கடந்த ஆண்டில் மலேசியா எரிபொருள் உதவித் தொகையை அகற்றியதை ஐநா மேம்பாட்டுத் திட்ட (யுன்டிபி) நிர்வாகி ஹெலன் கிளார்க் பாராட்டினார்.
எரிபொருள் உதவித் தொகைகள் அகற்றப்பட வேண்டும் என்ற அனைத்துலக பண நிறுவனத்தின்(ஐஎம்எப்) கோரிக்கையை யுன்டிபி ஏற்கிறது என்றும் அவர் சொன்னார்.
“எல்லா நாடுகளிலும் படிம எரிபொருளுக்கு உதவித் தொகை வழங்குவதை நிறுத்த வேண்டும் என்று ஐஎம்எப்- உடன் சேர்ந்து கோரிக்கை விடுக்கிறோம். அதன் மூலமாக அரசாங்க பணத்தை நிலையான மேம்பாட்டுக்கும் துன்பத்தில் உழன்று கொண்டிருப்போருக்கு சமூகப் பாதுகாப்பு வழங்கவும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
“எரிபொருள் உதவித் தொகை விவகாரத்தில் மலேசியா மேற்கொண்ட நடவடிக்கையைப் பாராட்டுகிறோம்”. கோலாலும்பூரில் உலக உருமாற்றக் கருத்தரங்கில் பேசியபோது ஹெலன் இவ்வாறு பேசினார்.
“ஹெலன் கிளார்க்” தான் நமக்கு சோறு போடுகின்றானாக்கும்!
நீங்களே பாராட்டிடீங்க! நாங்களும் பாராட்டுகிறோம்!
“அரசாங்க பணத்தை நிலையான மேம்பாட்டுக்கும் துன்பத்தில் உழன்று கொண்டிருப்போருக்கு சமூக பாதுகாப்பு வழங்கவும் பயன்படுத்தி கொள்ள முடியும்” என்று எந்த நாட்டுக்கு அறிவுரை கூறனும்னு விவஸ்த்தை இல்லாமல் போச்சு.
“தலை மயிர்” கழுவுவதற்கு உதவி தொகை எவ்வளவு அவசியம் என்பதை உணராதவர் ஹெலன் கிளார்க் என்று அவருக்கு எதிராக சிவப்பு சட்டை பேரணி ஒன்றை நடத்தலாம்.
நம் நாட்டில் எதிர் கட்சி அதன் இலக்கை விட்டு ஆட்சி அதிகாரம் பேராசையில் மக்களுக்கு அரசு இளைக்கும் அத்துமீறல்களை கண்டும் காணாது விடுகின்றனர்.பிறகு நமக்கு ஏன் இவர்கள்…நாராயண நாராயண.