விமானப் பயணத்துக்கு இடையூறாக இருந்த ஜெர்மானியருக்கு சிறை

germanகடந்த  சனிக்கிழமை  ஸ்ரீலங்காவுக்குப்  பறந்து  கொண்டிருந்த  மலேசிய  விமான  நிறுவனத்தின்   விமானப்  பயணம்  தடைப்பட  காரணமாக  இருந்த  ஜெர்மன்  நாட்டு  வணிகர்  டயட்மார்  ரோஸ்,54, என்பாருக்கு  ஒரு-மாதச்  சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

விமானப்  பயணத்தில்  கடைப்பிடிக்க  வேண்டிய  ஒழுங்கு  விதிகளைப்  பின்பற்றாமல்  விமானப்  பணியாளர்  ஒருவருக்கு  ஆபத்தை  உண்டுபண்ணும்  வகையில்  நடந்து கொண்டதை   செப்பாங்  செஷன்ஸ்  நீதிமன்றத்தில் ரோஸ்  ஒப்புக்கொண்டார்.

அந்த  ஜெர்மானியர்  மாஸ்  பணியாளர்  புவா சோ  கின்னை  நோக்கிச்  சத்தமிட்டதாகவும்  ஆபாச  வார்த்தைகளால்  திட்ட்டியதாகவும்  கூறப்படுகிறது.