பிகேஆர், போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்காரின் நடத்தைப் பற்றி விவாதிக்கவும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக அவர் தேச நிந்தனைச் சட்டத்தைப் பயன்படுத்துவதற்காக அவரைப் பதவி நீக்கம் செய்யவும் அவசரத் தீர்மானமொன்றைப் பதிவு செய்திருக்கிறது.
பிகேஆர் பாயான் பாரு எம்பி சிம் ட்ஸே ட்ஸின் அத்தீர்மானத்தை மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியாவின் அலுவலகத்தில் இன்று பதிவு செய்தார்.
“இன்றுவரை, போலீசார் தேச நிந்தனைச் சட்டத்தைப் பயன்படுத்தி, எம்பிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என 36 பேரைக் கைது செய்துள்ளனர், விசாரித்துள்ளனர், குற்றஞ்சாட்டியுள்ளனர்”, என்றவர் அத்தீர்மானத்தில் கூறினார்.
காலிட் தொடர்ந்து போலீஸ் படைக்குத் தலைவராக இருந்தால் மலேசியாவின் நற்பெயர் “கெட்டுப்போகும்” என்றாரவர்.
அத்தீர்மானத்தை விவாதத்துக்கு அனுமதிப்பதா வேண்டாமா என்பதை பண்டிகார் நாளை அல்லது அடுத்த வாரம் முடிவு செய்வார்.
இப்படிப்பட்ட கைது நடவடிக்கை எடுக்கா விட்டால், “ISIS” பயங்கரவாத அமைப்பு நம் நாட்டின் மீது தாக்குதல் நடத்தியிருக்கும் என்று போலிஸ் படை தலைவர் கூறினாலும் ஆச்சர்யம் இல்லை.
நல்லது, ஆனால் எஜமான் நாய்கள் வழி விட மாட்டார்களே?
பலன் இல்லை. இந்த ‘ஆச்சியையே’ விலக்கி வைக்க முடியுமா? பாருங்கள்..! தவறு செய்வோரையும் குற்றம், புரிவோரையும் அல்லது குற்றம் புரிந்தவர்கள் என்று பழிபோடப்படுபவர்களையும் பிடிக்கத் தெரியாத கையாலாகாத்தனம். சுட்டுக் கொல்வதுதான் ஒரே வழியாம். சுட்டுக்கொல்வதற்கு எதற்கு போலிஸ் பயிற்சி? துப்பாக்கிப் பயிற்சி மட்டும் போதுமே..
தமிழ் குற்றவலி என்றல் சுட உத்தரவு அனல் “ISIS” குற்றவலி என்றல்
பேச்சி வார்த்தையும் கவுன்செலிங் வளாக படும் .என்னிய போலிஸ் படை தலைவர்.
siva உங்களுடைய கருத்தில் ஒரு சிறு திருத்தம் :
(a) மலேசிய இந்திய/சீன குற்றவாளி என்றால் சுட்டு கொல்லப்பட வேண்டும் இல்லையேல் சிறையில் மரணத்தை சந்திக்க வேண்டும்.
(b) வெளிநாட்டை சேர்ந்தவர் என்றால் நாட்டிற்குள் வந்ததற்கான ஆதாரங்களை அழித்து விட்டு, C4 வெடிவைத்து அடையாளம் தெரியாதபடி காவல் துறையே கொன்றுவிட வேண்டும்.
(c) முஸ்லீம் பயங்கரவாத அமைப்பு மற்றும் தீவிரவாதிகள் என்றால் விருதோம்பலுடன் உபசரித்து “போராளிகள்” என்று பட்டத்தையும் வழங்கி நமது விமான நிலையங்களின் மூலமாக (TRANSIT) அவர்கள் செல்லவிருக்கும் நாடுகளுக்கு எந்தவொரு கெடுபிடியும் இல்லாமால் செல்ல அனுமதிக்க வேண்டும்.