பிஎன்னின் செபாங்கார் எம்பி ஜுமாட் இட்ரிஸ், பொருள், சேவை வரியால் செலவினம் அதிகரித்திருப்பதை உணர்ந்து வருத்தப்படுகிறார். மருத்துவச் சேவைக் கட்டணங்களுடன் ஜிஎஸ்டி-க்காக தனியாக ரிம1,200 கொடுத்தபோதுதான் அவர் இதனை உணர்ந்தார்.
மகனைத் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவருக்கு இந்த அனுபவம் ஏற்பட்டது.
“மருத்துவ ஆலோசனைக்காக ஆறு விழுக்காடு (ஜிஎஸ்டி) சேர்க்கப்பட்டது. பிறகு சிகிச்சைக் கட்டணம் செலுத்தியபோது அதில் இன்னொரு ஆறு விழுக்காடு சேர்க்கப்பட்டது.
“என் மகன் நரம்பியல் நோய்க்காகவும் முதுகுத்தண்டு வளைவைச் சரிபண்ணவும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.மருத்துவ சிகிச்சைக்கான கட்டணம் ரிம20,000 வந்தது. ஜிஎஸ்டிக்காக மட்டும் ரிம1,200 கொடுக்க வேண்டியிருந்தது.
“மற்ற சேவைகளுக்கான கட்டணங்கள் இன்னும் வரவில்லை. இது உண்மையிலேயே மக்களுக்குப் பெரும் சுமைதான்”, என்று அவர் முகநூலில் பதிவிட்டிருந்தார்.
அந்த வகையில் ஜிஎஸ்டி-ஆல் மக்களுக்குச் சுமை என்பதை உணர்ந்து கொண்டதால் இவ்விவகாரத்தை எதிர்வரும் நாடாளுமன்றக் கூட்டத்தில் எழுப்ப உறுதி பூண்டிருக்கிறார் ஜுமாட்.
GST நல்லதே, அதனை அமல் படுத்திய விதத்தில்தான் பல பெரிய கோளாறுகள். சுங்கத்துறை, அன்பர் சுப்ரமணியம் துளசியுடன் தனிமையில் பேசிப்பாருங்கள்!!!!!
GST.யை அமல்படுத்தும் முன் SST.யை அகற்றி இருக்க வேண்டும், ஆனால் இரண்டிலுமே ஆதாயம் காணலாம் என்று நினைத்தது பெருந்தவறு. மக்கள் விழித்துக் கொண்டார்கள் ஆனால் இந்த விழிப்புணர்வு போதாது. மருத்துவ அட்டைக்கு பணம் செலுத்தும்போதும் மருத்துவ அட்டையைப் பயன்படுத்தி சிகிச்சைபெற்றதற்கும் ஜி.எஸ்.டி.வாங்குகிறார்கள். உண்மையில் அந்த அட்டயைப் பயன்படுத்தும் போது தான் GST. வசூலிக்க வேண்டும். அதுதான் முறை. அந்த அட்டைக்கு பணம் செத்தும்போது GST. வசூலிப்பது எந்த வகையில் நியாயம்? இதைக்கேட்டால் தேசநிந்தனைச் சட்டம் பாயும்…வினோதமான உலகம்…
கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்
…………….BN அரசியல்வாதிகளுக்கு சாவு நிச்சயம்
பாட்டாலே புத்திசொன்னால்,பட்டாலே புத்தி வரும்………