்னவரின் மனோ நிலையும் புரிந்துக் கொண்டு கருத்தாட வேண்டுமே ஒழிய ஒருவர் தமது கருத்தைத் தெரிவித்தால் எல்லா சைவரும் அப்படித்தான் இருப்பார் என்று ஒரு முடிவிற்கு வருவது அறிவீனம்.
இதை மறுத்து இப்பொழுது நான் கருத்து எழுதுகின்றேன். தருமை ஆதீன புலவர் அருணை வடிவேல் அவர்கள் திருக்குறள் அறவழியில் நின்று வீடுபேற்றை பெற வேண்டிய உலகருக்கு உரிய நூல் என்று தனது ‘சித்தாந்த வினா விடை’ என்ற புத்தகத்தில் உரை செய்துள்ளார். இந்த மாற்றுக் கருத்தையும் ஒப்பு நோக்குங்கள்.
சமணர் மொழிபெயர்த்த இலக்கியமான சீவக சிந்தாமணி கதையில் மூழ்கி இருந்த சோழ மன்னனின் நிலைக் கண்டு அதை விட நல்ல பொருள் அடங்கிய திருத்தொண்டர் புராணம் தம்மிடம் உள்ளது என்று கூறி எடுத்துரைக்க அப்புரானத்தை ஒரு வருட காலத்தில் எழுதி முடித்து மேலும் ஒரு வருடத்திற்கு அரங்கேற்றினார் சேக்கிழார். அந்த சீவக சிந்தாமணியின் கதை என்ன தெரியுமா?. ஓர் அரசன் ஒரே நேரத்தில் எப்படி 12 காதலிகளுடன் சல்லாபம் செய்தான் என்று கூறும் கதை. இப்ப உள்ள இளைய தலைமுறைக்கு இது தேவையா?. அந்த பழங்க்காப்பியம் தமிழுக்குச் செய்த தொண்டு “அன்றும் தமிழ் வாழ்ந்தது” என்பதே. திருத்தொண்டர் புராணமோ 63 நாயன்மார்களின் வரலாற்றையும் அன்றைய காலத்து தமிழர்களின் வாழ்க்கை நெறிமுறைகளையும், நிலையையும் விளக்கி வைத்த வரலாற்று காப்பியம். பண்டைய தமிழர் வரலாறு தமிழரல்லாதோருக்கு தேவை இல்லாமல் இருக்கலாம் ஆனால் எம்மைப் போன்ற தமிழருக்குத் தேவையான நூல் திருத்தொண்டர் புராணம். அதனால் எது நம் அறிவிற்கு தேவையான நூல் என்பதை அவரவரே தத்தம் அறிவுக்கு எட்டியவாறு கற்று உணருவது நல்லது. சொல் புத்தி தாமச குணம் கொண்டவருக்கே அதிகம் தேவைப் படும்.
மனிதனின் ஆன்ம சிற்சத்தி என்பது ஒரு எல்லைக்கு வரையரைப் பட்டது என்பதை யாமும் அறிவோம் சித்தரே. ஆதலால் இறைவன் மதத்திற்கு அப்பாற் பட்டவன் என்பதையும் அறிந்துள்ளேன். நன்றி சித்தரே.
பல முறை சொல் புத்திக் கேட்டுக் கொண்டு பேச வேண்டாம் சொந்த புத்தியைக் கொண்டு செயல்படுங்கள் என்றால் கேட்க மாட்டேன் என்று சொல்கின்றீரே. தங்களின் நோக்கம் என்ன அகஸ்டின்?. தமிழரையும் சைவத்தையும் இப்படி இழிவுபடுத்தி எழுத தங்களை தூண்டியவர் யார்?. உம் மதத்தை நான் கொச்சைப் படுத்தி எழுதாமல் எம் சமயத்தை தற்காப்பது நட்பு நாடி. அதற்கும் ஒரு எல்லை உண்டு.
