ரபிஸி கைது செய்யப்பட்டார்

 

rafiஅன்வார் இப்ராகிம் ஆதரவு கித்தா லவான் பேரணியில் கலந்து கொண்டதற்காக பிகேஆரின் ரபிஸி ரமலி இன்று கைது செய்யப்பட்டார். இவர் கைது செய்யப்பட்ட நான்காவது பிகேஆர் தலைவர்.

1 மலேசியா மேம்பாடு பெர்ஹாட்டிற்கு எதிராக போலீஸ் புகார் செய்வதற்காக சென்ற ரபிஸியை போலீசார் கைது செய்தனர். இப்போது அவர். டாங்வாங்கி மாவட்ட போலீஸ் நிலையத்தில் வைக்கப்படிருக்கிறார் என்று வழக்குரைஞர் மெலிசா சசிதரன் கூறினார்.

இருப்பினும், அவர் இன்றிரவு போலீஸ் பிணையில் விடுவிக்கப்படுவார் என்று சசிதரன் மலேசியாகினியிடம் கூறினார்.