நஜிப் விலக வேண்டும் என்று கூறும் மகாதிருடன் முன்னாள் மசீச தலைவரும் சேர்ந்து கொண்டார்

lingமுன்னாள்  மசீச  தலைவர்  டாக்டர்  லிங் லியோங்  சிக்கும்  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்டுடன்  சேர்ந்து  கொண்டு  நஜிப்  அப்துல்  ரசாக்  பிரதமர்  பதவியை  விட்டு  விலக  வேண்டும்  என்று  கோரிக்கை  விடுக்கிறார்.

“மகாதிருடன் உடன்படுகிறேன்.  அவர்( நஜிப்) மக்களின்  பணத்தை  எடுத்து தம்  சொந்தக்  கணக்கில்  போட்டுக்  கொண்டார்”. இன்று  கோலாலும்பூரில்  துங்கு  அப்துல்  ரஹ்மான்  பல்கலைக்கழகக்  கல்லூரியில்  ஒரு  நிகழ்வில்  கலந்து  கொண்ட  லிங்  செய்தியாளர்களிடம்  பேசினார்.

நஜிப்  பிரதமர்  பதவியை  விட்டு  விலக  வேண்டும்  என்ற  மகாதிரின்  கோரிக்கையில்  அவருக்கு  உடன்பாடு  உண்டா  என்று  லிங்கிடம்  வினவப்பட்டதற்கு  அவர்  மேற்கண்டவாறு  கூறினார்.