இன்றுவரை இலங்கையில் சித்திரவதை முகாம்கள் இயங்கி வருவதாகவும் , அவை பெரும்பாலும் ராணுவ முகாம்களிலும் , பொலிஸ் நிலையங்களிலும் மற்றும் அடர்ந்த காட்டுப் பகுதியில் உள்ளதாகவும் வெளிநாட்டு அமைப்பு ஒன்று அறிக்கை சம்ர்ப்பித்து குற்றஞ்சாட்டியுள்ளது. இன்று வரை சுமார் 40 ரகசிய சித்திரவதை முகாம்கள் இயங்கிக் கொண்டு இருப்பதாக இந்த அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது.
“இன்னமும் முடிவுறாத போர்”: சிறிலங்காவில் சித்திரவதைகள் மற்றும் பாலியல்வன்முறைகளில் இருந்து உயிர் தப்பியோர்- 2009- 2015 என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில்,40 ற்கும் மேற்பட்ட இரகசிய தடுப்பு நிலையங்களின் பெயர்களும் 60ற்கும் மேற்பட்ட பாலியல் குற்றவாளிகள் மற்றும் துன்புறுத்தலாளர்களின் பெயர்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. உண்மை மற்றும் நீதிக்கான அனைத்துலக திட்டம் என்ற அமைப்பினால் (ITJP) வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்ட பெயர்கள் தவிர வேறு பல சித்திரவதை முகாம்கள் உள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அடையாளம் காணப்பட்டுள்ள சித்திரைவதை முகாம்களில் பெரும்பாலானவை தமிழ் பேசும் வடக்கில் அமைந்துள்ளது. இவற்றில் இரண்டில் மூன்று பங்கானவை இராணுவ முகாம்களிலும் ஏனையவை பொலிஸ் நிலையங்களிலும் புனர்வாழ்வு நிலையங்களிலும் அமைந்துள்ளது. சித்திரவதை நிலையங்களாக பட்டியல் படுத்தப்பட்டுள்ள அரைவாசிக்கும் மேற்பட்ட பொலிஸ் நிலையங்கள் கொழும்பிலும் அதன் புறநகர்ப்பகுதிகளிலும் அமைந்துள்ளது. குறிப்பாக திருகோணமலை டொக்யார்ட் கடற்படைத்தளத்தில், காட்டுக்குள் உள்ளஇரகசியத் தடுப்பு முகாம், வவுனியாவில் யோசெப் முகாமின் தடுப்பு முகாம் மற்றும் கொழும்பிலுள்ள பொலிசாரின் குற்ற விசாரணைப் பிரிவு அடங்கலான 48 சித்திரவதை முகாம்கள் இந்த அறிக்கையில் பட்டியற்படுத்தப்பட்டுள்ளன. திருகோணமலையில் இரகசிய சித்திரவதை முகாம் அமைந்துள்ள இடத்தைக் குறிக்கும் வான்வழி வரைபடமும் இந்த அறிக்கையில் இணைக்கப்பட்டுள்ளது.
சித்திரவதைகளிலும் பாலியல் துன்புறுத்தல்களிலும் இருந்து உயிர்பிழைத்தவர்கள் தவிர தகவல் சேகரிப்பதற்காக பாதுகாப்பு தரப்பையும் அரச வட்டாரங்களையும் தொடர்பு கொண்டதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு தரப்பில் உள்ளவர் ஒருவர் உண்மை மற்றும் நீதிக்கான அனைத்துலக திட்டம் என்ற அமைப்பிற்கு வெளிப்படுத்திய தகவல்களில் படி, யோசவ் முகாமிலிருந்து செயற்படும் இராணுவ புலனாய்வாளர்கள் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பும் தமிழர்களை விசாரணை செய்ய காத்திருக்கின்றனர். மைத்திரிபால சனாதிபதியாக பதவியேற்ற பின்பு இது வரை எட்டு சித்திரவதை மற்றும் துன்புறுத்தல் சம்பவங்களை ITJP பதிவு செய்துள்ளது. அதில் மிக அண்மையானது ஆடி மாதம் 2015இல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜோசப்முகாமின்தளபதியாக தற்போது மேஜர் ஜெனரல்அமல் கருணசேகர மற்றும் மேஜர் ஜெனரல்களான போனிவிகா பெரேரா, சுமேதா பெரேரா, கமல் குணரத்ன மற்றும் ஜகத் ஜெயசூரிய ஆகியோர் ஜோசப்முகாமின்தளபதியாக2009 இற்குப் பின்னர் இருந்துள்ளனர். பாதுகாப்புத் தரப்பின் உள்ளிருந்து ITJP இக்கு கிடைத்த தகவலின் படி லெப்டினன்ட் ஜெனரல்கிருசாந்திடி சில்வா என்பவர் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட போராளிகள் தொடர்பான விவகாரங்களை கையாண்டுள்ளார். இதன்போதே பல போராளிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். உயிர் தப்பியவர்களின் சாட்சியப் படி, கட்டளைத்தளபதி கெ.சி. வேலகெதர என்பவர் திருகோணமலையில் உள்ள இரகசிய முகாமின் கடற்படை புலானாய்வு அதிகாரியாக 2010 வரை இருந்துள்ளார்.