நீங்கள் கூறும் “கற்பழிப்பு” பாடலுக்கு தருமை ஆதீனம் தரும் பொழிப்புரையும், குறிப்புரையும் இதோ:
“மண்ண கத்திலும் வானிலு மெங்குமாம்
திண்ண கத்திரு வாலவா யாயருள்
பெண்ண கத்தெழிற் சாக்கியப் பேயமண்
தெண்ணர் கற்பழிக் கத்திரு வுள்ளமே.” (3.47.3)
பொழிப்புரை:
“இப் பூவுலகத்திலும், விண்ணுலகத்திலும் மற்றும் எல்லா இடங்களிலும் உறுதியாய் விளங்கும் ஆலவாயில் வீற்றிருக்கின்ற இறைவனே ! பௌத்தர்களும் சமணர்களும் வாதம் புரியும் தன்மையில் அவர்தம் கல்வியைத் தகுதியற்றதாக அழிதல் செய்வதற்குத் திருவுள்ளம் யாது! உரைத்தருள்வாயாக.”
குறிப்புரை:
“எங்கும் ஆம் – எங்குமாய் நிறைந்து, திருவால வாயினில் வெளிப்பட்டருளிய பெருமானே என்பது முதலிரண்டடியின் கருத்து . அருள் – சொல்லி யருள்வீராக. எழில் இகழ்ச்சிக் குறிப்பு. திண்ணகத் திருவாலவாய் – பகைவரால் அழிக்கமுடியாத வலிய அரண்களையுடைய திருவாலவாய். தெண்ணர் – திண்ணர் என்பதன் மரூஉ. குண்டர் முதலிய பிற பெயர்களைப்போல்வது இது, சாக்கியப் பேய் அமண் – சாக்கியரோடு கூடிய பேய்போன்ற சமணர். கற்பு – கல்விநிலை ; அல்லது கல்போன்ற உறுதிப்பாடு. பெண்ணகத்துக்குச் சாக்கியர் கற்பு என்ற சொல் அமைப்பை நோக்குக. நாங்கள் பகைகளை ஒழிக்க எண்ணுவதுபோல அவர்களும் எண்ணலாமோ எனின், தானவிசேடத்தால் சைவத்துக்கு வாழ்வும் புறச் சமயத்துக்கு வீழ்வும் அளிக்கவல்ல தலம் என்பார் ; ` திண்ணகத் திருவாலவாய் ` என்றார். இடவிசேடம் இத்துணைத்து என்பதை ` முறஞ்செவி வாரணம் முன்சமம் முருக்கிய, புறஞ்சிறை வாரணம் புக்கனர் புரிந்து ` எனவரும் சிலப்பதிகாரத்தால் அறிக.”
இப்பொழுது தெரிகின்றதா சைவத்தின் எதிரிகள் எங்கெல்லாம் இருக்கின்றனர் என்று. இங்கே உம்மை போன்று உலகில் பிறரும் உளர். அதற்காக எம்மை போன்ற சைவர் மனம் தளர மாட்டோம். எங்கள் மன உறுதி அந்த சிவ பெருமான் கொடுத்தது. அவனை வழிபடுவோருக்கு “அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை”.
பெண்ணின் கற்புக்கு தமிழர் வகுத்த இலக்கணம் அது கல் போன்று உறுதியானது. “கற்பு” என்பதற்கு “கல்வி” என்று ஒரு பொருளும் தமிழில் உண்டு. கீழே கொடுக்கப் பட்டுள்ள தமிழ் அகராதியை சொடுக்குக:
http://www.tamilvu.org/library/dicIndex.htm
இங்கே பௌத்த சமணரின் உறுதியான கல்வி நிலைக்கு உவமையாக பெண்ணின் கற்பு குறிப்பிடப்பட்டது. அப்படி பௌத்தரும், சமணரும் அவர்தம் கல்வியில் உறுதியாக இருப்பதை தகர்பதர்க்கு எனக்கு ஒரு வழி சொல்வாயாக என்று இறைவனிடம் பிள்ளையார் வேண்டிய பாடலை கொச்சைப் படுத்த உம் மனம் என்ன கல் மனமா?. சிவ சிவ.
சபாஷ் சரியான போட்டி
நானும் மீண்டும் மீண்டுமாய் சொல்லுகிறேன்.உமது வாதத்தில் ஒரு பிடிப்பு இல்லை.ஏதோ ஒரு வாதத்தில் எப்படியும் ஜெயித்து விடவே உமது போராட்டமாய் இருக்கிறது.சமணர்கள் கொலை செய்யப்பட்டார்களா தற்கொலையா என்பதே வாதம்.
