பினாங்கு டிஏபி ஆண்டுக்கூட்டம், அதன் பேராளர்கள் ‘ரிம2.6 பில்லியன் எங்கே’ என்று எழுதப்பட்ட அட்டைகளை ஏந்தி நிற்க இன்று கோலாகலமாக தொடக்கம் கண்டது.
நேற்று பிகேஆர் தேசிய ஆண்டுக் கூட்டத்திலும் இதேபோன்றுதான் நடந்தது. அதன் பேராளர்களும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடம் 2013 பொதுத் தேர்தலுக்கு முன்பு அவரது வங்கிக் கணக்குக்கு வந்துசேர்ந்த மர்மமான நன்கொடை பற்றிக் கேள்வி எழுப்பும் அட்டைகளை ஏந்தியிருந்தனர்.
பதவி விலகிச் செல்லும் டிஏபி மாநிலக் குழுத் தலைவர் செள கொன் இயோ பல-வண்ண பலூன்களைப் பறக்க விட்டுக் கூட்டத்தைத் தொடக்கி வைத்தார்.
மாநிலக் குழுவில் உள்ள 15 இடங்களுக்கு 48 பேர் போட்டியிடுகின்றனர்.
அம்னோ ஆண்டு கூட்டத்திலும் இந்த 2.6 மில்லியன் அட்டைகள் பறப்பதைப் பார்க்கலாம்!