ஆஸ்திரேலியாவின் பொர்த் நகரத்தில் கடந்த 28-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை காமன்வெல்த் மாநாடு நடைபெற்றது.
இம்மாநாட்டில் இலங்கை குடியரசுத் தலைவரும் போர்குற்றவாளியுமான மகிந்த ராஜபக்சே கலந்து கொண்டார்.
இவரின் வருகையடுத்து 28-ம் தேதி வெள்ளிக்கிழமை பெர்த் நகரத்தில் ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் இருந்து வந்த தமிழ் உணர்வாளர்கள், ஆஸ்திரேலியாவின் ஏனைய சமூக அமைப்புக்களுடன் இணைந்து போர்குற்றவாளி மகிந்தாவை கைதுசெய்யுமாறு கோரிக்கை விடுத்து பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜனநாயகப் பண்புகளையும் மனித உரிமைகளையும் பேணிப் பாதுகாக்க வேண்டிய முக்கிய பொறுப்பில் உள்ள பொதுநலவாய நாடுகளின் கட்டமைப்பிலிருந்து, இலங்கையை நீக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தும் இலங்கையில் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இந்த ஆர்பாட்டத்தில் தமிழ் உணர்வாளர்கள் மட்டுமன்றி அதிகளவிலான வேற்றினத்தவர்கள் கலந்துகொண்டு தமிழர்களின் கோரிக்கைகளுக்கு வலுசேர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.