**8 March, 2015, 11:21 ”இயற்கைக்கு மேற்பட்ட இயல்புகளைக் கற்பித்துக் கதை எழுதுவது வழக்கம்.”என்கிற உங்களது கூற்றையே நானும் ஆமோதித்து கழுவில் ஏறினார்கள் என்கிற பதம் விளித்து கூறப்பட்டது என்று தானே நானும் சொல்கிறேன்இந்தோனேசியாவில் firing squad க்கு உட்படுத்தப்பட்ட தண்டனை கைதி அந்த கொலை களத்தில் தானே சென்று நின்று கொண்டால் ,அவன் தானே தற்கொலைக்கு அமர்ந்துக் கொண்டான் என்று அர்த்தமாகி விடுமா?
** 8 March, 2015, 11:21 திருவிளையாடற் புராணத்திற்கு, பொழிப்புரையும் உரைநடையும் கொடுத்த ஆசிரியர்களை மேற்கோள் காட்டி இங்கே எழுதினால் அது உண்மையாகி விடுமா?.
நன்றாக வாசியுங்கள்,மேல் குறிப்பிட்டதும் உங்களுடைய கூற்றுத்தான்.ஆனால் இங்கும் நீங்களே உங்கள் வாதத்திற்கு முரண்பாடாய் பாடலுக்கு தருமை ஆதீனம் தரும் பொழிப்புரையும், குறிப்புரையும் தருகிறீர்கள் .நீர் சொன்னால் வாக்கு நான் சொன்னால் பேக்கா? இது என்ன விதண்டா வாதம்?
தமிழையோ,மதத்தையோ கொச்சை படுத்துவது எனது நோக்கமல்ல.இன வெறியை மத வெறியை தூண்ட திராவிட விற்பனர் தமிழ் வியாபாரிகள் நிறையவே இருக்கிறார்கள் .இன்றைய இந்த வாதம் புதிதான ஒன்றல்ல.மற்றவகளின் பழைய blog ல் இருந்துதான் உமக்கு மேற்கோள் காண்பித்தேன்.யாரும் யாருடைய கருத்தையும் மற்றவர்கள் மேல் திணிப்பதை நான் எற்றுக் கொள்வதில்லை, மற்றவர்களின் கருத்தையும் நான் மதிப்பவன்.அனால் விவாதம் என்பது வேறு.அதில் தம் வாதத்தையே வலியுறுத்துவோம்.
”மண்ண கத்திலும் வானிலு மெங்குமாம்
திண்ண கத்திரு வாலவா யாயருள்
பெண்ண கத்தெழிற் சாக்கியப் பேயமண்
தெண்ணர் கற்பழிக் கத்திரு வுள்ளமே.” (3.47.
நீங்கள் மேல் குறிப்பிட்ட பாடலுக்கு விளித்துக் கூறப்பட்டபொழிப்புரையையே குறிப்பிர்கள் என்று அறிந்தே ஒரு comment ஐயும் பேஸ்ட் செய்தேன்.அதி நீங்கள் படிக்க வில்லை போலும்.அதை கீழே படிக்கவும்.
AnonymousJuly 13, 2012 at 2:49 PM
பெண் அகத்து எழில் சாக்கியப் பேய் அமண்
தெண்ணர் கற்பழிக்கத் திரு உள்ளமே
கற்பு என்பதற்கு கல்வி என்று இங்குப் பொருள் எடுத்துக் கொண்டால், சமண, சாக்கிய மக்களிடம் உள்ள கற்பை அழிக்க உதவ வேண்டும் என்று பாடியிருக்கவேண்டும். அதைவிட்டு, சமண, சாக்கிய பெண்களை (மட்டும்) கற்பழிக்கவேண்டும் என்று கூறுவதென்ன?
சமணர்கள் கொலை செய்யப்பட்டார்கள் என்பதை நிறுவவே சில பாடல்களை காட்டினேன் இவை போதும் என்பதாலும் மேலும் எழுதினால் விவாதத்தின் பொருள் புரியாமல் மற்றவர்களுக்கு சமய காழ்புணர்ச்சியை தூண்டலாம் என்பதாலும் இதற்கு மேல் இந்த தலைப்பில் எழுத இந்த களத்தில் மனமில்லை.களத்தில் வேறு பொருத்தமான தலைப்பில் சிந்த்தனைகுரியவற்றை எழுதுவோம்.
