சமூக ஆர்வலர் ஆடம் அட்லியின் தந்தை அப்துல் ஹலிம் அப்துல் அமிட் இன்று காலை உயிரிழந்தார். தந்தை இறந்த செய்தியை ஆடம் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
கெரேதாஅபி தானா மலாயுவின் முன்னாள் ஊழியரான அப்துல் ஹாலிம் நேற்றிரவு பினாங்கில், பினாங்காவில் மோட்டார்-சைக்கிளில் சென்றபோது விபத்தில் சிக்கிக் கொண்டார். விபத்தில் படுகாயமடைந்த அவர் செபறாங் பிறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இன்று காலை 6.45-க்கு காலமானார்.
அப்துல் ஹாலிமின் நல்லுடல் கப்பாளா பத்தாஸில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர் அடக்கம் செய்யப்படும் என ஆடம் அட்லி தெரிவித்தார்.
அப்துல் ஹாலிம், தம் மகன் ஆடம் அட்லி மாணவர் உரிமைகளுக்காக நடத்திய போராட்டங்களுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆழ்ந்த அனுதாபங்கள்