தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள் விடுதலை செய்யப்படுவது அநீதியானதல்ல என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து பேசிய அவர்,
புலிச் சந்தேக நபர்கள் விடுதலை செய்வதில் எவ்வித அநீதியும் கிடையாது.
போரின் இறுதிக் காலத்தில் பன்னிரண்டாயிரம் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டும் சரணடைந்துமிருந்தனர்.
இவர்களுக்கு புனர்வாழ்வு அளித்து சமூகத்தில் மீள இணைக்கப்பட்டனர்.
நீண்ட காலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த புலிச் சந்தேக நபர்கள் விடுதலை செய்யப்படுவது நியாயமானது.
சிலர் இந்த விடுதலையை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துகின்றனர்.
சில நிபந்தனைகளின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும். அவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் கண்காணிக்க வேண்டும் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
-http://www.tamilwin.com
உங்கள் விஜயனின் சரித்திரம் வெறும் 2500 ஆண்டுகள் மட்டுமே, எங்கள் ஒரே ஒரு ஒரு கோவிலின் சரித்திரம் 3000 ஆண்டுகள்.யார் மண்ணில் யாரை அ டிமையாக்குவது???
விஜயன் வருகை என்பது வெறும் கற்பனை …..சிங்களவர்களின் மூதாதையர் ஒரு சிங்கதிட்கும்..அரசகுமரிகும் பிறந்தவர் என்பது போல …சிங்களவர்களின் உணவு ..உடை ..கலாச்சாரம்..மாந்திரிகம் எல்லாம் 110% இன்றைய கேரளா மக்களின் பழக்க வழக்கங்களே ..கேரளாவில் உள்ள நகரங்களின் பெயர்கள் கூட இன்றும் சிங்கள நகரங்களுக்கு உண்டு ஹெட்டி எனற சிங்கள பெயர் செட்டி என்ற பெயர் மாற்றம்…பெருமா என்ற சிங்கள பெயர் பெருமாள் என்பதின் மாற்றம் ..குறுப்பு என்ற சிங்கள பெயர் கருப்பன் என்பதின் பெயர் மாற்றம் ..கூடவே நவரத்ன(நவரத்தினம் ) ,,குணரத்ன(குணரத்தினம் ) ..பிரேமதாச .த்ரிலோகசுந்தரி …ராஜரத்னா …ஜெயவர்தன …என்ற பெயர்கள் எல்லாம் சிங்களவர்களுக்கு எப்படி வந்ததது ?