அம்னோவின் துணைத் தலைவர் முகைதின் யாசினுக்கு அம்னோ ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் மனம் நொந்து போய் இருக்கிறார்.
தாம் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதைத் தெரிவித்த முகைதின், அம்னோவுக்கு என்ன ஆயிற்று என்று விசனப்பட்டுக் கொண்டார்.
“எனக்கு வருத்தமாக இருக்கிறது. ஆனால், பொதுக்கூட்டம் முடிகிறவரையில் நான் அங்கு உட்கார்ந்து இருப்பேன், ஏனென்றால் நான் துணைத் தலைவர். அது எனது உரிமை.
“இருப்பினும், நான் ஏமாற்றமடைந்துள்ளேன். பேசுவதற்கு ஒரு வாய்ப்பு தருமாறு நானும் உதவித் தலைவர் ஷாபி அப்டாலும் வேண்டிக்கொண்டோம். ஆனால், அவர்கள் முடியாது என்று கூறிவிட்டனர்”, என்று முகைதின் செய்தியாளர்களிடம் இன்றிரவு கூறினார்.
”முன்னால் துனை பிரதமர் கல்வி அமைச்சரக இருந்த உனக்கு. அழைக்காத கூட்டத்துக்கு போநாள் மரியாதை கிடையாதுனு உங்க ஆசிரியர் சொல்லி குடுக்கலையா?
கண்டிப்பாக கமலநாதன் சப்பி ஆறுதல் சொல்வார் .
பதவி பரித்தபின் நீர் செய்த தில்லுமுல்லுகள் படம் எடுத்து ஆடுமே,துணிந்து செய்தீர் அதே துணிவோடு எதிர் கொள்வதே சிறப்பு.தலைமையை எதிர்ப்பது வுமக்கும் எமக்கும்கூட பிடிக்காது.
வாழ்;க நாராயண நாமம்.