பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று பிற்பகல், கட்சித் தலைமையகத்தில் அம்னோ இளைஞர்களைச் சந்திக்கிறார்.
எதற்காக சந்திக்கிறார்கள் என்பது அறிவிக்கப்படவில்லை என்றாலும் அச்சந்திப்பின்போது முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டின் தாக்குதல்கள் பற்றி முக்கியமாக விவாதிக்கப்படும் என அனுமானிக்கலாம்.
அம்னோ இளைஞர் பிரிவை அதன் தலைவர் கைரி ஜமாலுடின் பிரதிநிதிப்பார். கைரி, முன்னாள் பிரதமரின் கேள்விகளுக்கு நஜிப் பதிலளிக்க வேண்டும் என நஜிப்பை ஏற்கனவே இரண்டு தடவை கேட்டுக்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்து மாமாக்தீருக்கு எதிராக ‘மாட் ரெம்பிட்’ கதைதான். பாவம் மாமாக்தீர் வளர்த்த கடாவே மார்பில் பாய நேரம் பார்த்துக் காத்திருக்கு. இனி நரக வேதனைதான் மாமாக்தீருக்கு. மலேசியா போலே.
அம்னோவின் அடித்தளத்தில் தலைமைக்கு எதிரான அலை வீசுவதை மேல்மட்ட தலைவர்கள் தக்க நேரத்தில் கண்டறியத் தவறியதாக தெரிகின்றது. இன்றைய இளைஞர் தொகுதி தலைவர்கள் ஒத்தூதி பாடுவது இளைஞர் அணியில் முக்ரிசுக்கு எதிரான கைரியின் பலத்தை ஒங்குவிப்பதர்க்கான முன் நடவடிக்கை என்று தெரிகின்றது. முக்ரிசின் இளைஞர் அணிப்படை பதுங்கும் புலியாகத் தெரிகின்றது. பாயும் நேரமும் வரலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.
அலைதான் துயா ,,ஆவி கோடை கோடை கொடைன்னு கொடையுது
முடிவு என்னான்னு இப்பவே சொல்லலாம். நாசிப்பு அள்ளி கொடுப்பதா சொல்லுவான். நுறு சதவிதம் அதரவு நாசிப்புக்கே என்று அறிக்கை வரும். பாருங்கோ.அவ்வளவு பெரும் சுத்த சுயநலவாதிகள்.