முற்றும்
புராணத்தின் அடிப்படையைக் கொண்டு 8,000 சமணர்கள் சைவர்களால் படுகொலை செய்யப்பட்டனர் என்று கூறியதற்கு அது மிகைபடுத்தப் பட்ட எண்ணிக்கையாக இருக்கலாம் என்று ம.சி.வே- வின் கருத்தை முன்னிருத்தினேன். ஆனால் அதுதான் உண்மை என்று பேசிய தங்களை திருத்த அக்கருத்துக்கு உடைய மூலத்தை எடுத்துப் போட்டு “ஏறினார்கள்” என்பது தன்வினை சுட்டு என்ற இலக்கணத்தையும் முன் வைத்தேன். அது “விளக்கெண்ணை இலக்கணம்” என்று வந்தது மறுபதில். அது உண்மையை விளக்கும் இலக்கணம் என்று அறியாமல் சைவ நூல்களைப் படிப்போருக்கு எப்படி பொருள் விளங்கும்?.
எவ்வாறு கிறிஸ்துவர்கள் விவிலியத்தை போற்றுகின்றனரோ, எவ்வாறு இஸ்லாமியர்கள் குர்ரானை போற்றுகின்றனரோ அவ்வாறே சைவர்களாகிய நாங்கள் தமிழ் வேதமாகிய திருமுறையைப் போற்றுகின்றோம். அதைக் கொச்சைப் படுத்த அயல்சக்தி வருமேயானால் சிவன்சக்தி போன்று நின்று நாங்களும் தமிழ் வேதத்தை தர்காப்போம்.
அன்று சத்திய வாக்குக்கு மதிப்பு கொடுத்தது போல் இன்றைய நிலை இல்லை. அதனால் தான் நம்பத் தகுந்ததாக இல்லை என்று மறுபதில் எழுதினீர். அன்று சத்தியம் மீறாதவர்கள் இருந்தனர் என்பதற்கு அவர்கள் தானாகவே கழுவேறினார்கள் என்று உணர்த்துவது திருத்தொண்டர் புராணம். அதை மறுப்பதற்கு எந்த அளவுக்கு உமக்கு தில் இருக்குமோ அந்த அளவுக்கு அதுதான் உண்மை என்று எடுத்துக் கூற எமக்கும் தில் இருக்கின்றது. அந்த புராணத்தில் உள்ளதை உள்ளவாறு ஏற்றுக் கொள்ளாமல் தன் கற்பனைக்கு ஏற்றவாறு இல்லாததால் அது தமிழ் படக் காட்சி என்றும் நம்பத் தகுந்தது இல்லை என்றும் மறுபதில் வந்தது. இதில் இருந்து அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் சைவர்கள் சமணர்களை படுகொலை செய்தனர் என்று ஆதாரமில்லாமல் எவரும் தூற்றலாம் ஆனால் அதை மறுத்து அந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளதை உள்ளவாறு எடுத்துச் சொன்னால் ஏற்க முடியவில்லை என்பது சைவத்தின் மீது உள்ள காழ்புணர்ச்சியைக் காட்டுகின்றது என்றுதான் சொல்ல வேண்டும். இது இங்கு மட்டும் நடந்த கருத்தாடல் அல்ல. இணையத்தைச் சுற்றிப் பார்த்தால் பலரும் அகஸ்தியன் போன்று சொல் புத்தியைக் கேட்டுக் கொண்டு படுகொலை, படுகொலை என்று போர் முழக்கம் விடுத்துக் கொண்டு இருப்போருக்கும் கொடுத்த விளக்கம். “யாழ்” எனும் வலைபூங்கவில் உள்ள கருத்துக்களை தொகுத்து தனது வலைபூங்காவில் போட்ட அந்த “சபேசனுக்கும்” தகும். இந்து மதத்தின் மீது நம்பிக்கை இல்லை என்று அறிவித்த அந்த சபேசன் சமணராகவோ, கிரிஸ்துவராகவோ இருப்பதற்கும் வாய்ப்புண்டு. இதற்கும் மீறிப்போய் “பௌத்த, சமண பெண் கற்பழிப்பு” என்று சொல் பேச்சுக் கொண்டு ஆடினரே அப்பொழுதுதான் எம் பொறுமையை இழந்தேன்.
