கெடா மந்திரி புசார் முக்ரிஸ் மகாதிரின் பதவி விலகலுக்குக் கோரிக்கை விடுத்த புக்கிட் லாடா சட்டமன்ற உறுப்பினர் அஹ்மட் லெபாய் சூடின், மாநில மந்திரி புசார் ஆகும் விருப்பத்தில் அக்கோரிக்கையை விடுக்கவில்லை என மறுக்கிறார்.
முக்ரிஸ் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை ஆதரிக்காவிட்டால் பதவி விலகுவதே நல்லது என அஹ்மட் கடந்த வாரக் கடைசியில் கூறியிருந்தார்.
தமக்கு அப்பதவியில் நாட்டம் இல்லை என்றாரவர். மேலும், மந்திரி புசாரை முடிவு செய்வது அம்னோ தலைவரான நஜிப்தான் என்றும் அவர் சொன்னார்.
“அதை முடிவு செய்யும் உரிமை பிரதமருக்கே உண்டு.
“நான் கேட்டுக்கொண்டால்கூட அவர் நான் மந்திரி புசார் ஆக முடியாது என்றால் அது நடக்காது”, என்று அஹ்மட் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.