முகைதின் யாசினை அம்னோவின் துணைத் தலைவர் பாதவியிலிருந்து வெளியேற்ற கட்சிக்குள் கமுக்கமாக வேலை நடப்பதாக அம்னோ சுங்கை புசார் தொகுதித் தலைவர் ஜமால் முகம்மட் யூனுஸ் கூறிக் கொண்டிருக்கிறார்.
“என்னைக் கேட்டால் முகைதினை வெளியேற்ற வேண்டும் என்பேன். இதற்கு ஆதரவாக உள்ள அம்னோ தொகுதிகளின் பட்டியல் ஒன்றைத் தயாரித்து வருகிறோம்.
“நான் பிரதமராக இருந்தால், நீண்ட காலத்துக்கு முன்பே அவரை நீக்கி இருப்பேன். துணைப் பிரதமர் பதவியிலிருந்து மட்டுமல்ல அம்னோவிலிருந்தும்”, என்றவர் சினார் ஹரியானிடம் தெரிவித்தார்.
100-க்கு மேற்பட்ட அம்னோ தொகுதித் தலைவர்கள் முகைதினையும் அவரின் ஆதரவாளர்களையும் கட்சியிலிருந்து தூக்குவது பற்றி இரகசிய கூட்டம் நடத்தி இருப்பதாக ஜமால் கூறினார்.
அண்ணன் எப்ப போவான், திண்ணை எப்ப கிடக்கும் என்று அவனவன் காத்துக் கிடக்கின்றான். இதுல சதி விதி என்ன வேண்டிக் கிடக்கு! முதலில் “நான் மலாய்க்காரன்” என்றால் தனக்கு அம்னோவில் அரசியல் செல்வாக்கு கிடைக்கும் என்று நம்பி கெட்டவர்களில் இவரும் ஒருவர். ‘Cash is King’. No more ‘Singh is King’.