பின்னர் கட்டளைத்தளபதி ரணசிங்க என்பவர் இதற்கான பொறுப்பை ஏற்றுள்ளார். முன்னாள்கடற்படை ஊடகப் பேச்சாளர்தளபதி டி.கெ.பி. திசநாயக்க, தளபதி சம்பத் முனசிங்க, ரணசிங்கஆரச்சிகே கெட்டி ஆராச்சி மற்றும் ரணசிங்க பிடிகே சுமித்ரணசிங்க போன்றோர் 28 மக்கள் காணாமல் போனதற்கு காரணமாயிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் இவர்களுக்கு வெளிநாடு செல்லத் தடையை கொழும்பு கோட்டைநீதவான் நீதிமன்றம்இந்த ஆண்டு ஏப்ரலில் பிறப்பித்தது பலருக்கு தெரியாத விடையமாக உள்ளது.
-http://www.athirvu.com
1. பொறுப்பற்ற சிந்திக்காத சுயநலம் கொண்ட இந்திய ஆட்சியாளர்களின் ஆதரவும் ஆசீர்வாதமும் இலங்கைக்கு இருக்கின்ற வரை அவர்கள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள்; பேசுவார்கள். இலங்கைக்கு உள்ள கண்மூடித்தனமான சீனாவின் ஆதரவையும் நிச்சயம் மறுக்க முடியாது. இந்த சித்திரவதை முகாம்கள் இன்றும் இருப்பது இந்திய அரசுக்குத் தெரியாதா? தமிழக மக்களிடம் நடிக்கின்றார்கள். மீறிக் கேட்டால் இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு, இந்தியாவின் கெளரவம் என்று ஒப்பாரி வைப்பார்கள். மேலும் இது இலங்கையின் உள்நாட்டு விவகாரம் என்பார்கள். அப்படியென்றால், ஐநாவில் அன்று போர்க் குற்ற விசாரணைக்கு எதிராக இலங்கைக்கு ஏன் ஆதரவுக் கரம் நீட்ட வேண்டும். இனிமேலும் அப்படியா? இலங்கைக்கு அன்று ஆயுதங்கள் கொடுத்தை இவர்கள் மறுக்க முடியுமா?
2. இங்கிருந்துக் கொண்டு சந்திரனில் என்ன நடக்கின்றது, செவ்வாய்க் கோள் அனுப்பும் படங்கள் தகவல் மூலம் செவ்வாய்க் கிரகத்தில் என்ன நடக்கின்றது என்பதையெல்லாம் துல்லியமாக சொல்லும் இவர்களுக்கு பக்கத்தில் இருக்கும் இந்த முகாம்கள் இவர்களின் கோள்களுக்கு தெரியவில்லையா? அமெரிக்க அரசுக்கும் தெரிந்துதானே இதெல்லாம் நடக்கின்றது. சின்னம் சிறிய ஈழத் தமிழ்களை ஒடுக்குவதற்கு இத்தனைத் தீய சக்திகளா?
3. தமிழக மக்கள்தான் சுயமரியாதைக் கெட்டு தேவையில்லாமல் உண்மைக்கும் பொய்மைக்கும் உள்ள வேறுபாடுத் தெரியாமல் கண்மூடித்தனமாக இந்த பொறுப்பற்ற மத்திய ஆட்சியாளர்கள் சொல்லும் எல்லாவற்றையும் நம்பிக் கெடுகின்றார்கள். முதலில் தமிழக மக்கள் தெளிவுப் பெற வேண்டும்.
இந்தியா ஒரு கூறு கெட்ட நாடு– சொன்னால் கோபம் பொத்துக்கொண்டு வரும். ஊழலும் ஒற்றுமையின்மையும் உயர்வு தாழ்வு
ஜாதி உய்ரஜாதி தீண்டப்படாதவர்கள் முட்டாள் தனம் பகுத்தறிவுக்கு ஒவ்வாமை இன்னும் எவ்வளவோ– தயவு செய்து இந்தியாவின் டைம்ஸ் நவ் தொலைகாட்ட்சியை பார்த்தால் புரியும்.
இந்தியாவாழ் மக்கள் சுயநலவாதிகள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
இந்தியாவே நீர் ஈழ மக்களுக்கு செய்த துரோகம் தமிழர்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள்.அப்பாவி மக்கள் படு கொலைக்கு நீதான் முக்கிய காரணம் என்பது வெளிச்சம்.அம்பு சிங்களவனாக இருப்பினும் எய்தவன் நீதான்.ஈழத்தில் நடந்த ஒவ்வொரு அப்பாவி கொலைக்கு நீ பதில் சொல்லும் காலம் வெகுதூரத்தில் இல்லை.