“பிரதமர் நஜிப் ரசாக்குக் காலஞ்சென்ற அவரைத் தெரியாது, அவரைப் பார்த்ததில்லை, பேசியதில்லை”
இது, இன்று அல் ஜசீரா தொலைக்காட்சியில் ஒளியேறிய மங்கோலிய பெண் அல்டான்துயா ஷரீபுவின் கொலையை விவரிக்கும் பரபரப்பூட்டும் ஆவணப்படம் மீது பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வமான எதிர்வினையாகும்.
“போலீஸ் விசாரணை, மலேசிய உயர் நீதிமன்றம், முறையீட்டு நீதிமன்றம், கூட்டரசு நீதிமன்றம் ஆகியவற்றில் வழக்கு விசாரணைகள் உள்பட விரிவான சட்டமுறைமைகள் சரியாகக் கடைப்பிடிக்கப்பட்டுள்ளன. குற்றமிழைத்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, தண்டனையும் கொடுத்தாயிற்று.. நீதிமன்ற விசாரனைகளில் எந்தக் கட்டத்திலும் பிரதமருக்கும் அக்குற்றச்செயலுக்கும் தொடர்புண்டு என்று கூறப்பட்டதில்லை. மறைமுகமாகக்கூட கூறப்பட்டதில்லை..
“அரசியல் எதிரிகளும் அவர்களின் ஊடகக் கூட்டாளிகளும்தான் இவ்விவகாரத்தை வைத்து பல ஆண்டுகளாக பிரதமரைத் தாக்கி வருகிறார்கள். ஆனால், அதற்கான ஆதாரம் ஏதுமில்லை. ஆதாரம் கிடைக்கவும் கிடைக்காது. இவை எல்லாமே அரசியல் ஆதாயத்துக்காகக் கூறப்படும் பொய்யான குற்றச்சாட்டுகள்”, என்று அது கூறிற்று.
அல் ஜசீராவில் அதன் ‘101 East’ என்ற வாராந்திர நிகழ்ச்சியில் ‘Murder in Malaysia (மலேசியாவில் கொலை) என்னும் ஆவணப்படம் இன்று காலை மணி 6.30க்கு ஒளியேறியது. அதன் மறுஒளிபரப்பு இன்று மாலை 5.30க்கு. அல் ஜசீரா அகப் பக்கத்திலும் இந்த ஆவணப் படத்தைப் பார்க்கலாம்.
தெரியாது! தெரியாது! தெரியாது. இல்லை! இல்லை! இல்லை!. இதுவே புத்ராஜெயாவின் பொய் மந்திரமாகிப் போய் விட்டது. சாகும்வரை மறுப்பு என்று கங்கணம் கட்டிக் கொண்டு கதையளக்கின்றனர்.
நஜிப் : என்ன பொருத்தம் நமக்குள் இந்தப் பொருத்தம்ஆஹா..
என்ன பொருத்தம் நமக்குள் இந்தப் பொருத்தம்
நடுவர் என்னும் பேரத்தில் லாபம் சுபமே.
அல்தாதுயா : என்ன பொருத்தம் நமக்குள் இந்தப் பொருத்தம்ஆஹா..
என்ன பொருத்தம் நமக்குள் இந்தப் பொருத்தம்
ஊழல் என்னும் லஞ்சத்தில் வரவு சுபமே.
ரோஸ்மா : மறுபடியும் சொல்றேன். அவளப் பாக்க நீங்க போகவே
கூடாது
நஜிப் : மறுபடியும் சொல்றேன்.. அவளப் பாத்தே தீருவேன்
ரோஸ்மா : என்ன பொருத்தம் நமக்குள் இந்தப் பொருத்தம்ஆஹா.
என்ன பொருத்தம் நமக்குள் இந்தப் பொருத்தம்
நடுவர் என்னும் ஊழலில் கொலைகள் சுபமே !
‘பொய்யிலே பிறந்நது பொய்யிலே வலர்ந்த புலவர் பெருமானே, நீங்கள் செய்தது கொலை குற்றம்.வாய் வார்தையால் மறைக்கலாம். மனதலவில் மறைக்க முடியாது! … அல்தான்துயா ஆவி மற்றும் அவரது வருங்காலக் குழந்தை (உங்கள் டிஎன்ஏ பகிர்ந்து இருக்கலாம்) அப்பொது உன்னுடைய பொய் சத்தியம் செல்லாது. உண்மை வெளிப்படும் நேரம் வரும்.