தமிழ் நாட்டில் குடிகொண்ட தருமை ஆதீனம் தோன்றியது இன்று நேற்றல்ல. பல நூற்றாண்டுகளாக சைவத்திற்கு தொண்டு புரிந்த அந்த ஆதீன புலவர்களின் தமிழ் மொழி ஆற்றல் இங்கே கருத்தாடும் எவருக்கும் இல்லை. எம்மையும் சேர்த்தே சொல்கின்றேன். அவர்கள் சைவ சமயப் பணி செய்வதும். சித்தாந்தம் போதிப்பதும், சைவ வேதமாகிய திருமுறைக்கு விளக்கம் அளிப்பதும் அவர்களின் கடமைகளாகும். அவர்களின் இணையப்பகுதி ‘thevaaram.org’ என்ற இணைய முகவரியில் செயல்படுகின்றது. நீர் கூறும் ஆளுடைய பிள்ளையாரின் “கற்பழிப்பு” பாடலுக்கு தக்க விளக்கம் அளிக்க தகுதி உடையோரும், அதிகாரம் உடையோரும் தருமை ஆதீனம் போன்ற சைவ ஆதீனங்களே. சாலையில் போவோரும் வருவோரும் திருமுறைக்கு விளக்கம் சொன்னால் அகஸ்டின் சொன்னது போல்தான் இருக்கும். இனியும் சைவரிடம் விளையாட வேண்டாம் என்று உலக இணையதளத்தில் இருக்கும் சைவ எதிரிகளுக்கும் சேர்த்தே இப்பகுதியில் விளக்கம் அளிக்கப் பட்டது என்று அனைவரும் அறியட்டும். முற்றும்.
நன்றி தேனீ ஐயா! இந்த தலைப்பும் சரி இதற்கு முன் வந்த தலைப்பும் சரி சைவ சமயம் உண்மைக்கு புறம்பான குற்ற சாட்டுகளை எதிர்நோக்கி இருந்ததை மக்கள் உணரவே இந்த வாய்ப்பினை இறைவன் தந்தரிளியுள்ளார்.சைவ சமய தொண்டினை மிக சிறப்பாக செய்து வருகிறீர் ஐயா! நின் சேவை என்றேண்டும் தொடர வேண்டும்! அன்பே சிவம்!
சைவ சமயம் ஓர் அறிவார்ந்த சமயம் என்பதையும், இச்சமயத்தின் இறை கோட்பாடுகளாக விளங்கும் மெய்கண்ட சாத்திரங்களை கற்றறிந்து நமது ஆன்மீக வழிகாட்டியாக கொண்டோமானால் தமிழர் சிறந்ததொரு சமயத்தைப் பெற்றிருப்பர் என்பதில் ஐயமில்லை. இதனை உணர்ந்து இந்து மதத்தை எதிர்ப்பதை திராவிட கழகத்தார் நிறுத்திக் கொண்டு சைவ சமயத்தை தழுவி சைவம் காட்டும் அறவழியில் நாம் அனைவரும் செல்வோமானால் தமிழருக்கு இந்நாட்டில் சிறந்ததொரு எதிர்காலம் உண்டு என்று ஆழ்மனம் குறிக்கின்றது. நன்றி நந்திதேவர் அவர்களே.
சைவ சமயம் ஓர் அறிவார்ந்த சமயம் என்பதையும், இச்சமயத்தின் இறை கோட்பாடுகளாக விளங்கும் மெய்கண்ட சாத்திரங்களை கற்றறிந்து நமது ஆன்மீக வழிகாட்டியாக கொண்டோமானால் தமிழர் சிறந்ததொரு சமயத்தைப் பெற்றிருப்பர் என்பதில் ஐயமில்லை. இதனை உணர்ந்து இந்து மதத்தை எதிர்ப்பதை திராவிட கழகத்தார் நிறுத்திக் கொண்டு சைவ சமயத்தை தழுவி சைவம் காட்டும் அறவழியில் நாம் அனைவரும் செல்வோமானால் தமிழருக்கு இந்நாட்டில் சிறந்ததொரு எதிர்காலம் உண்டு என்று ஆழ்மனம் குறிக்கின்றது.
