ஐ.எஸ் இயக்கத்தில் இணைந்துள்ள இளைஞர்கள், சிறுவர்கள் பல கொலைகளை செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்திவரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் பிணைக்கைதிகளின் தலையை துண்டித்து கொடூர கொலை செய்து வருகின்றனர். அந்த இயக்கத்தில் சிறுவர்களை அதிக அளவில் சேர்த்து பயிற்சி அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாலஸ்தீனத்தில் உளவு பார்த்த குற்றத்திற்காக முகமது சயீத் இஸ்மாயில்(19) என்ற பிணைக்கைதியை, 10 வயது சிறுவன் ஒருவன் சுட்டு கொல்லும் கொடூர காட்சி இடம் பெற்றுள்ள வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
அந்த வீடியோவில் காவி நிற உடை அணிந்த முகமது சயீத் இஸ்மாயில் முசலாம் முழங்காலிட்ட படி அமர வைக்கப்பட்டுள்ளார்.
அவர் முன்பு ஒரு சிறுவன் நிற்கிறான். அவனுக்கு 10 வயது இருக்கும். அவன் அருகே தீவிரவாதி ஒருவன் நிற்கிறான். அவன் பிரெஞ்ச் மொழியில் பேசுகிறான். பிரான்சில் உள்ள யூதர்களுக்கு எதிராக மிரட்டல் விடுத்துள்ளார்.
சிறிது நேரத்தில் அந்த சிறுவன் இஸ்ரேல் பிணைக்கைதியை முன் தலையில் துப்பாக்கியால் சுடுகிறான். இதுபோன்று 4 தடவை சுட்டவுடன் பிணைக்கைதி முசலாம் இறந்து தரையில் சாய்கிறார்.
இந்த பரபரப்பான வீடியோ காட்சி இஸ்ரேலில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
-http://world.lankasri.com