தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலசந்திரன் யுத்தத்தின் போதே கொல்லப்பட்டார் என சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.
அண்மையில் தேசிய தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இது தொடர்பிலான தகவல்களை தெரிவித்துள்ளார்.
பாலசந்திரன் யுத்தத்தின் போது கொல்லப்பட்டாலும் அவரின் கொலைக்கு இராணுவத்தினரை பொறுப்பாளியாக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரையிலான காலப்பகுதியில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டமையை சரத் பொன்சேக்கா மீண்டும் முற்றாக நிராகரித்துள்ளார்.
பொது மக்களின் நன்மை கருதி நான்கரை மாதங்களாக சக்திமிகு ஆயுதங்களை முடிந்தளவு பயன்படுத்துவதை தவிர்க்குமாறு இராணுவத்தினருக்கு வலியுறுத்தியிருந்தார்.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினர் பொது மக்களின் நலனை கருத்திற்கொள்ளாமல் செயற்பட்டிருந்தால் மிகவும் வேகமாக யுத்தத்தை வெற்றிக்கொண்டிருக்கலாம் என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
எனினும் இராணுவத்தினர் மிகவும் மெதுவாக தமது செயற்பாடுகளை முன்னெடுத்ததின் காரணமாகவே யுத்தத்தில் பல உயிர்களை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
4ம் கட்ட ஈழப்போரில் இலங்கை இராணுவம் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் ஆண்களை இழக்க நேரிட்டது.
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 12வயது மகன் பாலசந்திரன் யுத்தம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் உயிரிழந்திருக்கலாம். எனினும் இதற்கு இராணுவத்தினர் பொறுப்பளிகளாக இருக்க முடியாத என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறுதிக்கட்ட யுத்தத்தில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தால் முன்னாள் விடுதலை புலிகளின் கோட்டையில் எலும்புக்கூடுகள் மாத்திரம் எஞ்சியிருக்கும் என பொன்சேகா மேலும் தெரிவித்தார்.
-http://www.pathivu.com
போடா தே……யா மவனே.
பொன்சேக சொல்வதை பார்த்தால்,செல்வன் பாலசந்திரன் முதலில் ராணுவ முகாமில் வைக்கப்பட்டுள்ளார்.அவரிடம் ரொட்டியை கொடுத்து சாப்பிட சொல்லியிருகிறார்கள்.பிறகு செல்வன் பாலசந்திரன் பலம் பெற்று முகாமிலுள்ள ஆயுத்தை எடுத்து ராணுவத்தை நோக்கி சுட்டிருக்க வேண்டும் போல.உடன ராணுவம் அந்த பாலகனை கொன்றுவிட்டார்கள்.இப்படிதான் பொன்சேக சொல்ல வருகிறார் போல.உலக மக்கள் என்ன மாங்க மடையார் என்று நினைத்துவிட்டான் இந்த கொடும்பாவி.அப்பாவி தமிழர்களை திட்டமிட்டு கொன்று விட்டு யுத்தத்தின் போது கொல்லபட்டார்கள் என்பது எவ்வளவு ஏமாற்றுத்தனம்.உண்மை வெளிவர வெகுதூரமில்லை.ஆனால் குள்ளநரித்தனம் கொண்ட படுபாவி இந்தியா அரசாங்கம் சிங்களவனுக்கு துணையாக செயல்படுவதுதான் தமிழர்களின் நெஞ்சை வாட்டுகிறது.இந்திய ஈழ மக்களுக்கும் தமிழரகளுக்கும் துரோகத்தை தவிர வேறு எதுவும் செய்ய வில்லை என்பதுதான் நிஜம்.தமிழ் நாடு தமிழர்கள் இந்தியாவிற்கு என்ன பாடம் புகுட்ட போகிறீர்கள்.