Religion without science is blind .
Science without religion is lame,என்பார்கள்.சைவ சமயம் ஓர் அறிவார்ந்த சமயம் என்பதை மட்டுமே பார்க்காமல் மதத்தில் உள்ள கலப்புகளை போக்க யாரும் முன் வராததே சமயம் இன்று இருக்கும் நிலைக்கு காரணம் என்று என்னுகிறேன்.இதில் திராவிடர்களை மட்டும் குறை சொல்ல்வது பொருத்தமாயிராது.திராவிட கட்சி கூட்டத்தார் சிறுபான்மையினரே.ஆனால் தம் தம் விருப்பம் போல் உள்ள இறை கொள்கை கலவயை பக்தி மார்க்கத்தோடு கலந்த அல்லது அதை விட்டு வெளியே வரத்தெரியாத பெரும்பான்மை மக்களால் தான் இந்த நிலைக்கு காரணமாய் இருக்கும்.ஆகவே இந்த நிலையை போக்க பூனைக்கு யார் மணி கட்டுவது?கீழ் உள்ள கேள்வியும் link ம் ஆராயத்தக்கது.
(உ-ம்)கேள்வி:
wiki……மேலே சுட்டப்பட்ட கருத்துக்களை நோக்குக. பக்தி நெறி சைவத்தின் ஒரு அம்சமாகவே பார்கப்படுவது வழமை. ஆனால் வேதம், மற்றும் வேதாந்தம் பல நிலைகளில் அதற்கு முரணனான (எ.கா. feelings vs asceticism) மாற்றான வழிமுறைகளையே பரிந்துரைக்கின்றது. ஆனால் சைவர்கள் வேத, வேதாந்த தத்துவங்களை ஏற்று அல்லது அவற்றுக்கு முன்னுருமை அல்லது முக்கியத்துவம் கொடுத்தே செயல்படுகின்றார்கள். இது ஒரு முரண்பாடு அல்லவா?
இப்பகுதியில் 3 தத்துவங்களை பற்றி பேசப்படிகிறன. சைவம் என்பது சிவனை வணங்கும் மார்கம் மட்டுமே. ஆயிரக்கணக்கான பெயர் ஒரு ‘தத்துவமும்’ இல்லாமலேயே சிவ வழிபாடு செய்கிறனர். அதனால் சைவத்தை மொத்தமாக ‘தத்துவம்’ வழியாகவே வறையறுக்க முடியாது என்பது என் கருத்து. அது இருக்க, சைவத்தில் பாசுபதர் போன்ற மற்ற கிளைகள் உள்ளன . மேலும் ஒரு காலத்தில் காளாமுகர், காபாலிகர் போன்ற கிளைகள் தமிழ் நாட்டில் பிரசித்தி ஆக இருந்தன. அப்படி சரித்திரத்தில் தேய்ந்து போன கிளைகளை பற்றியும் எழுதினால் முற்றாகும்.–விஜயராகவன் 15:08, 25 டிசம்பர் 2006 (UTC).
நடைமுறை வாழ்வியல் முறையில் சமயத்தினை ஆய்வு செய்வது என்பது சற்று நெருடலாகவே படுகிறது. தத்துவங்கள் அல்லாத சிவவழிபாடும் பின்பற்ற பட்டு வருகிறது. சித்தாந்ததினை மையமாக கொண்ட சைவம் பரந்து விரிந்தது. மற்ற நெறிகள் காலப்போக்கில் நெகிழ்ந்துவிட்டன. காளாமுகர், காபாலிகள் பற்றி எழுத வேண்டும் தங்களது கருத்தினை வரவேற்கிறேன். நன்றி. –சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:31, 29 ஏப்ரல் 2013 (UTC).
இவை குறித்த கருத்து வரவேற்கப்படுகிறது.
LINK :.
