மலேசியாவிலிருந்து தப்பியோடி ஆஸ்திரேலியாவில் மறைந்து வாழும் சிருல் அஸ்கார் உமர், தம்மைச் சந்திக்க அதிகாரிகளை அனுப்பி வைத்ததாக போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி) காலிட் அபு பக்கார் சொல்வது பொய் என்கிறார்.
இன்று மலேசிய நேரம் அதிகாலை 2.30க்கு மலேசியாகினியிடம் பேசிய சிருல், நேற்று ஐஜிபி அறிக்கையைப் பார்த்ததிலிருந்து தமக்கு உறக்கமே வரவில்லை என்றார்.
“ஆஸ்திரேலியாவில் எந்த அதிகாரியும் என்னை வந்து பார்க்கவில்லை.
“அவர் (ஐஜிபி) போலீஸ் படையிடம் பொய் சொல்கிறார். மக்களிடம் பொய் சொல்கிறார். அப்படிச் சொல்லி தம் எஜமானரைப் பாதுகாக்கப் பார்க்கிறார்”, என சிருல் கூறினார்.
“தம் ஆள்கள்மீது அக்கறை இருக்குமானால் என்னைச் சந்திக்க யாரையாவது அனுப்பி இருப்பார். ஆனால், அப்படிச் செய்யவில்லை.
“போலீசிலிருந்து என்னைப் பார்க்க, என்னிடம் விசாரணை செய்ய, என் நலன் பற்றிக் கேட்க எவரும் வரவில்லை. இங்கு தனியாக இருக்கிறேன்”, என்றாரவர்.
மங்கோலிய பெண்ணான அல்டன்துன்யா ஷரீபுவை தலைமை இன்ஸ்பெக்டர் அஸிலா ஹட்ரியுடன் சேர்த்து கொலை செய்ததாக தீர்ப்பளிக்கப்பட்ட சிருல் இதைச் சொல்லும்போது அழுதுவிட்டார்.
இப்போதுதான் கதை சூடு பிடிக்க ஆரம்பிகிறது…. ஆஸ்கார் விருதுக்கு தயார்!!!!!???? வெள்ளி திரையில் காணதவறாதீர் !!!!!!
கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு !!!குளிக்கப்போய் சேற்றைப பூசிக்கொண்டாட் போல்!
இருந்த போலிஸ் தலைவர்களுள் மிகவும் மோசமான முட்டாளானவான்.
முட்டாள் மட்டும் அல்ல. தேங்காய் மடையனும் கூட.
இது ஒரு ஐஜிபீ
பணத்துக்காக எதையும் செய்ய துணியும் சிலர் அதன் பின் விளைவுகளை பற்றி நினைத்து பார்க்க தவறுகின்றனர் . இதில் பாலா வும் அடக்கம் . உண்மை சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லாமல் பதுங்கி விட்டு கடைசியில் உயிரையும் விட்டு விட்டார் .
செய்தி படிபதட்கு நன்றாக இருக்கிறது .. முன்னால் அமைச்சர் தன் வேலையை இப்போதாவது செய்கிறாரே …