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D#.E0.AE.95.E0.AE.9F.E0.AF.8D.E0.AE.9F.E0.AF.81.E0.AE.B0.E0.AF.88.E0.AE.AF.E0.AE.BF.E0.AE.B2.E0.AE.BF.E0.AE.B0.E0.AF.81.E0.AE.A8.E0.AF.8D.E0.AE.A4.E0.AF.81_.E0.AE.A8.E0.AF.80.E0.AE.95.E0.AF.8D.E0.AE.95.E0.AE.AA.E0.AF.8D.E0.AE.AA.E0.AE.9F.E0.AF.8D.E0.AE.9F_.E0.AE.AA.E0.AE.95.E0.AF.81.E0.AE.A4.E0.AE.BF.E0.AE.95.E0.AE.B3.E0.AF.8D
சைவ சமயம் வேறு சைவ சித்தாந்தங்கள் வேறு, ஐயா நந்தி அவர்களே. இருப்பினும் 50 வில்லுக்காடு ஒற்றுமையை பார்க்கலாம்.
ஒவ்வொரு சமயத்திற்கும் இறை கோட்பாடும், நெறிமுறைகளும் அதன் தத்துவங்களை வகுப்பது அச்சமயத்திர்க்கு உரிய சாத்திர நூல்களே. எப்படி ஆரிய வேத நெறிக்கு வேதாந்தம் முக்கியமோ அப்படியே தமிழர் கண்ட சுத்த சைவ சமயத்திற்கு அதன் தத்துவங்கள் அடங்கிய மெய்கண்ட சாத்திரங்கள் இணை பிரிக்க முடியாதது. இவையே சைவ சித்தாந்த நூல்கள் எனப்படும். இதில் சமயம் வேறு சித்தாந்தம் வேறு என்று பிரித்தால் அங்கே உண்மைச் சமயம் இருக்காது. மேலும் தமிழர் கண்ட சுத்த சைவத்தையும் இந்தியாவில் இருக்கும் பிற சைவ மார்க்கங்களையும் “இந்து மதம்” போன்று ஒரு கூட்டுக் குடும்பத்தில் போட்டு அடைக்க வேண்டாம். இந்த சுத்த சைவ சமயத்தில் இறைவன்பால் பக்தி வளர்க்க வந்தது தமிழ் வேதமாகிய திருமுறைகளாகும். கொஞ்சம் சமயத்தை கற்றறிந்து விட்டு வாருங்கள் அப்புறம் கதைப்போம்.
பேசி பேசி கெடுத்தான் ஊரை என்பார்கள். அதற்க்கு நீங்களும் (தேனீ) அவரும் (திலிப் 2) நல்ல உதாரணம்.
வெட்டிப் பேச்சு பேசுவதற்குப் பதில் அறிவு வளர்ச்சிக்குரிய சிந்தனைகள் செய்வது தமிழருக்கு அழகு. அவ்வாறு இராமல் இருப்பதற்கு திண்ணை பேச்சு என்று வேறு அரங்கங்கள் இருக்கு அங்கு சென்று பேசி ஊத்திக் கொடுத்தாண்டி ஒரு ரவுண்டு இப்ப உலகம் சுத்துதடி பல ரவுண்டு என்று பேச விரும்புவோர் பேசிக் கொள்ளுங்களேன்.
சைவ சமய அறிவார்ந்த ஆதாரங்களை பகிர்ந்து கொண்டதில் என்ன வீண் பேச்சு கண்டீர்கள் ஐயா raj அவர்களே?
ஐயா தேனீ வெட்டி பார்பனனுக்கும் அவர்களில் ஊன்றுகோலான திருட்டு திராவிட கம்னாடிகளுக்கும் ஓயாமல் விளக்கமளிப்பது ஒருமுட்டாள் தனமானசெயல் . உங்கள் நேரத்தை தமிழர்களுக்காக செலவிடுங்கள் ..தமிழர்களைவிட தமிழ் மொழியில் அவர்கள் கெட்டிக்காரர்கள் .. போட்டிபோட முடியாவிட்டால் சுள்சிசெயவார்கள்..அதுவும் முடியாவிட்டால் கூட்டிகொடுபார்கள் ..வேகரி டீலின்க்.. ஆட்சி அதிகாரத்துக்காக ..
நேற்று என்ன நடந்தது, அதற்கு முதல்நாள் என்ன நடந்தது, என்பதை தெரிந்துக்கொள்ள ஆர்வம் இல்லை?……………………
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தற்போது பிரதிநிதிகள் கொடுக்க மறுக்கிறார்கள். கொடுமைகளும் வேதனைகளும் தான் எப்போதும்…